சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வாகி உள்ள சசிகலா நாளை (செவ்வாய் கிழமை) தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சென்னை பல்கலை.,யில் நடைபெற இருந்த பதவியேற்பு விழா நாளை நடைபெறாது என தெரிகிறது.
சசிகலா முதல்வராக பதவி ஏற்றால் தமிழகத்தில் ஸ்திரமான ஆட்சி நீடிக்குமா என கவர்னர் வித்யாசாகர் ராவ் டில்லியில் அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதோடு மட்டும் அல்லாது அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்றவர். கர்நாடக மாநில உயர் நீதி மன்றம் அவரை உள்ளிட்ட அனைவரையும் குற்றமற்றவர் என்று கூறியது. இந்த வழக்கை கர்நாடக மாநில அரசு உச்ச நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றது. வழக்கின் தீர்ப்பு 7 நாட்களில் வெளிவர உள்ளது.
இந்த நிலையில் முதல்வராக வேண்டும் என்று பணம் கொடுத்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கினார் சசிகலா என்றும், படியாத எம்எல்ஏக்களை துப்பாக்கி வைத்து மிரட்டி கையெழுத்து வாங்கப்பட்டதாகவும் கூறிவருகின்றனா். ஜெயலலிதாவை இவர்தான் கொலை செய்தார் என்று சிலா் கூறிவரும் நிலையில் ஜெயலலிதா இறப்பு குறித்து சிபிஐயும் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் கவர்னர் அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசனை நடத்தி வருவது, சசிக்கு முதல்வர் பதவி என்பது வெறும் கனவாகவே போய்விடும் நிலையை உருவாக்கப்படுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இவ்வாறு டெல்லி வட்டார தகவல்கள் தெரிவின்கின்றன. லைவ்டே
தினமலர் : சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் விரும்பவில்லை. இதனால், நாளை (செவ்வாய் கிழமை) நடைபெறுவதாக இருந்த பதவி ஏற்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை பல்கலைகழக வளாகத்தில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வாகி உள்ள சசிகலா நாளை (செவ்வாய் கிழமை) தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
சென்னை பல்கலை.,யில் நடைபெற இருந்த பதவியேற்பு விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைப்புகான காரணம்: சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாக உள்ளது. இந்நிலையில், சசிகலாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், டில்லியில் உள்ள அவர் சுப்ரீம் கோர்ட் அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட சட்ட வல்லுநர்களுடன் வழக்கு தீர்ப்பு குறித்து ஆலோசித்தார். அதில், தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராகவே வரும். அவர் மீண்டும் சிறை செல்வதற்கு வாய்ப்பு உள்ளது என தெரிய வந்தது. இந்நிலையில், சசிகலா முதல்வரானால் தமிழகத்தில் ஸ்திரமான ஆட்சி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கவர்னருக்கு தெரியவந்தது. இதனால், நாளை(செவ்வாய் கிழமை) பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவர்னர் சம்மதிக்கவில்லை. இதற்கிடையே, கவர்னர் வித்யாசாகர் ராவ் டில்லியிலிருந்து மும்பை சென்றுவிட்டார். ஊட்டியிலிருந்த அவரது குடும்பத்தினரும் மும்பை புறப்பட்டுவிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக