வியாழன், 5 மார்ச், 2026

ஈரானை தாக்க இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா...

 tamil.oneindia.com - Halley Karthik  :  டெல்லி: ஈரான் கப்பல் மீது, இன்று அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, இந்தியாவின் துறைமுகத்தை பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்கக் கடற்படை இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா அனுமதித்ததாக வெளியான தகவல்களை, இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகர், தீவிர வலதுசாரி ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க் (OAN) தொலைக்காட்சியில் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.



இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “அமெரிக்காவைச் சேர்ந்த OAN தொலைக்காட்சியில், அமெரிக்க கடற்படை இந்திய துறைமுகங்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் கூற்றுக்கள் போலியானவை மற்றும் தவறானவை. இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்” என்று தெளிவுபடுத்தியது.

இந்தியாவால் நடத்தப்பட்ட ராணுவப் பயிற்சியிலிருந்து வெளியேறிய ஒரு ஈரானிய போர்க்கப்பல் மீது இலங்கைக் கடற்பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் குறித்த ஆய்வுக்கு மத்தியில், இந்தியாவின் இந்தக் கண்டனம் வெளியான

கருத்துகள் இல்லை: