செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

மணவை முஸ்தாபா காலமானார் ! 82 வயது .. 31 நூல்களை எழுதிய தமிழறிஞர் ..

தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்ற அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 82.; அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர் தமிழறிஞர் மணவை முஸ்தபா.  அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மணவை முஸ்தபா சென்னையில் இன்று காலமானார். இதனையடுத்து சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் கட்சியினர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட சுமார் 40க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள அறிஞர் முஸ்தபா, சுமார் 8 லட்சம் அறிவியல் தமிழ் கலைச் சொற்களை உருவாக்கியுள்ளார்.


31 நூல்களை எழுதியுள்ள மணவை முஸ்தபா, 7 நூல்களை ஆங்கிலத்தில் இருந்தும், 3 நூல்களை மலையாளத்தில் இருந்தும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். யுனெஸ்கோ கூரியர் இதழ் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 35 ஆண்டுகாலம் பணியாற்றினார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா களஞ்சியம் தமிழ்ப் பதிப்பின் பொறுப்பாசிரியராகத் திகழ்ந்து சிறப்பாக வெளிகொணர்ந்தார். எம்.ஜி.ஆர்., மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகிய மூன்று முதல்வர்களால் 5 விருதுகள் அளிக்கப்பெற்று பாராட்டப்பட்ட ஒரே தமிழறிஞர் மணவை முஸ்தபா என்பது குறிப்பிடத்தக்கது  .. நியுஸ் 7

கருத்துகள் இல்லை: