செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

கூவத்தூர் விடுதி அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது

சென்னை: சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்குள் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் நுழைந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உட்பட 3 பேரும் குற்றவாளி உன தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மூவரும் உடனடியாக சரணடைய உத்தரவிட்டுள்ளது. Police and task force entered in the Koovathoor resort where Sasikala Staying இந்நிலையில் சசிகலா தங்கியுள்ள கூவத்தூர் ரிசார்ட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் 500க்கும மேற்பட்ட காவல்துறையினரும் ரிசார்ட்டுக்குள் நுழைந்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட பேருந்துகளில் வந்திறங்கிய காவல்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கூவத்தூர் ரிசார்ட் தற்போது வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது tamloneindia

கருத்துகள் இல்லை: