Vimalaadhithan Mani : நான் பெரிதும் மதித்து போற்றும் அண்ணன் PTR பழனிவேல் தியாகராஜனை எனக்கு ஏன் ரொம்ப பிடிக்கும் தெரியுமா ?
யார் இந்த PTR பழனிவேல் தியாகராஜன் ??
PT.இராசன் - அவங்க தாத்தா நீதி கட்சியின் தலைவர், முன்னாள் சென்னை மாகாண முதல்வர்.
PTR பழனிவேல் ராஜன் - அவங்க அப்பா, தமிழக சட்டமன்ற சபாநாயகர், இந்து அறநிலையத்துறை அமைச்சர்.
PTR.பழனிவேல் தியாகராஜன் - உலகின் பல நிதி நிறுவனங்களில் பெரும் பொறுப்பு வகித்த புத்திசாலி மற்றும் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்,இன்று தமிழக ஐடி துறை அமைச்சர் (முன்னாள் நிதித்துறை அமைச்சர்).
இதுவரை PTR.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சுமார் 60 நாடுகளுக்கு பணி நிமித்தமாக பயணம் செய்துள்ளார் .
திரு. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கல்வி தகுதி மற்றும் அனுபவம் :
- B. Tech @ National Institute of Technology (Formerly known as Regional Engineering College ), Tiruchirappalli
- M.S (Operations Research) @ University of Buffalo, USA
- PhD (Human factors engineering & Engineering psychology) @ University of Buffalo, USA
- MBA (Financial Management) @ MIT Sloan School of Management, USA
- Worked as Head Of Offshore Capital Markets in Lehman Brothers, USA
- Worked as Senior MD with Standard Chartered Bank, Singapore
பெரியவீட்டுப் பிள்ளை, சென்னை மாகாணத்தை கட்டியாண்ட சர் PT ராஜன் அவர்களின் பேரன். காலம் சென்ற தமிழக முன்னாள் அறநிலைய துறை மந்திரியாகவும் சபாநாயகராகவும் இருந்த பெரும் புகழுக்கு சொந்தக்காரரான பழனிவேல் ராஜன் அவர்களின் ஒரே மகன். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க மூலவர் சிலையை தானமாக கொடுத்த வள்ளலின் பேரன்.
பார்ப்பனர் அல்லாத மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஒரே அறங்காவலர். தேசிய தொழில் நுட்ப கல்லூரியில் (Regional Engineering College, Trichy) என்ஜினீயரிங் படித்து முடித்து, அமெரிக்காவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் படித்த பெருமைக்கு உரியவர்தான் இந்த பி.டி.ஆர்.
எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. பல கோடி மதிப்புள்ள பரம்பரைச் சொத்து.1975ல் திமுகவினரை தேடி தேடி கைது செய்த காவல்துறை மதுரையில் பழனிவேல் ராஜன் வீட்டு பக்கத்தில் கூட செல்லவில்லை .
ஏழையின் அன்ன வஸ்திரத்திற்கு அட்சதை போடும் பரம்பரையின் வாரிசு. அரசியலுக்கு வரும். முன் சிங்கப்பூரில் Standard Chartered வங்கியில் MDயாக பணியாற்றிய பெருமைக்குரியவர் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன். கலைஞரின் சொல் கேட்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றியை பதிவு செய்த PTR பழனிவேல் தியாகராஜனின் நடவடிக்கையின் மூலம் இன்றைய தமிழகத்தின் வருவாய் சுமார் 40,000 கோடியாக உள்ளது. மிகச் சிறந்த பொருளாதார வல்லுநர்.
ஆளும் ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகளை அறிவார்ந்த முறையில் கொஞ்சமும் பயபடாமல் கேள்வி கேட்கும் அறிவாளி. பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு துளியளவு ஐயமில்லாமல் பதிலடி கொடுக்கிறார்.
என்னை பொறுத்தவரை அண்ணன் PTR பழனிவேல் தியாகராஜன் ஒரு மெத்த படித்த, மிகவும் அறிவார்ந்த சிந்தனைகளுடைய நவீன யுக அரசியல்வாதி. இரண்டு முறையும் ஒரு பைசா கொடுக்காமல் ஜெயித்து மதுரை மக்களிடையே அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் இருக்கும் அபிமானத்தை நிரூபித்தவர்.
கரை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர். இன்று அரசியல் சூழ்நிலை வெகுவாக மாறி வரும் நிலையில் திமுகவில் 30, 40 வருடங்களாக கட்சிக்குள் அதிகாரத்தில் கோலோச்சி வரும் பல அமைச்சர்களால் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் சிந்தனை, செயல்திறனுக்கு ஈடுகொடுத்து பணியாற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை.
அதுவே அவர் மீது நிறைய அமைச்சர்களுக்கு அதிருப்தி வர காரணம்.
PTR பழனிவேல் தியாகராஜன் எப்போது பார்த்தாலும் குடும்ப பெருமை பேசுகிறார் என்று நிறைய பேர் அவரை குறை கூறுகிறார்கள்.
அவர் குடும்ப பெருமை பேசுவதால் உங்களுக்கு என்ன பிரச்சினை ?.
பழனிவேல் தியாகராஜன் போன்ற பாரம்பரிய பின்புலம் இல்லை என்ற அவர்களுடைய ஈகோதான் அவர்களை இப்படி பேச வைக்கிறது. நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான சர் பிடி தியாகராசர், முன்னாள் சபாநாயகர் மற்றும் இந்து அறங்காவல்துறை அமைச்சர் பழனிவேல் ராஜன் போன்று மக்களாலும், சம கால அரசியல் தலைவர்களாலும், திமுக தலைமையாலும் போற்றி கொண்டாடப்பட்ட மிக பெரும் அரசியல் ஆளுமைகளின் குடும்பத்தில் பிறந்து இருந்தால் நீங்களும் உங்கள் குடும்பப் பெருமையை பேசத்தான் செய்வீர்கள்.
எஸ்தர் டப்லோ, ஜான் ட்ரீஸ், ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் போன்ற உலகப்புகழ் பெற்ற பொருளாதார நிபுணர்களை உடன் வைத்து கொண்டு அவர்களின் ஆலோசனைகளின் படி தமிழ்நாட்டின் நிதி அமைச்சகத்தை நடத்திய ஒரு சாகசக்காரர் அண்ணன் PTR பழனிவேல் தியாகராஜன்.
இப்படி ஒரு சிந்தனை, மேதாவிலாசம் மத்திய அரசின் நிதி அமைச்சகத்துக்கு கூட கிடையாதது என்பதுதான் இங்கு சிறப்பு.
தனது விமர்சனத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும் போலியான மரியாதை சொற்களை பி.டி.ஆர் தவிர்க்கிறார். ‘மரியாதைக்குரிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே’ போன்ற கடந்த காலத்திய விக்டோரியன் மதிப்பீடுகளை அவரது விமர்சனத்தில் தேட முடியாது.
அரசியலை பொருளாதாரவாதமாகவும், பொருளாதாரத்தை அரசியலாகவும் அணுகும் புது சிந்தனையை அவரது விமர்சனம் கொண்டிருக்கிறது. இவருடைய இந்த ஸ்டைல் அரசியல் விமர்சன மரபில் ஒரு புதுச் சிந்தனைத் தளத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.
PTR பழனிவேல் தியாகராஜன் மாதிரி காசு வாங்காத, படித்த, யாருக்கும் கூஜா தூக்க அவசியம் இல்லாத, நேர்மையான, படித்த அரசியல்வாதி
நேர்மையில்லாதவர்களை பார்த்து கேள்வி கேட்கத்தான் செய்வான், திமிரா பேசத்தான் செய்வான் என்பதை PTR பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக மல்லுக்கு நிற்கும் அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
பி.டி.ஆரை கண்டு ஏன் சங்கிகள் பதறுகிறார்கள்?
பொய் புரளி, வெத்து பெருமை, வாய் ஜாலத்தை வைத்து மட்டுமே அதிமேதாவித்தனமாக பேசுவதாக நினைக்கும் சங்கி ஆதரவு ஊடகவியளாலர்களை "புல்டோசர் அடியில் சிக்கிய எலுமிச்சம்பழம்" போல நசுக்கி வீசுகிறார் PTR.
இலவசங்களை கொடுத்து மக்களை கெடுப்பதாக தமிழ்நாடு அரசை குற்றம் சொல்லிய பிரதம மந்திரி மோடி அவர்களை பிரதமர் என்று கூட பார்க்காமல் "படிப்போ, அறிவோ, அனுபவமோ, செயல்பாடு தகுதியோ எதுவுமே இல்லாத நீங்க சொல்றத நாங்க ஏன் கேக்கனும்? " என பயமின்றி கேள்வி கேட்கிறார். ஒரு மெத்த படித்த நேர்மையான அரசியல்வாதியால் மட்டுமே சர்வ வல்லமை படைத்த நாட்டின் பிரதமரை பார்த்து கொஞ்சமும் பயமின்றி இப்படி எதிர்கேள்வி கேட்க முடியும்.
அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சர் ஆனதிலிருந்து மிகவும் பொறுப்போடு அவர் துறை சார்ந்த கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் வெள்ளையறிக்கை தொடங்கி, பட்ஜட் மாணியக் கோரிக்கை வரை பதில் மட்டும் அல்ல பாடமாகவே நடத்தினார். அது தான் அவர் வகித்த நிதியமைச்சர் பதவிக்கான பொறுப்பு. நியாயமான கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் செயலால் பதிலளிக்கவும் பி.டி.ஆர் க்குத் தெரியும், அண்ணாமலை போன்ற பச்சைப் பொய் பேசும் சங்கிகள் பரப்பும் பொய் பரப்புரையை அவர்களுக்கு புரியும்படி பதிலளித்து அடித்து நொறுக்கவும் தெரியும்.
பிடிஆரின் மெத்த படித்தவர் என்ற பின்னணியை வைத்து அவர் ஒயிட் காலர் சொல்லாடலுக்கு கீழாக இறங்கி, தான் பேசவிருக்கும் விசயங்களின் நிலமையின் தீவிரத்தை விளக்க அஞ்சுவார் என்ற நிலையில் "யார் வீட்டு அப்பன் பணத்திலயும்" என்று ஒரு காமன் மேனுடைய தரை லெவல் லோக்கல் பேச்சு வழக்கில் அரசியல் வகுப்பு எடுக்கிறார். இது அவரை எதிர்ப்பவர்கள் எதிர்பாராதது.எந்த சாமானியர்/பொதுமக்களிடமும் அவர் தவறாக பேசியது கிடையாது.
அண்ணன் PTR அவர்களின் ஆளுமை, அறிவு, செயல்திறன், நேர்மை கண்டு காண்டான கட்சி பிரமுகர்களின் அழுத்தத்தால் நிதி துறையை விட்டு மாற்றப்பட்டாலும் அண்ணன் PTR மிகச்சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு பொருளாதாரத்தை மீட்கவும் தெரியும், புரளி கிளப்புவர்களை தும்சம் செய்யவும் தெரியும்.
இத்தனை வருட திராவிட இயக்க பாரம்பரியத்தில் வந்த ஒரு திராவிட இயக்க வாரிசு எப்படிப்பட்ட ஒரு மரபை தொடர வேண்டும் என்பதற்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அண்ணன் PTR பழனிவேல் தியாகராஜன் அவர்கள்!
நேர்மையும் அறமும் கொண்ட செயல்திறன் மிக்க திறமையாளர்களால், நல்லவர்களால் இப்போதைய ஆதாய அரசியல்வாதிகளை சமாளிக்க தெரியாது, சமாளிக்க முடியாது என்பதற்கு நல்ல உதாரணம் அண்ணன் பிடிஆர்.
இன்று எதிரிகள் அவரின் மீது செருப்புகளை வீசலாம்.
வீசியவர்களுக்குச் சொல்கிறேன்,குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்திய துணைக்கண்டம் முழுக்க ஒருநாள் இவர் மீது பூக்களை தூவுவார்கள்.அந்த நாள் விரைவில் வரும்.
1 கருத்து:
திமுக நல்ல செயல்கள் பல செய்கிறது என்பது உண்மையே
ஜெயலலிதா வெள்ளையா இருக்காங்க ராஜிவ் காந்தி வெள்ளையா இருக்காருன்னு
ஓட்டு போட்டது ஒரு காலம்
ஆனால் இது திருமா காலம்
விசிக இருக்கும் கூட்டணி வெல்லும்
கருத்துரையிடுக