ஞாயிறு, 23 ஜூலை, 2023

ஹரியானாவில் காங்கிரஸ் அறுதிபெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது! பாஜகவின் 10 ஆண்டு ஆட்சி முடிவு? தேர்தல் ஆய்வுகள்

tamil.oneindia.com  -  Nantha Kumar R  : சண்டிகர்: ஹரியானவில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் வரும் ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக பெரிய அளவில் சரியும் எனவும் பரபரப்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார். இங்கு மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
Haryana Election 2024: Congress may gets majority and BJP will lost its power says Small Box India Opinion poll
இந்நிலையில் தான் கடந்த 2019 ல் நடந்த சட்டசபை தேர்தலின்போது எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ஜேஜேபி கட்சி 10 தொகுதிகளிலும், ஐஎன்எல்டி, எச்எல்பி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும், சுயேச்சைகள் 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து ஹரியானாவில் பாஜக ஆட்சியை பிடித்தது. ஜேஜேபி கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. முதல்வராக பாஜகவின் மனோகர் லால் கட்டார் பொறுப்பேற்றார். இவர் துணை முதல்வராக ஜேஜேபி கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலாவும் பதவியேற்றனர். இதன்மூலம் தற்போது ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அக்டோபர் மாதத்தில் ஹரியானாவில் தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஹரியானா சட்டசபை தேர்தல் குறித்து ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' எனும் அமைப்பு கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.

இந்த ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பு குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் எனவும், இமாச்சல பிரதேசம், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனவும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம்ஆத்மி வெல்லும் எனவும் கணித்து கூறி இருந்தது. இந்த கணிப்புகள் அப்படியே பலித்த நிலையில் தான் ஹரியானா சட்டசபை தேர்தல் குறித்த கணிப்பும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தான் ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியை இழக்கும் எனவும், காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ள நிலையில் பாஜகவினர் ஷாக்காகி உள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ள இந்த கருத்து கணிப்பின்படி ஹரியானாவில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் அதனை விட கூடுதல் இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்தனை நாளா எங்கே போனீங்க! பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் ஓங்கியறைந்து கேட்ட பெண்! பரபர ஹரியானா இத்தனை நாளா எங்கே போனீங்க! பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் ஓங்கியறைந்து கேட்ட பெண்! பரபர ஹரியானா

மேலும் தற்போது ஆட்சியில் உள்ள பாஜக அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜக கூட்டணியில் உள்ள ஜேஜேபி கட்சி 6 தொகுதிகளிலும், ஐஎன்எல்டி கட்சி 2 இடங்களிலும், மற்றவர்கள் 3 இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 39 சதவீத ஓட்டுகளை பெறும் எனவும் பாஜக 33 சதவீத ஓட்டும், ஜேஜேபி கட்சி 11 சதவீத ஓட்டும், ஐஎன்எல்டி கட்சி 10 சதவீத ஓட்டும், மற்றவர்கள் 7 சதவீத ஓட்டுகளையும் பெறுவார்கள் என ‛ஸ்மால் பாக்ஸ் இந்தியா' கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு பலிக்கும் பட்சத்தில் ஹரியானாவில் பாஜகவின் 10 ஆண்டு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

ஏனென்றால் கடந்த 2014 முதல் ஹரியானாவில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது. அன்று முதல் மனோகர் லால் கட்டார் முதல்வராக செயல்பட்டு வருகிறார். வரும் தேர்தலில் தற்போதைய கருத்து கணிப்பின்படி முடிவுகள் அமைந்தால் 10 ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்வராக ஒருவர் பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: