Muralidharan Pb : நாடு நாசமாய் போனது இந்த பத்தாண்டுகளில் என்பது ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளின் வாயிலாக அறிய முடிகிறது.
மின்சார வாரியம் வாங்கிய நிலக்கரி லட்சக்கணக்கான டண் மாயமாய் காணாமல் போனது நாம் அண்மையில் அறிந்ததே.
கேடுகெட்ட மின்சாரத் துறை அமைச்சர் பி தங்கமணி அவர்கள், எதை வெட்டி முறித்தார் எனத் தெரியவில்லை, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒன்றிய அரசிடம் நிலக்கரி பற்றாக்குறையாக உள்ளது பற்றி முறையிட்டாராம். பிறகு துறையில் கவனம் செலுத்தவில்லையாம்!!. பெருந்தொற்று மற்றும் கட்சிப் பணிகள் அதிகமாக இருந்ததாம், அதனால் ஆய்வு செய்ய போகவில்லையாம். அதாவது ஏப்ரல் மாதம் தேர்தலுக்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே களப்பணியில் ஈடுபட்டாராம் கோல்ட்மணி. அதனால் விவரம் தெரியாதாம். 'அப்பாவி'
ஒருத்தர் என்னடான்னா ஒன்றரை டண் பால்கவோ தின்னாராம், இவர் நிலக்கரிக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இல்லையாம். என்னங்கய்யா கலர் கலரா ரீல் விடறீங்க?
விஷயம் இதுதான். தரமானதாக ஆர்டர் செய்துவிட்டு, தரமற்ற நிலக்கரி வாங்கப்பட்டது உதாரணமாக கிலோ 140 ரூபாய்க்கு வாங்க ஆர்டர் தந்து, கிலோ 120 மதிப்புள்ள பொருளை மெய்யாக நிலக்கரி ரூபாய்க்கு வாங்கி ஊழல் செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் கூறுகிறது.
ஒரு மெகாவாட் மின் உற்பத்திக்கான அளவு இத்தனை டண் என ஒரு விகதம் உள்ளது. ஆனால் தரமற்ற கரியை இந்திய நிலக்கரி நிறுவனங்களிடம் வாங்கி, அதை நல்ல உயர்தரமானதாக காண்பித்து கிலோவுக்கு இத்தனை ரூபாய் பணம் பண்ணி இருக்கலாம் என்கிறது அறப்போர் இயக்கம். அதேவேளையில் கையிருப்பில் தேவைக்கு அதிகமாக கரி வாங்கிவிட்டு(தரமற்றதை) மின் உற்பத்தியை செய்து, அதை ஸ்டாக்கில் காண்பிக்காமலே இருந்திருக்கலாம் என்கிறது அறப்போர் இயக்கம்.
எவ்வளவு தில்லாலங்கடி வேலை செய்துள்ளது அதிமுக அரசு?
இதைத் தவிர வேறு சில விவரங்களும் உண்டு. தமிழ்நாட்டின் சராசரித் தேவை சுமார் 14351 மெகாவாட், கோடையில் 16846 மெகாவாட். மாற்றுவழி மின்சார உற்பத்திக்கான வழிகள் காற்றாலை மற்றும் சூரிய ஒளி. இருண்டுமே எல்லா நேரங்களிலும் கிடைக்காத போது, வெளியில் இருந்து வாங்கவேண்டிய தேவை உள்ளது. சுமாராக 2500 மெகாவாட் பற்றாக்குறை.
தமிழ்நாடு, மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்பதே பொய். உதாரணமாக 2014-2019 வரை ஏறத்தாழ 27000 மில்லியன் யூனிட்கள் நமக்கு குறைபாடாக உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது சிஏஜி அறிக்கை.
அடிக்கடி பழுதாகிப் போகும் அனல் மின்நிலையங்களால் மின்தடை அதிகரித்து வருகிறது. இந்த மாதிரி தரமற்ற கரியினை கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதே உண்மையான நிலவரம்.
இவ்வளவு சில்லாவளி வேலைகளை செய்துவிட்டு மின் பற்றாக்குறையை உண்டாக்கி, திமுக அரசு வந்தாலே மின்சார தடை இருக்கும் என பொதுப்புத்தியில் திணிக்கப்பட்ட கருத்தை உருவாக்கியுள்ளது தான் இந்த களவாணிகள் செய்த ஒரு பெரிய தந்திரம்.
நல்லவேளையாக திமுக அரசு 2011ல் மீண்டும் பதவிக்கு வரவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் எல்லாமே திமுக அரசு செய்தவை என பந்தை திமுக மீது போட்டுவிட்டு நழுவி இருப்பார்கள் திருடர்கள்.
அதே சமயத்தில் திமுகவை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு நன்றி, ஒருவேளை மீண்டும் அதிமுக ஆட்சிக்கு மூன்றாவது முறையாக வந்திருந்தால் இந்த விவரம் யாவுமே மூடி மறைத்திருக்கும் இந்த நிலக்கரியை திருடிய கும்பல்.
#AdmkFails
நன்றி: ஆங்கில இந்து நாளேடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக