திங்கள், 23 ஜனவரி, 2017

மெரீனாவில் மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் இரத்தக்கண்ணீருடன் துரத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று அதிகாலை மெரினாவில் ... மாணவர்களின் மெரினா புரட்சி
ஜனநாயகம் மனிதநேயம் படுகொலை செய்ய பட்டுவிட்டது. மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் இரத்தக்கண்ணீருடன் இதயம் வெந்து துரத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். கடவுள் பாவம் புண்ணியம் என்பது சும்மா அதுவெல்லாம் இருந்தால் மக்கள் கண்ணீருக்கு பதில் சொல்லட்டும்.
மெரினாவில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற்றம் - பதற்றம் மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி கடந்த 17ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடங்கிய போராட்டம் 6 நாட்கள் கடந்து 23ஆம் தேதி 7 வது நாளாக தொடர்ந்தது.போராட்டகார்களிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.

இதை தொடரந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக ஜனாதிபதி மற்றும் தமிழக அளுநர் அனுமதியுடன் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. 23ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி மெரினாவில் ஒரு காவல்துறை அதிகாரியையும் பார்க்க முடிய வில்லை. சரியாக விடியற்காலை 3.50 முதல் விவேகானந்தர் இல்லத்தில் காவல்துறை அதிகாரிகள் குவியத்த தொடங்கினார்கள்.


போராட்டக்கார்கள் சென்னை காவல்துறை சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைதியான முறையில் கலைந்து சொல்லும் படி அறிவிப்பு வெளியீடப்பட்டது. இதனை முன்னரே தெரிந்து கொண்ட போராட்டக்கார்கள் தாங்கள் பேசியிருந்த மைக் மூலமாகவே காவல்துறையினர் குவிக்கப்படடது குறித்தும் எது நடந்தாலும் கலையாமல் இருக்கும் படி கூறினார்கள். இதை தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சங்கர்,மனோகரன்,பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போராட்டகாரர்களை கலையும் படி கூறினார்கள்.

 இதை தொடர்ந்து தங்களின் கோரிக்கை வெற்றி அடைந்திருக்கிறது. இந்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கிறோம் என்றும் எங்களின் கோரிக்கையை முதல்வரை சந்தித்து கொடுக்க இருப்பதாகவும் கூறினார்கள். இதை தொடர்ந்து மயிலாப்பூர் காவல்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் போராட்டகார்கள் மத்தியில் அவசர சட்டம் குறித்து விளக்கி பேசினார்.

போராட்ட கார்களும் அவசர சட்டம் குறித்தான தன்மை குறித்து அவர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் கொண்டு ஆராயப்பட்டு சொல்வதாக கால அவகாசம் கேட்டார்கள்.
அதனை ஏற்க மறுத்த அவர்கள் வலுக்கட்டாயமாக போராட்டகார்களை அப்புறப்படுத்த தொடங்கினார். சிலரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றார்கள் இதையடுத்து சிலர் கடலை நோக்கி ஒடினார்கள். சிலர் தேசிய கீதம் பாடியபடியே நின்றார்கள். போலீசார் தொடர்ந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. - சி.ஜீவா பாரதி  நக்கீரன்

கருத்துகள் இல்லை: