சென்னை: எனக்கு எந்த பதவியும் வேண்டாம், அதிமுகவை விட்டு விலகுகிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் பன்னீர்செல்வம் இன்று திடீரென இரவு சென்னை மெரினாவிலுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து வருகிறார்.முதல்வர் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென முதல்வர் பதவியை தியாகம் செய்ய, சசிகலா பணித்தார். இதனால் அதிருப்தியில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்நிலையில், சசிகலாவுக்கு ஓபிஎஸ் இன்று திடீர் கடிதம் அனுப்பினாராம். அதில் எனக்கு எந்த பதவியும், வேண்டாம், நான் அதிமுகவைவிட்டு விலகுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தாராம். இதை பார்த்ததும், போயஸ் கார்டன் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இவ்வாறு அதிமுக வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன<
சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர்
ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி
செலுத்தினார்.
முன்னதாக,
தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்பதற்கு ஆதரவாக தனது முதல்வர் பதவியை
பன்னீர் செல்வம் ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் கொடுத்து இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது மாலைமலர்
சென்னை:
தமிழக
முதலமைச்சராக சசிகலா நாளை அல்லது நாளை மறுநாள் பதவியேற்க வாய்ப்புகள்
உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழக ஆளுநர் சென்னைக்கு இன்னும்
வரவில்லை என்பதால் பதவியேற்பு விழா தாமதமாகி வருகின்றது.
இந்நிலையில், மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மவுன அஞ்சலி செலுத்தினார்.
சுமார்
10 நிமிடங்களுக்கு மேலாக பன்னீர் செல்வம் ஒரு தியானம் செய்வதை போல் தனது
மவுன அஞ்சலியை செலுத்தினார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்கள்
தூவப்பட்டிருந்தது.
போயஸ் கார்னடில் சசிகலா உடன் இன்று அமைச்சர்கள் சிலர் ஆலோசனை நடத்தினர். அதில் பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக