வியாழன், 23 டிசம்பர், 2021

சீமான் கட்சியை (NTK) ஏன் தடைசெய்யவேண்டும்?

 செல்லபுரம் வள்ளியம்மை : சீமானின் கட்சியை ,
ஜனநாயக கட்சிகளும் அரசுகளும்  ஏன் இன்னும் தடை செய்யவில்லை?
இந்த  கேள்வி பல வருடங்களாகவே எனக்குள் இருந்து வருகிறது
ஜனநாயக நாட்டில் அனுமதிக்கவே கூடாத பாசிச கருத்துக்கள் கோட்பாடுகளை கொண்டிருக்கிறது சீமான் கட்சி
அப்பாவி மக்கள் மத்தியில்  குறிப்பாக சிறுவர்கள் மனதில்  பாசிசத்தை விதைத்து வருகிறது
ஒரு படுமோசமான சர்வாதிகார அரசியலின் முகவுரையாகவே சீமானின் அரசியல்  உள்ளது.
வெறுமனே உதறி தள்ளிவிடக்கூடிய உதிரிதானே என்று அமைதியாக கடந்து போவது நிச்சயம் ஒரு வரலாற்று தவறுதான் என்று தோன்றுகிறது
சீமான் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருவார் ..
அல்லது ஆட்சிகளை அமைப்பதற்கு ஏதோவொரு வழியில் வெற்றிகளை பெறுவார் என்பதல்ல எனது கவலை.
வாக்கரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் விதைத்துவரும் நச்சு விதைகளின் தாக்கம் எதிர்காலத்தை ஒரு இருளுக்குள் தள்ளிவிடும் அளவுக்கு தீமையானதாகதான் தெரிகிறது
தீய சக்திகளுக்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல ஒரு வனத்தை கொழுத்த ஒற்றை தீக்குச்சி போதும் என்பதை போல அது ஒரு கிரிமினல் கூட்டம்
தீக்குச்சி விளையாட்டை வேடிக்கை பார்த்தால் விளைவுகள் திருத்த முடியாமல் போகலாம்.
திமுக தோழர் செங்கண்ணனின் செய்கையை ஒரு வரம்பு மீறிய செயல் என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டு போகலாம்.
ஆனால் அது அவ்வளவு சுலபம் அல்ல
வெறுமனே அந்த மேடையில் மட்டும் ஒருவர் பேசினார் அதை பொறுக்காமல் செங்கண்ணன் அடித்தார் என்பதல்ல.
சீமான் கூட்டத்தின் நீண்ட வரலாற்றை பார்க்கும் எந்த ஜனநாயகவாதிக்கும் ஏற்படும் அறச்சீற்றம்தான் தோழர் செங்கண்ணனுக்கு ஏற்பட்டிருக்கிறது
திமுக தோழர் செங்கண்ணனுக்கு வந்த அறச்சீற்றம்   ஏன் வேறு அரசியல்வாதிகளுக்கு வரவில்லை என்பதுதான் கேள்வியே.
அறச்சீற்றம் வருவோர் எல்லாம் மேடையில் ஏறிநின்று தடுக்க வேண்டும் என்பதல்ல
ஆனால் சீமான் குழுவை தடை செய்வதற்கு முயன்றிருக்கலாம்தானே?
ஏன் இன்னும் முயலவில்லை?
தோழர் செங்கண்ணனுக்கு வாழ்த்துக்கள்

கருத்துகள் இல்லை: