திங்கள், 2 அக்டோபர், 2017

பிக் பாஸ் கொண்டாட்டத்தைப் புறக்கணித்த நமீதா... பாதி தான் உண்மை


பிக் பாஸ்: கொண்டாட்டத்தைப் புறக்கணித்த நமீதா
மின்னம்பலம் : 100 நாள்கள் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் (செப் 30), பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாள் கொண்டாட்டத்தில் நமீதா கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.
உடுமலைப்பேட்டையில் நேற்று (அக்டோபர் 1) ‘ஃபென்ட்டாஸ்டிக் மொபைல் ஷாப்’ நிறுவனத்தின் தொடக்க விழாவில் நமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு நமீதா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால், கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நமீதாவை நேரில் பார்க்க நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பாதி உண்மை’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை எழுதிப் பதிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கடிதத்தில் நமீதா, “நீ காலையில் சிரிப்போடு எழுவாய். ஆனால், உன்னை ஒரு பெண் தூண்டிவிட்டு ஆத்திரத்தை வரவழைப்பாள். சற்றே ஆசுவாசப்படுத்திக்கொண்டு அந்த நாளைத் தொடங்கலாம் என்று போவாய். அதே பெண் மீண்டும் அடிப்பாள். ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாகச் சுருக்க முடியும். ஆனால் அப்படிச் சுருக்கும்போது அதன் உண்மைகள் மாறும். இதில் பாதி தான் உண்மை” என்று பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஓவியா, கஞ்சா கருப்பு, பரணி உள்ளிட்டவர்களுக்கு சினிமாவில் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ள நிலையில் நமீதாவுக்குப் பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: