மின்னம்பலம் - Kavi : பாகிஸ்தானியர்கள் யாரும் நம் நாட்டில் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். Amit Shah spoke to state chief ministers
கடந்த 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் வரை உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அமைப்பான தி ரெசிடண்ட் ப்ரண்ட் பொறுப்பேற்றிருக்கிறது.
இந்தநிலையில் பாகிஸ்தான் மீது இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் சிந்து நதி நீரை நிறுத்தியது. இதற்கு பதிலடியாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்தது.
பாகிஸ்தானியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றிவரும் நிலையில், பாகிஸ்தானும் இந்தியர்களை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. Amit Shah spoke to state chief ministers
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமது வார்ரைச்சுக்கு இந்தியா சம்மன் அனுப்பிய நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்சவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியது.
இப்படி இரு நாடுகளும் மாறி மாறி தடை உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில முதல்வர்களையும் இன்று (ஏப்ரல் 25) தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.
அப்போது, தங்கள் மாநிலத்தில் இருக்கும் பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தங்கள் பகுதிகளில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். Amit Shah spoke to state chief ministers
பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருக்க 27ஆம் தேதி வரைதான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் மருத்துவ விசாவில் இருப்பவர்கள் 29ஆம் தேதி வரை இருக்கலாம். அதன்பிறகு பாகிஸ்தானியர்கள் இங்கே இருக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
எனவே இந்த தேதிக்குள் பாகிஸ்தானியர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை வியாபாரம் மற்றும் மருத்துவ ரீதியாக 500 பாகிஸ்தானியர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களை இரு தினங்களில் வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக