சனி, 11 அக்டோபர், 2014

தேர்தல் பணியில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் அங்கீகாரம் ரத்தாகும் !

தேர்தல் பிரசாரத்திற்கோ அல்லது தேர்தல் தொடர்பான பணிகளுக்கோ, சிறுவர்களை, அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தினால், அந்தக் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மும்பை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அரசியல் கட்சிகளின் பதிவை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ய முடியாது. ஆனால், சட்டவிதிகளை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை, தேர்தல் ஆணையம் முடக்க முடியும்; கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும்.
எனவே, தேர்தல் பிரசாரத்திற்கோ அல்லது தேர்தல் தொடர்பான பணிகளுக்கோ, சிறுவர்களை, அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தினால், அந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.'தேர்தல் பணிகளுக்கு, சிறுவர்களை பயன்படுத்தக் கூடாது; அதை மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, 2013 மே மாதமும்; 2014 செப்டம்பரிலும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள், தேர்தல் பணிகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, அடுத்த விசாரணையின் போது தெரிவிக்கப்படும்.இவ்வாறு, தேர்தல் ஆணையம் தெரிவித் துள்ளது. dinamalar.com

கருத்துகள் இல்லை: