செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

ஈரோடு எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு கவலைக்கிடம்? கூவத்தூர்... மருந்துகள் உரியநேரத்தில் கிடைக்கவில்லை?

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் கே.எஸ். தென்னரசு. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க.வில் இருப்பவர். கடந்த 2001ல் ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தற்போது இவர் கூவத்தூர் சசிகலா முகாமில் உள்ளார். தென்னரசு ஏற்கனவே புற்றுநோய்க்கான சிகிச்சை பெற்றவர். ஆண்டுக் கணக்கில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று கடந்த ஓரிரு வருடங்களாகத்தான் நலமாக இருக்கிறார். புற்று நோயிலிருந்து மீண்டு வந்த தென்னரசுவுக்கு கடந்த 2016 தேர்தலில் சீட் கொடுத்து எம்.எல் ஏ வாக்கினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இந்த நிலையில் செங்கோட்டையன் வேண்டுகோளிக்கிணங்கி கூவத்தூர் முகாமுக்கு சென்றார் தென்னரசு. மருத்துவ ரீதியாக சரியான நேரத்திற்கு மாத்திரை மருந்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள் எம்.எல்.ஏ. தென்னரசு குடும்பத்தினர். இந்த நிலையில் தென்னரசுவுக்கு முறையான மருந்து மாத்திரையில்லாமல் உடல் பலகீனமாகி அபாய கட்டத்தில் உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுபற்றி தென்னரசு மகன் கலையரசுவிடம் நாம் கேட்டபோது "அப்பா நலமாக இருக்கிறார்" என்று மட்டும் கூறினார். எம்.எல்.ஏ தென்னரசு நலமாக இருக்கிறாரா ? அல்லது அபாய கட்டத்தில் உள்ளாரா? என்கிற பதைப்பு ஈரோடு அ.தி.மு.க.வினரிடம் ஏற்பட்டுள்ளது! - ஜீவாதங்கவேல் நக்கீரன்

கருத்துகள் இல்லை: