ராதா மனோகர் : ஹம்ஸத்வனி ராகத்தில் பல திரைப்பட பாடல்களும் பல செவ்விசை பாடல்களும் உள்ளன . குறிப்பாக முத்துசாமி தீட்சிதரின் வாதாபி கணபதிம் கீர்த்தனை மிக பிரபலம்
திரைப்படல்களில் இளையராஜா இசையில் மகாநதி படத்தில் உள்ள ரங்க ரங்க ரங்கநாதனின் என்ற பாடல் ஞாபகம் இருக்கலாம்
அடுத்த வீட்டு பெண் படத்தில் இடம்பெற்ற வனிதா மணியே என்ற பாடல் மிக மிக பிரபலமான அசல் ஹம்சத்வனி ராக பாடலாகும்
ஆனால் இவற்றை எல்லாம் ஒரே அடியில் தூக்கி சாப்பிட்டுவிட்ட ஒரு பாடல் என்றால் அது அங்காடி தெரு படத்தில் இடம்பெற்ற அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்ற பாடல்தான்
ஆனால் ஒரு அதிசயம் பாருங்கள் மகாநதி படத்தில் இடம்பெற்ற ரங்கா ரங்கா ரங்கநாதன் பாடல் அளவுக்கு மீறிய ஊடக வெளிச்சத்தை பெற்று இன்றுவரை அந்த பாடலை பாடியவரை மகாநதி ஷோபனா என்று கொண்டாடுகிறார்கள் இதில் என்ன புதுமை அல்லது மேன்மை இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை
அப்படியே ஹம்சத்வனி ராகத்தின் மிக வழமையான அம்சங்கள் மட்டுமே உள்ளது சுரங்கள் எல்லாமே சலித்து போன கூறியது கூறல்தான்
ஆனால் அங்காடி தெருவின் தெருவின் அவள் அப்படி ஒன்றும் அழகில்லை என்ற பாடல்
இதற்கு நிகரான அழகு எந்த ரங்கநாதனிலும் இல்லை என்றே கருதுகிறேன்
இப்பாடலை பாடலை இயற்றியவர் கவிஞர் நா முத்துக்குமார்
இசையமைத்தவர் விஜய் அந்தனி ஜி வி பிரகாஷ் இரட்டையர்கள்
பாடியவர்கள் வினீத் ஸ்ரீனிவாசன் - ரஞ்சித் - ஜானகி அய்யர்
இன்றுவரை இந்த பாடலுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்றே எண்ணுகிறேன்
இந்த பாடலை படமாக்கிய விதமும் அழகானது
அங்காடி தெரு படத்திற்கு எதிராகவே பெரிய ஒரு சக்தி வேலை செய்தது
அந்த படத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தின் கொடூர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய காட்சிகள்தான் மத்திய அரசுகளின் நிராகரிப்பு காரணமாகும்
உரிய விருதுகள் வழங்கப்படவில்லை
ஆனாலும் என்ன தமிழ் திரையுலகின் முக்கிய படங்களில் ஒன்றாக என்றும் இந்த படம் இருக்கும்
அதிலும் இந்த பாடல் நிச்சயம் காலத்தையும் கடந்து இசைக்கும்
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக