Kandasamy Mariyappan : நேற்று புதிய தலைமுறை திரு. Karthigaichelvan தலைமையில் நடந்த விவாத நிகழ்ச்சியில்..,
திரு. தமிழ்மணி என்ற யோக்கியசிகாமணி அவர்கள்.,
சட்டமன்றமே துணை வேந்தர்களை நியமித்தால், சாதிச் சங்கங்கள் வரிசைக்கட்டி நிற்கும் என்றும்., அந்த துணைவேந்தர் அவர் சார்ந்த சாதியினரையே Lecturers, Professorகளாக நியமிப்பார் என்றும் மிகப்பெரிய அறிவாளி போன்று ஷாதி, ஷாதி, ஷாதி என்று கடைசி வரையிலும் பேசினார்.!
இதனால் திறமை இல்லாமல் போய்விடும் என்றும் வருத்தப்பட்டார்.!
Mr தமிழ்மணி..,
1. திருமதி நிர்மலா, திரு. ஜெய்சங்கர் எந்த தகுதி, திறமை அடிப்படையில் ஒன்றிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.!
ஷாதிதானே.!
2. IIT, IIM எல்லாவற்றிலும் எந்த தகுதி, திறமை அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே Lecturers, Professorகளாக நியமிக்கப்பட்டனர்.!
ஷாதிதானே.!
3. எந்த தகுதியின் அடிப்படையில் திரு. சூரப்பா துணை வேந்தராகவும், திரு. ரவி ஆளுநராகவும் நியமிக்கப்பட்டனர்.!
ஷாதிதானே.!
4. சாதியின் அடிப்படையில் உழைத்து வாழும் ஒரு வன்னார் துணை வேந்தராக நியமிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம்.
படிக்காமல் ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் ஒருவரையா துணை வேந்தராக நியமிப்பார்கள்.!?
MA/MSc, M Pill, Ph D முடித்த எத்தனையோ வன்னார்கள் Lecturers, Professorகளாக இருக்கின்றனரே. அவர்களைத்தானே துணை வேந்தராக நியமிப்பார்கள்.!
5. ஒரு வன்னாரோ, நாவிதரோ, பறையரோ, அருந்ததியரோ, வலையரோ, நாடாரோ, கோணாரோ, கள்ளரோ துணை வேந்தராக நியமிக்கப்பட்டால் தரம் குறையும் என்றும், தரமான மாணவர்கள் உருவாக மாட்டார்கள் என்றும், புதிய கண்டுபிடிப்புகள் வராது என்றும் சொல்ல வருகிறீர்கள்.!
சுதந்திரம் அடைந்து 2000 வரையில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மற்றும் அவர்களோடு முதலியார், பிள்ளைகள் போன்ற சாதியினர் மட்டும்தானே (நாயர், ஜாட்) துணை வேந்தர்களாக இருந்தனர்.
இவர்களால் தரமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் எத்தனை, கண்டுபிடிப்புகள் எத்தனை, கூற முடியுமா Mr. தமிழ்மணி.!
6. துணை வேந்தர் சேர்ந்த சாதியினரை மட்டுமே Lecturers, Professorகளாக நியமித்து விடுவார் என்று பொதுவெளியில் உங்கள் அறிவின்மையை, அறியாமையை வெளிப்படுத்துகிறீர்களே, அதுவும் பயங்கர நம்பிக்கையோடு., வெட்கமாக இல்லையா.!
ஒருவேளை துணை வேந்தர் பறையராக இருந்தால் அவரால் பள்ளர்களை தவிர்த்து அவரது சாதியினரை 15% இடங்களில் மட்டும்தானே நியமிக்க முடியும்.
மீதமுள்ள 85% இடங்கள்.!?
அவரே கோணாராக இருந்தால் அவரது சாதியினரை 26.5% இடங்களில் மட்டும்தானே நியமிக்க முடியும்.
மீதமுள்ள 73.5% இடங்கள்.!?
இப்படி இடஒதுக்கீட்டின் படிதானே Lecturersஐ நியமிக்க முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா.!
திரு. கார்த்திகைச் செல்வன் அவர்களே, இவரைப் போன்ற தற்குறிகளின் பேச்சை இடை மறித்து நிறுத்துங்கள்.!
இல்லையென்றால் இவர் கூறுவது உண்மையோ என்று இளைஞர்களுக்கு எண்ணத் தோன்றும்.!
இது ஜனநாயகத்திற்கு ஆபத்து.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக