செவ்வாய், 19 மே, 2020

6 மீட்டர் தூரத்தை 3 மீட்டர் தூரமாக கணக்கு காட்டி உலகை ஏமாற்றும் இந்திய அரசு

பார்வையற்றவன் 6 மீட்டர் தூரத்திற்குள் பொருட்களின் அசைவுகளை பார்க்க முடிந்தவர்களையே பார்வையற்றவர்கள் என உலக சுகாதார நிறுவனம் வரையறுத்தது. அந்த அளவுகோலை வைத்து தான் பார்வையற்றவர்களை இந்தியாவில் அடையாளம் கண்டு கொண்டிருந்தனர். திடீரென இந்திய அரசு அதை மூன்று மீட்டர் தூரமாக அளவில் மாற்றம் செய்தது. அதன் பிறகு கொஞ்ச நாள் கழித்து, "இந்தியாவில் பார்வையற்றவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது, இது இந்திய மருத்துவத் துறைக்கு கிடைத்த வெற்றி" என்று செய்திகள் வெளியாயின. அச்செய்தியைப் பார்த்ததும் அரண்டு விட்டேன்.
அதே போங்காட்டத்தை தான், கொரோனா எண்ணிக்கையை தெரிவிப்பதிலும் ஆடுகின்றனர்.
உலக நாடுகளெ பாதிப்பை குறைப்பதற்கான வழி என்ன என தேடிக் கொண்டிருக்கையில்? இங்கே பரிசோதனையை குறைத்தே பாதிப்பை குறைத்து விட்டனர்.

கருத்துகள் இல்லை: