செவ்வாய், 7 அக்டோபர், 2014

தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்கள் உயிருக்கு ஆபத்து ? அமைச்சர் வளர்மதி ஜெயாவுக்கு வைக்கும் ஆப்பு ?

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த 27ம் தேதி முதல் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் கன்னடர்களை சிறைபிடிப்போம் என அதிமுக சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.எம். ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.இந்த ஒரு போஸ்டர் அதுவும் அமைச்சர் வளர்மதியின் பெயரில் வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல . இது ஒன்றே போதும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யலாம், உண்மையில் வளர்மதிக்கு ஜெயலலிதா மீது அப்படி என்ன வஞ்சமோ. அவர் கர்நாடக ஜெயிலில் இருக்கும்போது அவருக்கு எதிராகவே திரும்பி விடக்கூடிய ஒரு இன துவேஷத்தை வளர்மதி கிளப்பி உள்ளார், விக்கி விக்கி அழுவப்பவே நினச்சேன் ஏதோவொரு உள்குத்து இருக்கும்னு !

கருத்துகள் இல்லை: