செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

வெல்லமூட்டை / எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்ற குழு தலைவர் ... flashback..


அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த வி.கே.சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்லவிருப்பதால் அதிமுக-வின் புதிய சட்டமன்றத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கூவத்தூரில் நடைபெற்ற எம். எல். ஏக்கள் கூட்டத்தில் பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 அரசு கெஜட்டிலேயே இடைப்பாடி தான். ஆனால் தனக்கு மட்டும் எடப்பாடி என்பதை கெஜட்டிலேயே பதிவு செய்து விட்டார் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் பழனிச்சாமி. தற்போது அமைச்சரை காட்டிலும் எடப்பாடி தான் எல்லோருக்கும் பிரபலம். ஆளும்கட்சியின் நால்வர் அணியில் கூட அமைச்சரின் பெயருக்கு பதில் ஊர் பெயரை சொல்லி தான் அழைப்பது வழக்கமாம். எடப்பாடி பழனிச்சாமி பெயருக்கு முன் ஒரு பிளாஷ்பேக் கதையும் உண்டு. அரசியல் அரிச்சுவடி படித்த காலத்தில் இவருக்கு வெல்லமூட்டை பழனிச்சாமி என்ற பெயர் தான் பிரபலம்.


செங்கோட்டையனுக்கு செக்
அரசியலில் செங்கோட்டையன்தான் பழனிச்சாமியின் வளர்ச்சிக்கு ஏணியாக இருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அடுத்த அந்தஸ்தில் இருந்த செங்கோட்டையனை, அங்கு இருந்து தூக்கியடித்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது. செங்கோட்டையன் மீண்டும் தலையெடுத்தால் ஐவர் அணியில் தனக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என்பதால், செங்கோட்டையன் மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதிலும் உஷாராக இருக்கிறார். ஈரோட்டில் தோப்பு வெங்கடாசலம், சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி, நாமக்கல்லில் தங்கமணி இந்த மூவர் கூட்டணி நடத்தும் ‘’பவர் பாலிட்டிக்ஸில்’ பலர் காணாமல்போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று கட்சியினரே பேசி வருகின்றனர்.

சேலத்தில் நிழல் அமைச்சர்
எடப்பாடி பழனிச்சாமியை அமைச்சர் என்று சொல்லும் அதிமுகவினர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவரான இளங்கோவனை நிழல் அமைச்சர் என்று அழைக்கின்றனர். அமைச்சர் 5 காரோடு வலம் வந்தால், 10 காரில் அடிப்பொடிகள் புடைசூழ வலம் வருவது தான் இளங்கோவன் பாணி. அமைச்சர் அண்டர்வேல்டு ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவர் இளங்கோவன். அதனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

கிலோ கணக்கில் தங்கம்
ஈரோட்டை சேர்ந்த ஒப்பந்த நிறுவனத்தில் அமைச்சரும் ஒரு மறைமுக பங்குதாரர். தனது சமூகத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் அந்த நிறுவனத்திற்கே அனைத்து ஒப்பந்தங்களும் செல்கிறது. பிரித்து வழங்க வேண்டிய பணிகளை கூட பேக்கேஜ் பிளான் என்று சிஸ்டம் வைத்து மொத்தமாக கொடுத்து, மொத்தமாக வாங்கிக் கொள்வார். மச்சான் வெங்கடேஷ் தான் அவருக்கு மெயின் பினாமி. அப்புறம் வளத்தி வெங்கடாசலம், சங்கர்நகர் சங்கர், நகராட்சி தலைவர் கதிரேசன், இடைப்பாடி நகர செயலாளர் ராமன் என்று பினாமிகள் பட்டியல் நீளமானது. பிளாக்கில் தங்கபிஸ்கட் வாங்கிக் குவிப்பதிலும் ஆர்வம் அதிகம். வாழப்பாடியில் ஜூவல்லர்ஸ் நடத்தும் அவரது பினாமி ஒருவர் தான், தங்கபிஸ்கெட் வாங்கிக் கொடுப்பதில் தரகராக செயல்படுகிறார் என்கின்றனர்.

பரபரப்பு புகார்களுக்கு பஞ்சமில்லாத அமைச்சர்
கவர்னரை சந்தித்து பாமக கொடுத்த ஊழல் புகாரில் இவரை பற்றிய புகார்களே பிரதானமாக இருந்தது. கோகோ கோலா ஆலைக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதில் இவருக்கும், சக அமைச்சர்கள் இருவருக்கும் பெரும்பங்கு உள்ளது என்ற புகார், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் தங்கள் துறையில் நடத்தும் வசூல்வேட்டையில் கிடைத்த ரூ.1000 கோடி, இவரது கண்காணிப்பில் சேலத்தில் பதுக்கப்பட்டுள்ளது என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் ெதரிவித்த புகார், அமைச்சரை நடுங்க வைத்தது.

தொகுதியை விட்டு ஓட்டம்
வன்னியர்கள் அதிகம் நிறைந்த இடைப்பாடி தொகுதியில் தான், இவர் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். இதில் 5 முறை தோல்வி கண்டுள்ளார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்தவர், வன்னிய சமூகத்தை சேர்ந்த மக்களின் மேம்பாட்டுக்காக எதையும் செய்யவில்லை. கட்சியிலிருந்தும் பெரும்பாலானவர்களை ஓரங்கட்டினார். இதனால் வரப்போகும் தேர்தலில் அமைச்சருக்கு ஆப்பு வைக்க, அந்த சமூகத்தினர் தயாராகி விட்டனர். இதை அடிப்ெபாடிகள் மூலம் தெரிந்து கொண்ட அமைச்சர், தற்போது சங்ககிரியில் ேபாட்டியிட தயாராகி வருகிறார்.

பினாமி பெயரில் லேண்டு அரசு செலவில் ரிங்ரோடு
அமைச்சர், பினாமி பெயரில் வாங்கியுள்ள லேண்டுக்கு, அரசு சார்பில் லட்சங்களை ெசலவழித்து சாலை அமைத்துள்ளார் என்கின்றனர் உள்ளூர் மக்கள். இடைப்பாடி ஆவணியூர் பகுதியில் பினாமி பெயரில் சில லட்சங்களில் 35 ஏக்கர் நிலத்தை அமைச்சர் வாங்கியுள்ளார். நிலமதிப்பை ஏற்றுவதற்காக ரூ.50 கோடியில் ரிங்ரோடு அமைக்க பூஜை போட்டுள்ளார் என்பது அதிர்ச்சி தகவல்.

அமைதிப்படை அமாவாசை
கட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, தான் மட்டுமே வளர வேண்டும் என்று நினைப்பவர் தான் எங்க அண்ணன். அவர் நம்ம அமைதிப்படை அமாவாசை மாதிரி. 20 வருஷம் கழிச்சு ஒருத்தன் நமக்கு எதிரா வருவான்னு தெரிஞ்சா, இப்பவே ஒழிச்சிடுவாரு. அரசியல்ல இவருக்கு கை கொடுத்து தூக்கிவிட்ட செங்கோட்டையன பத்தி கேட்டீங்கன்னா, அப்படியா அவரு யாருன்னு ேகட்பாரு. ஆரம்ப காலத்துல இவருக்காகவும், கட்சிக்காகவும் உழைச்ச யாருமே, இப்ப அவரு கூட இல்லை. பஸ் அதிபர் கோபால், பூலாம்பட்டி கருணாநிதி, இடைப்பாடி பாலாஜி, பக்கநாடு மாதேஷ், மீனவரணி சுரேஷ், முன்னாள் எம்எல்ஏ கணேசன் என்று கட்சியில பரபரப்பா பேசப்பட்ட எல்லாரையும் அண்ணன் செல்லாக்காசா மாத்திட்டாரு. இதில பலர் இப்ப இருக்கற இடமே தெரியாம போயிட்டாங்க என்கின்றனர் அமைச்சரின் அடிப்பொடிகள்  தினகரன்

கருத்துகள் இல்லை: