வியாழன், 17 செப்டம்பர், 2015

குஷ்பூ :பெண்கள் இன்று சுயமரியாதையோடு இருப்பதற்கு பெரியார்தான் காரணம்.

பெரியார் திடலில் நடந்த பெரியார் பிறந்தநாள் விழாவில் நடிகையும், தமிழக காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளருமான குஷ்பூ சுந்தர் பேசியபோது, நான் மும்பையில் இருந்து இங்கு தமிழ்நாடு வந்ததில் இருந்து முதல் முறையாக மிக பெரியளவில் சந்தோசமா இருக்கேன்னா அது இங்கு பெரியார் திடலில் தந்தை பெரியார் பிறந்தநாளில் பேசும் இந்த நிகழ்சிக்காக தான். இதை பெரிய சாதனையாக பார்க்கிறேன். கடவுள் இருக்கிறாரா? தெரியாது. ஆனால் கற்பனைகளால் உருவாக்கப்பட்ட ஒருவரை கை எடுத்து கும்பிட முடியாது. நம்முடைய ஆறாவது அறிவு என்ன சொல்லுதோ அதை தான் செய்ய வேண்டும். மதம் மனிதனை மிருகமாக்கும் என்றார் பெரியார். சாதி ஒழிக்க வந்த புரட்சி விதை பெரியார். தாலி கட்டுவதும் கட்டாமல் விடுவதும் அவரவர் சுதந்திரம். இதை தான் செய்யனும், இதை தான் சிந்திக்கணும் என எதையும் திணிக்க கூடாது. இதெல்லாம் பெரியார் பற்றி படிக்கும்போது தான் அறிந்துகொண்டேன். ஆசிரியர் அய்யா (கி.வீரமணி) பேசும்போது ‘படிக்காதவர்களுக்கு தான் துணிச்சல் அதிகம்’ என்றார். நான் படிக்காதவள் தான். அதனால் தான் எனக்கு துணிச்சல் இருக்கு போல. கொஞ்சம் திமிரும், கொழுப்பும் இருக்கு.
பெண்கள் எந்த கருத்தையும் வெளியே பேசுவதற்க்கே தயங்கும்போது துணிஞ்சு வந்து பேச ஒரு திமிர் வேணும். அது எனக்கு இருக்கு. ஆம் அது பெரியார்கிட்ட இருந்து வந்தது.

இன்று ஏ.ஆர் ரகுமானுக்கு பத்வா கொடுக்கிறார்கள். அப்படி செய்ய நீங்க யார்? உங்களுக்கு பயந்து நாங்கள் வேறு பேச வேண்டுமா? எனக்கு ஆறாவது அறிவு இருக்கு. உண்மையை பேசக்கூடிய தைரியமிருக்கு. கடவுளுக்கு அது இதுன்னு கொடுக்குறீங்களே அது என்ன கமிசனா? இதுல கடவுள்கிட்ட பேச இடையில ஒரு தூதர் வேற. கடவுள் தூதர் பேர்ல தான் பல மோசடி நடக்குது. கடவுள்

இன்னைக்கு பிசினசா இருக்கு. அதுதான் மூடநம்பிக்கையை வளர்க்குது. உங்களுக்கு சாதி , மத பற்று எதுவானாலும் அது உங்க வீட்டு வாசல் வரைதான். வெளியே வந்துவிட்டால் ‘நான் ஒரு மனிதன்’ என்று சொல்லிகொள்வதில் தான் பெருமைப்பட வேண்டும். இந்தியா பின்னடைய காரணமே சாதி மத மூட நம்பிக்கைகள் தான். ஒருவகையில சின்ன வயசுலையே நான் பெரியாரிஸ்ட் தான். இது என் அம்மா மூலம் வந்துருக்கலாம். என்னை எப்போதும் முஸ்லீம் என்றோ, குரான் படி, நமாஸ் செய் என்றோ சொன்னதே இல்லை. உன் வாழ்க்கைக்கு எது சரின்னு படுதோ அதை நீ முடிவு பண்ணு என்று தான் வளர்த்தார். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இன்று பெரியாரை வந்து நான் சேர்ந்ததற்கு. சுயமரியாதையோடு இன்று பெண்கள் இருக்க காரணம் பெரியார் தான்.

பெண்களை பார்த்தால் ‘வரியாடி’ என்று கூப்பிடுறதில்லை. கை எடுத்து மரியாதை செலுத்துவது அந்த மரியாதையை சொல்லி தந்தவர் பெரியார். கீழ் சாதியினர் என சொல்லபடுபவர்களை பொது தெருவில் கூட்டி சென்றவர் பெரியார். சுயமரியாதையை பெற்று தர போராடியவர் பெரியார். என் பெரிய பொண்ணு சொன்னால் ‘அம்மா என் கல்யாணத்துக்கு அது இதுன்னு செலவு பண்ண வேணாம். அளவா கூப்பிட்டு கையெழுத்து போட்டுட்டு சிம்பிளா முடிக்கணும்’னு சொன்னாள். பரவாலை என் பிள்ளைகள்ல ஒன்னு என்னை போல இருக்கு. சந்தோஷம் தான். என் வீட்டில் என் கணவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். நான் பெரியாரிஸ்ட். ஆனால் எதையும் என்னிடம் திணித்ததில்லை. இப்படி இருக்க வேண்டும் என பெண்களுக்கு சமவுரிமை தரனும் என என் கணவருக்கே சொல்லி தந்தவர் பெரியார் தான். ஆக பெரியார் திடலில் பெரியார் பிறந்தநாளில் எனக்கு பேச வாய்ப்பு வந்தது எனக்கான மிகபெரிய மரியாதையாக கருதுகிறன் நன்றி என்றார் மிகுந்த உற்சாகமாக. செய்தி - சே.த இளங்கோவன்
nakkheeran.in