சனி, 31 ஆகஸ்ட், 2013

ஜெகன் மோகன் ரெட்டிக்கு உணவு ஊட்டப்பட்டது ! blackmail உண்ணாவிரதம் ஒருவழியானது

ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் நிம்ஸ் மருத்துவமனை முன்பு திரண்டனர். ஆனால் யாரையும் பார்க்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மருத்துவமனையில் ஜெகனுக்கு வலுக்கட்டாயமாக உணவு... உண்ணாவிரதம் முறியடிப்பு!! பின்னர் இன்று நீதிமன்றம் ஜெகனின் மனைவி பார்வதி மட்டும் மருத்துவமனையில் துணைக்கு இருக்க அனுமதி அளித்திருந்தது. இதனிடையே சிறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஜெகனுக்கு மருத்துவர்கள் குழுவினர் வலுக்கட்டாயமாக உணவு செலுத்தி அவரது போராட்டத்தை முறியடித்தனர். ஜெகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மருத்துவமனையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட நிலையில் அவருக்கு வலுக்கட்டாயமாக மருத்துவர்கள் உணவு செலுத்தி போராட்டத்தை முறியடித்தனர்.

டெல்லி போலீஸ் பாலியல் வன்முறை ! நண்பர்களுடன் வீடு புகுந்து வன்புணர்வு கொள்ளை !

A Delhi-based woman was allegedly gangraped and her male friend assaulted by two police constables and their three friends on Friday in Noida.: காவலர்கள் இருவர் மற்றும் அவர்களது நண்பர்களால் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 நொய்டாவில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில்,வசித்து வரும் பெண் ஒருவர் காவலர்கள் உள்பட  4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ளார். வன்புணரப்பட்ட பின் அப்பெண் தாக்கப்பட்டிருக்கிறார் மேலும் அவரிடமிருந்து பணம், வங்கி கடன் அட்டை ஆகியவற்றை அவர்கள் பறித்து சென்றதும் தெரியவந்துள்ளது.
இன்று காலை அப்பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் காவலர்கள் என்பது தெரியவந்துள்ளது. வன்புணர்வுக்கு ஆளான அப்பெண் வசித்த அதே குடியிருப்பில் தான்  அவரை வன்புணர்ந்த ஒருவன் வசித்துவந்துள்ளான். காவல் துறையில் வேலைக்காக காத்திருந்த அவன் தன்னுடைய காவல்துறை நண்பர்கள் மற்றுமொரு நண்பருடன் சேர்ந்து  இக்கொடுமையை நடத்தி இருக்கிறான்.

சோனியா : பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிக்கப்படும் ? முதல்ல அந்த கொடிய சிறுவனை தூக்கில போடுங்க அப்புறம் வாக்குறுதி கொண்டுங்க !

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்க அனைத்து முயற்சிகளும்
எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உறுதி அளித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளை எதிர்ப்பதில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல வாழ்வு அமைச்சகத்தின் அகிம்சை தூதர் என்ற திட்டத்தை டெல்லியில் இன்று அவர் துவக்கி வைத்து பேசினார். பாலியல், வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றுக்கு எதிராக பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அகிம்சை தூதர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அடிப்படை சட்ட உரிமைகளை பாதுகாத்தல், வழக்குகள் தொடர்பான அடிப்படை அறிக்கை அளித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.dinakaran.com

காமம் தாண்டிய காதல் ? மொள்ளைமாரி தத்துவ திரைப்படங்கள் ! அட காமத்தை தாண்டினால் எதுக்குடா மனுஷாளை காதலிக்கணும் ?


tharamanai‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

ராம்-राम-Ram ன் அடுத்த படம் ‘தரமணி’ என்று (30-8-2013) நாளிதழில் விளம்பரம் வந்திருக்கிறது. அதில் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு புதுமை நடந்திருக்கிறது.
தமிழ் ‘இந்தி’ ஆங்கிலம் மூன்று மொழிகளில் ‘தரமணி’ என்று அறிவித்திருக்கிறார்கள்.தமிழ் உணர்வு அதிகமானால் இப்படியெல்லாம் ஆகுமோ? ஒரு வேளை, தரமணி ரயில் நிலையத்தில் நடைபெறும் காதல் கதையோ?
‘ரயில் நிலையத்தில் எழுதப்பட்ட இந்தி தமிழுக்கு எதிரானது’ என்று திராவிட இயக்கத்தவர்கள் ‘ரயில் நிலைய இந்தி எழுத்தின் மேல்’, தார் பூசினார்கள். அவர்களை கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த் தேசியவாதிகள் இந்தி பெயரிலேயே படம் எடுக்கிறார்கள். (யதார்த்தம் முக்கியம் அமைச்சரே)
தமிழுக்கு எதிராக இருந்தாலும் யதார்த்ததை கை விடாத படைப்பாளர்கள், காதலை யதார்த்தமாக பார்ப்பதில்லை. அந்த விளம்பரத்தின் கடைசியில் சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம்காதல்என்ற அந்தப் படத்திற்கான ‘பஞ்ச்’ வந்திருக்கிறது.
‘சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி’ இதெல்லாம் ஒண்ணுதானே;. எதுக்கு தடகள ஓட்டம் போல் இத்தனைத் தாண்டல்?
‘காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் ‘காதல்’ இப்படி மட்டும் சொல்லியிருக்கலாம். ‘கா’ வுக்கு ‘கா’ எதுகை மோனையோடு எடுப்பா இருந்திருக்கும்.

டெல்லி கற்பழிப்பு பாதிக்கபட்ட பெண்ணின் தாயார் : மூன்று வருட தண்டனையை ஏற்றுகொள்ள முடியாது ! மேல்முறையீடு செய்வோம்

டெல்லி கற்பழிப்பு வழக்கில் கற்பழிப்பு மற்றும் கொலை ஆகியவற்றில் மைனர் சிறுவன் குற்றவாளி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து 3 வருட சிறை தண்டனை விதித்து சிறுவர் நீதிமன்ற வாரியம் இன்று தீர்ப்பளித்தது.  எனினும், இந்த தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் கூறும்போது, இந்த தீர்ப்பை என்னால் ஏற்று கொள்ள இயலாது.
இந்த மனிதர்களால் எனது சகோதரி கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார்.  ஒவ்வொரு நாளும் ஆயிரம் முறை மரணத்தை சந்தித்து உள்ளார்.  எனது முழு குடும்பமும் இதனால் சிதறடிக்கப்பட்டு கிடக்கிறது.  இந்த தீர்ப்பை என்னால் ஏற்க இயலாது.  இந்த தண்டனையை கேட்டு எனது தாய் கதறி அழுதார் என அவர் தெரிவித்துள்ளார்.  மேலும், மாணவியின் தாய் கூறும்போது, இந்த தண்டனை மட்டுமே விதிப்பது என்றால், இதனை முன்னரே அறிவித்திருக்கலாம்.  இந்த தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்று கூறினார்.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க கோரி மேல் நீதிமன்றத்தில் முறையிடுவோம் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  ஆனால், சட்ட நிபுணர்கள் கூறும்போது, தற்போதைய சட்டப்படி சிறுவனுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.  எனவே, சிறுவன் தான் மேல் முறையீடு செய்ய முடியும் என தெரிவித்துள்ள

Delhi gang rape: 3 ஆண்டுகள் மட்டும் சிறுவர் நல முகாமில் ,, அதன் பின் அவன் FREE ! sentenced to 3 yrs in special home

Indian policemen escort the juvenile (C, in pink hood), accused in the December 2012 gang-rape

டெல்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக அடித்து கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். இவர்களில் ஒரு குற்றவாளிக்கு 17 வயதே ஆவதால் அவன் மீதான வழக்கு மட்டும் டெல்லியில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Delhi Gang Rape கொடிய சிறுவனுக்கு சிறார் நீதிமன்றம் இன்று தீர்ப்பு !

An Indian juvenile court is expected to deliver its verdict in the case of a teenager accused of taking part with a group of adults in the fatal gang rape of a woman on a Delhi bus பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்ட
வழக்கில் டில்லி சிறார் கோர்ட் இன்று ஒருவரது தண்டனையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 6 குற்றவாளிகளில் ஒருவன் மைனராக இருந்தான். இவன் மீதான குற்றம் தொடர்பாக இன்று தீர்ப்பளிப்படும் என கோர்ட் அறிவித்திருந்தது. இவனுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிட மட்டுமே சட்டத்தில் வழி வகை உள்ளது என்பது குறிப்பிடதக்கது.  எல்லோருக்கும் கொடுக்கும் தணடனையை விட இந்த ...க்கு கூடுதல் தண்டனை கொடுக்க வேணும் இந்த வயதிலேயே இவன் இப்படி என்றால் இவன் வளர்ந்தால் என்ன எல்லாம் செய்வான் இவன் சமுதாயத்துக்கு வேண்டாதவன்

சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் கோஷ்டிகள் !

தங்கம் கொட்டும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தல்;
வருகிற செப்டம்பர் 7ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் டைபெற விருக்கிறது.  இதில், கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணியும், கே.ஆர்.  தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது.கே.ஆர் . தலைமயிலான அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா, ஒரு ஓட்டுக்கு ஒரு கிராம் தங்கம், வெள்ளீத்தட்டு, 5 ஆயிரம் மதிப்புள்ள கிராண்ட் ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்து ஓட்டு வேட்டை யாடி வருகிறார்.இதை அறிந்து அதிர்ச்சியான தாணு, 3 கிராம் தங்க மோதிரம், ரொக்கம் 10 ஆயிரம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்.கே.ஆர். அணியில் துணைத்தலைவருக்கு போட்டியிடும் என்.லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ்சந்திரபோஸ் ஓட்டுக்கு 20 ஆயிரம் என்று விலைபேசி 10 ஆயிரம் அட்வான்சாக கொடுத்துள்ளார்.   ஓட்டு போடும் நாள் அன்று மீதம் 10 ஆயிரத்தை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.தயாரிப்பாளர் சங்கத்தின் மொத்தம் 824 ஓட்டுகள் உள்ளன.  இதில், 200 ஓட்டுகள் பதிவாகாது போனாலும் கூட, 600 ஓட்டுகளை குறிவைத்து தாணூ, ஞானவேல்ராஜா, சுபாஸ் சந்திரபோஸ்    தங்கமும் , வெள்ளியும், ரொக்கமுமாக வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வருமான வரித்துறைக்கு தண்ணீர் காட்டுவதற்காக, ஞானவேல்ராஜா, தனது தம்பிகள்  எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் ஆகியோர் பெயரிலும்,   கலைப்புலி தாணு தனது ஆபீஸ் ஊழியர் பெயரிலும் வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பாலியல் குற்றங்கள் ? நீதிபதி விசாரணை !

Scandal in the Ashram Take the case of Jayashree Prasad, 52, an inmate since 1983, who says she was beaten up by a close associate of a trustee in July 1996. While she was working in the dining hall, Nonigopal, who she calls a crony of the then trustee Albert Patel, tried to sexually assault her. She claims she was beaten up when she resisted. Her ordeal was repeated in January 2001 when she resisted the sexual advances made by Krishna Chander, considered close to trustee Ved Prakash Johar. This time she was attacked with metal rods. Her appeal to the trustees for help and protection, she says, went unheeded. Victimised? Dr Gayatri Satapathy was
shunted out of the medical departmen அந்த ஆஷ்ரமத்தில் பாலியல் குற்றங்களோ அல்லது வியாபாரமோ நடப்பது ஒன்றும் புதிய செய்தி அல்ல , அங்குள்ள வங்காளிகளின் பேரம்பேசும் வல்லமக்கு புதுசேரி போலீசும்  அதிகாரிகளும் விலைபோகிறார்கள்என்பதே  உண்மை ,இது எல்லோருக்கும்  தெரியும் . மேட்டுக்குடி கூத்துகும்மாலங்களுக்கு அது மிகவும்வசதியாக போய்விட்டது ,வெளியில்  ஆஷ்ரமபோர்வை  அரவிந்தரின் நாமம்போன்றவை நல்ல பிராண்ட்நேமாகஇருக்கிறது 

கலைஞர் : திமுகவில் கோஷ்டிகளே இல்லை ! ம்ம்ம் வீட்டில்தான் கோஷ்டிகள் ஜாஸ்தியாச்சு

"தி.மு.க.,வில் எந்தக் கோஷ்டியும் இல்லை,'' என, திருமண விழாவில், தி.மு.க.,
தலைவர் கருணாநிதி பேசினார்.
வேலூர் மாவட்ட தி.மு.க., செயலர் காந்தியின் இல்ல திருமண விழா, கருணாநிதி தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: "தமிழகத்தில் கோஷ்டி இல்லாத மாவட்டம், வேலூர் மாவட்டம் தான்' என, துரைமுருகன் பேசினார். ஒருவேளை அவருடைய மாவட்டமும் அது என்பதால், அப்படிச் சொல்லிக் கொண்டாரோ என, எனக்கு தெரியவில்லை. அப்படியானால், வேலூர் மாவட்டத்தில் தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் எல்லாம் கோஷ்டி இருப்பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை. எந்தக் கோஷ்டி இருந்தாலும், அந்தக் கோஷ்டிகளையெல்லாம் அடக்கக் கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், தி.மு.க.,வில் உள்ள தலைவர்களிடத்திலும் உண்டு. இவ்வாறு, கருணாநிதி பேசினார்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

சிரியா மீது அமெரிக்க தாக்குதல் ஆயத்தம் !


சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார்.சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு தோற்றுப்போன பின்னணியில், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசும்போது ஜான் கெர்ரி இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறாரஇது தொடர்பாக அமெரிக்கா இறுதியில் என்ன முடிவை எடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்பதே ஒபாமாவின் கொள்கையாக இருப்பதாக ராணுவச் செயலர் சக் ஹேகல் தெரிவித்திருக்கிறார்.சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் தோற்றுப்போன செயலானது, உலக அரங்கில் தொடர்ந்தும் பிரிட்டன் முக்கிய பங்களிப்பை ஆற்ற விரும்புகிறதா என்கிற விவாதத்தை தோற்றுவித்திருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஓஸ்போர்ன் தெரிவித்திருக்கிறார்

மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை தொடர முடிவு

புதுடெல்லி: ஏற்கனவே திட்டமிட்ட வழியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வியாழன் அன்று நடந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தை ஏற்கனவே திட்டமிட்ட வழியில் நிறைவேற்றுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அப்துல்லா இதனை உறுதிப்படுத்தினார். இது அரசியலுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தமிழக மக்களின் நீண்ட கால கனவான சேது சமுத்திர திட்டப் பணிகள் கடந்த 2005ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது.

மகள்களை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை

பெற்ற மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புதுச்சேரி தாயாருக்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரை கடந்த 2005-ம் ஆண்டு சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை இப்போது முடிவடைந்து. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றங்கள் நிரூபணமானதால், ஜெயஸ்ரீக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் இரண்டு முறை தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், விபச்சார தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 முறை தலா 7 ஆண்டு சிறைத்தண்ட னையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். புரோக்கர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஜெயஸ்ரீக்கு விதிக்கப்பட்ட 41 ஆண்டு சிறைத் தண்டனையையும் அவர் 10 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வடகொரியா: காதலி உட்பட 12 பேருக்கு அதிபர் மரணதண்டனை அளித்தார் !

வடகொரியா அதிபராக கிம்ஜாங்-யுங் பதவி வகித்து வருகிறார். இவரது
முன்னாள் காதலி ஹயான் சாங்-எல் பிரபல பாப்பாடகி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்தனர். அதை அறிந்த கிம்ஜாங்-யுன் தந்தையும் முன்னாள் அதிபருமான கிம்ஜாங்-இல் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, இவர்களது காதல் முறிந்தது. அதை தொடர்ந்து ஹயான், வடகொரிய ராணுவ அதிகாரியை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இருந்தும் அவ்வப்போது, பாடகி ஹயான் முன்னாள் காதலர் கிம்ஜாங்-யுன்னை சந்தித்து வந்தார். தற்போது உன்னாசு என்ற இசைக்குழுவை வைத்துள்ளார். இந்த இசைகுழுவில் 11 பேர் உள்ளனர் இ. இவர்கள் அனைவரும்  கவர்ச்சிகரமான ஆடைகளுடன் நடனமாடியும் செக்ஸ் காட்சிகளுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடத்தினர் அதை வீடியோ பம்ம் எடுத்து சீனா மற்றும் வடகொரியாவில் விற்றதாக தெரிகிறது.இதைதொடர்ந்து இவர்கள் அனைவரும் பாலியல் சட்டத்தில் கைது செய்யபட்டனர். இவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவர்கள் 12 பேருக்கும் மரணதண்டனை வித்திக்கபட்டது. இதை தொடரந்து அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டு தண்டனை நிறைவேற்றபட்டனர்.dailythanthi.com

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் மாற்றத்திற்கு தடை விதிக்க முடியாது !

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வந்த அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்ற வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர். இந்தநிலையில் பவானிசிங்கை மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டது.
அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை மாற்றி விதித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர் பவானிசிங் நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது குறித்து 3 வாரங்களுக்குள் பதிலளிக்க கர்நாடக அரசு, அன்பழகன், பவானிசிங் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சொத்து குவிப்பு புகார் ! RAID கர்நாடக அதிகாரிகளின் வீட்டில் கட்டு கட்டாக பணம் நகைகள் சிக்கியது !

Bangalore: Raids Find IAS Officer, Govt Officials Owning Huge Wealth

சொத்து குவிப்பு புகார் எதிரொலி கர்நாடக அரசு அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு கட்டு கட்டாக பணம், நகைகள் சிக்கியது< பெங்களூர்:வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்துள்ளதாக வந்த புகார்களையடுத்து பெங்களூரில் உள்ள அரசு உயரதிகாரிகளின் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் கட்டுகட்டாக பணம் மற்றும் தங்க, வெள்ளி நகைகள், பங்கு பத்திரங்கள், வீட்டுமனை பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசில் பணியாற்றிவரும் உயர் அதிகாரிகள் சிலர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து வைத்திருப்பதாகவும், திட்டங்களை நிறைவேற்றுவதில் ஊழல் செய்து கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளனர் என்றும் லோக் அயுக்தாவுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

6-வது நாளாக ஜெகன்மோகன் உண்ணாவிரதம்? நல்லது கொலஸ்ட்ரோல் குறையும்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஐதராபாத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடப்பா தொகுதி எம்.பி.யான அவர், ஆந்திர மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 25-ந் தேதி அன்று ஜெயிலுக்குள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து வியாழக்கிழமை 5-வது நாளாக போராட்டம் நீடித்தது.
மிகவும் பலவீனமாக காணப்பட்ட ஜெகன்மோகனை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். உடல்நிலை மோசம் ஆவதால், போராட்டத்தை கைவிடுமாறு டாக்டர்கள், ஜெகன்மோகனை கேட்டுக் கொண்டனர்

28 தலித் வீடுகளை இடித்த அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம்

சுதந்திரத்தினந்தன்று பாப்பபான்குளத்தில் 28 தலித் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கியது தொடர்பாக சிவகங்கை வட்டாட்சியர் குருசிமுத்து, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகிய மூவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஆகஸ்ட் 15ந் தேதி அன்று தொடங்கி மூன்று தினங்கள் பாப்பான் குளத்தில் 28 தலித் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்தார்கள். கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், ஒய்வு பெற்ற நிலஅளவை அதிகாரி ஆகியோர் சேர்ந்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அரசு கட்டிக் கொடுத்த 5 வீடுகள் உள்ளிட்ட 28 வீடுகள் இடிக்கப்பட்டன. ஆகஸ்ட் 15ல் இடிக்கப்பட்ட பிரச்சனை ஆகஸ்ட் 20ல் பெரும் திரள் போராட்டத்திற்கு பின்பு  உயர்நீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்றம் 16 உயர் அதிகாரிகள் பதிலளிக்க 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது. இதற்கிடையில், சிவகங்கை வட்டாட்சியர் குருசிமுத்து, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகிய மூவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. -நா.ஆதித்யா<

அஞ்சலிக்கு அமெரிக்காவில் திருமணம் ! அவள் அப்படியொன்றும் அழகில்லையா ?

நடிகை அஞ்சலிக்கு ரகசிய திருமணம் நடந்ததாகவும் கணவருடன் அமெரிக்காவில் குடியேறி விட்ட்ட தாகவும் தெலுங்கு பட உலகில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.அஞ்சலி கடந்த ஏப்ரல் மாதம் திடீரென்று சித்தி வீட்டில் இருந்து வெளியறி மாயமானார். அவர் கடத்தப் பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு ஐதராபாத் போலீசில் ஆஜராகி தன்னை யாரும் கடத்தவில்லை என்று வாக்கு மூலம் அளித்தார். சித்தி கொடுமையால் வெளியேறியதாகவும் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார். 5 நாட்கள் யாருடன் இருந்தார் என்பதை அவர் வெளியிடவில்லை.காதலனுடன் தங்கி இருந்த விவரமும் பிறகு அவரை ரகசிய திருமணம் செய்து கொண்ட விஷயமும் தற்போது அம்பலமாகி உள்ளது. அஞ்சலி காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர் ஆந்திராவில் உள்ள பிரபல அரசியல் வாதி ஒருவரின் மருமகன் என தெரிய வந்துள்ளது. இருவரும் அமெரிக்காவில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ள<

லக்ஷ்மி ராமகிருஷ்ணனை நிச்சயம் பாராட்ட தான் வேண்டும் ! சினிமாவில் வருவது போல ஒரு பொறுக்கி கீரோ ! படித்த பொறுப்புள்ள ஒரு பெண் ! இதுதான் காதலா ?

zee டிவியில் நேற்று இடம்பெற்ற சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மிகவும் அவசியமாக எல்லோரும் பார்த்திருக்க வேண்டிய நிகழ்ச்சி
ஒரு இளம் காதலர்களை, நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனும் காதல் ஜோடிகளின் பெற்றோர்களும் இதர டிவி ஊழியர்களும் சேர்ந்து  பிரித்து தத்தம் பெற்றோர்களுடன் அனுப்பி விட்டனர், இது மிகவும் சரியான ஒரு நடவடிக்கைதான் , வயது வந்த காதலர்களுக்கு சுயமாக தமது வாழ்வை தீர்மானிக்கும் உரிமை உண்டு என்ற கோட்பாட்டை தாண்டி சில விடயங்களை அவதானிக்க வேண்டி உள்ளது . இதை இந்த நிகழ்ச்சி மிக சரியாக காட்டி உள்ளது என்றே கூறவேண்டும் .
சுருக்கமாக கூறின் : ஒரு உதவாக்கரை பையன் போதாக்குறைக்கு அவனிடம் குடி மாறும் புகை போன்ற பழக்கங்களும் இருப்பது போல் தெரிகிறது , ஒரு விதமான தொழிலும் கிடையாது ,
உத்தியோக பெற்றோருக்கு பிறந்தும் படிப்பும் இல்லை, எல்லோருக்கும் முன்னிலையில் பெண்ணை பார்த்து அலட்சியமாக உனக்கு நான் வேணுமா உன் அப்பா வேணுமா என்று கேட்கிறான் , எந்தவித தகுதியும் அடக்கமும் இல்லாத ஒரு அடாவடி பையனுக்கு உரிய சகல சாமுத்திரிகா இலக்கணமும் அவனிடம் தாராளமாக தெரிகிறது ,
மறுபக்கம் பெண்ணின் தரப்பை பார்க்கும் பொழுது மிகவும் வறுமை பட்ட ஒரு குடும்பத்தில் மூத்த பெண்ணாக அவர் நன்றாக படித்து கொண்டு இருக்கிறார் , வறுமையிலும் பெற்றோர் அவளை எஞ்சினியரிங் காலேஜில் சேர்த்து உள்ளனர்,

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கலைஞருக்கு பாமக கடிதம் ! அதிமுக அரசின் அஜாரகத்திற்கு எதிராக குரல்கொடுக்க அழைப்பு

 தமிழக அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடிதம் எழுதியுள்ளது. திமுக தலைமை அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி திமுக தலைவர் கருணாநிதிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் புதன் கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையையும் தனது கடிதத்தில் ஜி.கே.மணி இணைத்து உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது

நேபாள இந்திய ரூபாய்களின் மதிப்பு படு மோசமான சரிவு

காத்மண்டு: அமெரிக்க டாலருக்கு இணையான நேபாள ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து 108.90 ஆக வீழ்ச்சி கண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான நேபாள ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 105.35 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தின் போது இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் நேபாள ரூபாய் மதிப்பு 108.30ஆக இருந்தது. பின்னர் இது 108.90ஐ எட்டியது
tamil.oneindia.in

விஜயகாந்த் பாஜக கூட்டணி ? மோடியோடு ஜோடி சேர தமிழருவி மணியன் தூது ?

சென்னை: லோக்சபா தேர்தலில் மத்தியில் பாஜக கணிசமான இடங்களைப்
பெற்றுவிடும் என்ற நிலையில் தமிழகத்தில் பாஜகவினர் தேமுதிகவை தமது அணிக்கு கொண்டு வர மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாஜக சார்பில் தமிழருவி மணியன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தாலும் அனேகமாக இடதுசாரிகளை அரவணைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ்தான் இப்போதைக்கு அழைத்துவரப்பட வேண்டிய தோழமைக் கட்சி. ஆனால் தேமுதிகவோ என்ன செய்வதென்று குழம்பினாலும் தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாஜகவும் தம்மால் முடிந்த அளவுக்கு வலை விரிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழகத்தில் மதிமுகவை மிகவும் அதிகமாக ஆதரித்துப் பேசக் கூடியவர் தமிழருவி மணியன்.

ஜாமீனில் வந்தார் பவர்ஸ்டார் ! பஞ்சு டயலாக் கீரோக்கள் எல்லோருமே ஒருவிதத்தில் பவர் ஸ்டார்கள்தான்

லத்திகா திரைப்படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானதாக்(!) கூறப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் உண்மையிலேயே பல ரசிகர்களை கவர்ந்தார்.வருங்கால முதல்வர், இந்திய ஜனாதிபதி என்பதையெல்லாம் தாண்டி எதிர்கால அமெரிக்க ஜனாதிபதி என்று ரசிகர்களால்(!) பாராட்டப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் சில மாதங்களாக பண மோசடி வழக்கில் சிறையில் தள்ளப்பட்டார்.
பவர்ஸ்டார் சிறையில் இருந்தபோது அவர் நடித்த ஆர்யா சூர்யா திரைப்படத்தின் நிகழ்ச்சிகள் நடந்துவிட்டதால், இத்திரைப்படத்தைப் பற்றி அவரால் ரசிகர்களுக்கு எதுவும் கூற முடியவில்லை.ரசிகர்கள், உறவினர்களை சந்திக்க இரண்டு நாள் ஜாமீனில் வெளிவந்த பவர்ஸ்டார் அளித்த பேட்டியில் “ரொம்ப பில்டப் குடுத்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்து நிக்குறேன். ஆர்யா சூர்யா திரைப்படத்தில் நான் ஹீரோ கேரக்டரில் நடித்திருக்கிறேன். என் மீதுள்ள நம்பிக்கையில் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கும், என்னுடைய காட்ஃபாதர் ராமநாராயணன் சாருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழகம் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தோன்றுகிறது: ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஏற்கனவே கொலைகளும் ,கொள்ளைகளும் அதிகரித்துவிட்ட
நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பெருகி வருவதைப் பார்க்கும்போது, தமிழகம் வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான மற்ற கொடுமைகளும் அதிகரித்து வருவது மிகுந்த அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது.
தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, 2012-ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் பாலியல் வன்கொடுமைகள் 50 விழுக்காடு அதிகரித்திருக்கின்றன.
கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை வரையிலான காலத்தில் 291 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டின் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 436 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கல் நேபாளில் கைது

டெல்லி: பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன்
தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல். தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தார். இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கல் நேபாளில் கைது நூற்றுக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த பட்கல் கடந்த 2008ம் ஆண்டு இந்திய போலீசாரின் கைகளில் இருந்து நழுவினார். இந்நிலையில் அவரை நேபாளில் வைத்து தேசிய புலனாய்வு நிறுவனத்தார் இன்று கைது செய்துள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடக போலீசார் கொடுத்த தகவல்களை வைத்து தான் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.tamil.oneindia.in

அம்பானிக்கு எல்லாம் மறந்து போச்சாம் ! ஆங்கிலமே தெரியாத தயாளு அம்மையார்தான் Negotiationn பண்ணினாங்க ,சிபிஐ

கடும் உழைப்பால் இந்தியாவையே வளரச் செய்து கொண்டிருப்பதாக விதந்தோதப்படும் அனில் அம்பானி சாதாரண விபரங்களைக் கூட நினைவில் வைத்திருக்க முடியாத வெறும் டம்மி பீஸ்.நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்&
அனில் அம்பானிக்கும் ஞாபக மறதி நோய் வந்திருக்கிறது.

தள்ளாத வயதிலான தயாளு அம்மாள்தான் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்று கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் சாதிக்கின்றன.
வயோதிகத்தால் ஞாபக சக்தியை இழந்து, ஆங்கிலத்தில் பேசக் கூட முடியாத தயாளு அம்மாள்தான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஸ்வான் டெலிகாமிடமிருந்து நடந்த பணப் பட்டுவாடா தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று சிபிஐ அடம் பிடிக்கிறது.
ங்க அடிபட்டிருக்கும், இங்கதான் மெடுலா ஆப்லங்கேட்டா இருக்கு. இங்க அடிபட்டா ஷாக்ல டெம்ப்ரரி மெமரி லாஸ் வரும்.” கிரிக்கெட் விளையாடி, கால் ஸ்லிப் ஆகி கீழே விழுந்து விட்ட “நடுவில கொஞ்சம் பக்கத்தக் காணோம்” நாயகனுக்கு இப்படியாக குறுகிய கால ஞாபக மறதி நோய் வந்து விடுகிறது. அதோ போல, அனில் திருபாய் அம்பானி குழும முதலாளி அனில் அம்பானிக்கும் நீண்ட கால ஞாபக மறதி நோய் வந்திருக்கிறது.
ஸ்வான் டெலிகாம் என்ற கம்பெனி இருப்பதே நினைவில்லை என்றும் தனக்குச்  சொந்தமான ரிலையன்ஸ் டெலிகாம் ஸ்வான் டெலிகாமில் முதலீடு செய்தது பற்றி எதுவும் தெரியாது என்றும் 2G அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்.
இப்படி மெமரி லாஸ், அதாவது ஞாபக மறதி வரணும்னா, என்ன நடந்திருக்கணும்?

பெண்களை கடவுளாக போற்றும் பின்னணியில் பெண் அடிமைத்தனம் ஒழிந்திருக்கிறது

மிகேலா கிராஸ்நீங்கள் ஒரு போதும் கேட்க விரும்பாத பாரதக் கதை !
நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன்.
சிகாகோ பல்கலைக் கழகத்தின் தெற்கு ஆசிய ஆய்வுத் துறையில் படிக்கும் மிகேலா கிராஸ் என்ற அமெரிக்க மாணவி சென்ற ஆண்டு தனது படிப்பின் ஒரு பகுதியாக இந்தியா வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை குறித்து எழுதியிருக்கிறார்.

மிகேலா கிராஸ்
பெண்கள் அனைவரையும் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையில்லைஎன்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. நீலி வழிபாட்டிற்கும் தேசபக்திக்கும் உள்ளொளி இணைப்புள்ளதாக இந்து ஞான மரபின் உபன்னியாசர்கள் கதை விடுகிறார்கள்.  பொய்யான இந்த போற்றுதல்கள் மற்றும் வருணணைகளின் பின்னே பெண்ணடிமைத்தனத்தின் ஆதாயம் ஒளிந்து கொண்டிருக்கிறது

3 மாதங்களில் ரூ.21,554 கோடி அன்னிய முதலீடு வாபஸ்


 தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்தது. அதனால், எழுந்த பின் விளைவுகள், போராட்டங்கள்.
 அடுத்த ஆண்டு (2014) நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கு பெரிய கட்சிகள் இப்போதே தயாராகி வருவதன் பின்னணி நிகழ்வுகள்.
 பொதுத் தேர்தல் நெருங்குவதால் எந்த ஒரு விஷயத்திலும் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறும் போக்கு.
* பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி குறைவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் (அன்னியச் செலாவணி கட்டுப்பாடுகள்), தங்கம் இறக்குமதி வரி அதிகரிப்பு இப்படி தொடர்ச்சியான நிகழ்வுகள்
புதுடெல்லி : இந்த நிதியாண்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில் இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் வங்கிகளில் இருந்து சுமார் ரூ.21,554 கோடி அன்னிய முதலீட்டை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கடந்த ஜூன் முதல் 3 மாதங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) சுமார் ரூ.21,554 கோடிக்கும் அதிகமாக அன்னிய முதலீட்டை திரும்பப்பெற்றுள்ளனர்.

15 வயது மகளை சாமியார் பலாத்காரம் செய்தது எப்படி? சத்தம் போட்டால் சுட்டு கொன்று ,,, மிரட்டல்

: உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 72 வயது சாமியாரான அசராம் பாபு
பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பெண்ணின் தந்தை கூறியதாவது: என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சாமியார் அசராம் பாபுவின் ஆசிரமத்துக்கு அழைத்து சென்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நாங்கள் தெய்வமாக வணங்கி வந்தோம். என் மகளை பிடித்துள்ள தீய சக்தியை விரட்ட பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அப்போது அவர், ‘சத்தம் போட்டால், உன்னையும் வெளியே இருக்கும் உன் பெற்றோரை எனது பாதுகாவலர்கள் சுட்டு கொன்று விடுவார்கள்’ என்று மகளை மிரட்டியுள்ளார்.

ரூபாய் மதிப்பு கடும் சரிவு ! பிரதமர் பதவி விலக எதிர்கட்சிகள் கோரிக்கை !

ரூபாய் மதிப்பு சரிவைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், பிரதமர் மன்மோகன் சிங்கும், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் பதவி விலக வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு புதன்கிழமை ரூ. 68.80 ஆகச் சரிந்ததைத் தொடர்ந்து இக்கருத்தை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் தில்லியில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: "நிதி நிலைமையைச் சீராக்குவதற்கான வழிகளும், யோசனைகளும் தெரியாமல் மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் தவிக்கின்றனர். இந்த நிலைக்கு பிரதமரும், அவரது அமைச்சர்களுமே காரணம். இறக்குமதி, ஏற்றுமதிக் கொள்கைகளை சரியான முறையில் வகுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இவர்களின் அலட்சியத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் நிலையும், தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆளுகைத் திறன் இல்லாவிட்டால் அதை ஒப்புக் கொண்டு பதவியில் இருந்து மன்மோகனும், சிதம்பரமும் விலக வேண்டும்' என்றார் பிரகாஷ் ஜவடேகர்.
யஷ்வந்த் சின்ஹா:÷பாஜக முத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த சின்ஹா கூறியது: ""பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் மத்திய அரசு உள்ளது. பங்குச் சந்தையும், ரூபாய் மதிப்பும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு பதவியிலிருந்து விலகி, தேர்தலைச் சந்திப்பதுதான் சரியாக இருக்கும்'' என்றார்.

துர்க்கா IAS மீண்டும் பதவியில் ! முலாயம்சிங்கை சந்தித்து பேசினார்

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கை
சந்தித்து பேசினார். இதனால் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவு ரத்து ஆகிறது. இடைநீக்கம் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால். கிரேட்டர் நொய்டாவில், மசூதியின் காம்பவுண்டு சுவரை இடிக்க உத்தரவிட்டதாக கூறி இவரை உத்தரபிரதேச மாநில அரசு கடந்த ஜூலை மாதம் 27–ந் தேதி பணி இடைநீக்கம் செய்தது. ஆனால் மணல் கடத்தல் கும்பலுக்கு எதிராக துர்கா தீவிர நடவடிக்கை எடுத்ததால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.துர்கா இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சோனியா காந்தி கடிதம் என்றாலும், துர்காவை இடைநீக்கம் செய்து மேற்கொண்ட நடவடிக்கையை உத்தரபிரதேச அரசு நியாயப்படுத்தியது. துர்காவுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கும் உத்தரபிரதேச மாநில அரசுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

புதன், 28 ஆகஸ்ட், 2013

14 மாணவிகளை வார்டன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் ! இங்கு யாருக்கும் வெட்கமில்லை ?

அருணாசல் பிரதேசத்தில் மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபாலியில்
தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிகூடத்திற்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரை தொடரந்து லிகாபாலி போலீசார் அந்த தங்கும் விடுதியின் வார்டன விபின் விஸ்வான் என்பவரை கைது செய்தனர்.அவனிடம் விசாரணை நடத்தியதில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அந்த விடுதியில், இருந்த 14 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இவர்கள் 3 வயதில் இருந்து 13 வயது உடையவர்கள். மேலும் மாணவிகள் பள்ளி ஆசிரியர்களின் காம பசிக்கும் இந்த வார்டன் அவர்களை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறும் போது, இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வார்டன் மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான் இது அவர்களது பெற்றோர்கள் வாயிலாக வெளியே வந்து உள்ளது என்று தெரிவித்துள்ளனர்

ஒரே காவல்நிலையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நியமனம் ! ம்ம்ம் இப்படிதான் இருக்கவேண்டும் பொம்பளே

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தும்பைபட்டியைச் சேர்ந்த எம்.முத்தையா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ‘’எனக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். இதில் மகன்கள் இருவரும் தும்பைப் பட்டியில் உள்ள 7 ஏக்கர் விவசாய நிலத்தை பராமரித்து வருகின்றனர். எனது மகள் ராஜேஸ்வரி அந்த நிலத்தில் உரிமை கோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந் நிலையில் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக தர்மராஜ் என்பவர் மேலூர் போலீஸ் தலைமைக்காவலர் முத்துக் குமார் துணையுடன் எனது நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு மிரட்டி வருகிறார். மேலும் குவாரி உரிமையா ளர்களுக்கு நிலத்தை வழங்குமாறு மிரட்டுகின்றனர்.எனவே தலைமைக்காவலர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறைச் செயலர், டிஜிபி, ஐஜி ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியும் பலன் இல்லை. இதில் தொடர்புடைய முத்துக்குமாரின் தங்கை மாரீஸ்வரி சார்பு ஆய்வாளராகவும் அக்காள் செண்பகவல்லி போலீஸ்காரராகவும் அவரது கணவர் வைரவசுந்தரம் தலைமைக் காவலராகவும் மேலூர் காவல் நிலையத்தில் பணியாற்றுகின்றனர்’’ என மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன்,  ஒரே போலீஸ் நிலையத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பணியாற்ற அனுமதித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மாவட்ட ஊரக காவல் கணகாணிப்பாளர் வி.பால கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார்</

நீரா ராடியா டேப் விவகாரம்.. மூடிய அறைக்குள் விசாரணை-

டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியா டேப் விவகாரம் தொடர்பாக மூடிய அறைக்குள் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப் விவகாரம். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலருடனும் நீரா ராடியா பேசிய தொலைபேசிய உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நீராவின் உரையாடல் கசிய விடப்பட்டதற்கு எதிராக தொழில் அதிபர் ரத்தன் டாட்டா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சீரமைக்க மோடிக்கு நீதிமன்றம் உத்தரவு !

காந்தி நகர்: குஜராத்தில் 2002-ம் ஆண்டு கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளின் சீரமைப்புச் செலவை அரசே ஏற்கத் தயார் என்று முதல்வர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன. சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. ஆனால் இந்த வேண்டுகோளை குஜராத் அரசு முதலில் நிராகரித்து விட்டது. இதனையடுத்து, சேதமடைந்த 535 மசூதிகளை அரசு செலவில் சரிபடுத்தி தரும்படி உத்தரவிட வேண்டும் எனறு அந்த கமிட்டி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதிமன்றம், 'மசூதிகளுக்கு ஏற்பட்ட சேதங்களை சரி செய்வதற்கு ஆகும் செலவை குஜராத் அரசு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.

வரலட்சுமி: படங்கள் ஏற்காவிட்டாலும் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தேன்

சென்னை:வரலட்சுமி.போடா போடி படம் மூலம் அறிமுகமானார்  நடித்த 2 படங்களுமே தாமதம் ஆனதால் வருத்தமா என்பதற்கு இந்த படமும் சில மாதங்களுக்கு முன்பே ரிலீசாக வேண்டியது. ஆனால் தாமதம் ஆகிவிட்டது. அடுத்தடுத்து இரண்டு படங்களுமே தாமதம் ஆனதால் வருத்தமா என்கிறார்கள். போடா போடியில் நடிக்கும்போதே சினிமாவை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். அதனால் படம் தாமதம் ஆவது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஒரு படம் நன்றாக இருந்தால் எப்போது ரிலீசானாலும் ஓடும்.மதகஜ ராஜாவில் எனது இன்னொரு முகத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள். அதாவது இதில் கிளாமர் வேடம் ஏற்றிருக்கிறேன். போடா போடி படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்த கேரக்டர் இருக்கும்.

திறந்தவெளி BAR ஆன ஆறுபடைவீடு கோயில் குளம் ! tasmac தமிழா drink

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperகும்பகோணம்:தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமி மலையில் உள்ள முருகன் கோயில், அறுபடை வீட்டில் 4வது படை வீடாக கருதப்படுகிறது. பிரணவ மந்திரத்தை சிவபெருமானுக்கு முருகர் உபதேசம் செய்த தலம். ஆடிக்கிருத்திகை விழாவின்போது, நேத்திர புஷ்கரணி தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெறும். மழைநீர் மூலம் குளம் நிரப்பப்படும். மழை பெய்யாவிட்டால், தனி கால்வாயில் இருந்து காவிரி ஆறு மூலம் தண்ணீர் நிரப்பப்படும்.

இசைக்கு மொழியில்லை ஜாதி இருக்கிறது ! மதிமாறன்


 by வே.மதிமாறன்
pancharathna
பூணூல் போட்டவா யாரும் மேளம் அடிக்க மாட்டா, மேளம் அடிக்கிறவா யாரும் பூணூல் போட மாட்டா, அதனாலேயே தோளில் துண்டும் போட விட மாட்டா 
this program sponsored by ‘இசைமேதை’ கருப்பையா   ‘சாஸ்திரிகள்’-( போட்டுக்கலாம்னு  ஆசைதான்  கடைசிவரை முடியலையே)
*
பாடல்களில் மொழியை விட இசையே சிறப்பு. இசை தான் வார்த்தைகளைத் தாண்டிய உணர்வுகளை பிரதிபலிக்கும் என்று அடிக்கடி எழுதுகிறீர்கள். அதைத்தான் பார்ப்பனர்களும் சொல்கிறார்கள். “கர்நாடக சங்கீதத்தை தமிழில் பாடு” என்றால், “இசைக்கு மொழி முக்கியமில்லை. மொழிகளை கடந்தது இசை” என்கிறார்கள். உங்களின் இசை பற்றிய கருத்து தமிழ் விரோதமும் பார்ப்பன தன்மையும் உள்ளதாக இருக்கிறது. அவர்களுக்கும், இசை பற்றிய உங்களின் புரிதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை?
-வீரபாண்டியன்.
நிச்சயம் இருக்கிறது.
வார்த்தைகளால் பாடுவதைவிட வாத்தியக் கருவிகளால் இசைக்கப்படுகிற இசையே உன்னதம். அது தருகிற உணர்வுகளை ஒரு போதும் மொழியால் முடியவே முடியாது, என்பதை இன்னும் கூடுதலாக அழுத்திச் சொல்கிறேன். பாடலில் கூட ‘சந்தம்’ தான் உங்களை முதலில் ஈர்க்கிறது. மொழி இரண்டாம் பட்சம்தான்.

குழந்தைகள் வீட்டிலும், பள்ளியிலும் சித்திரவதை

கற்றது தமிழ் திரைப்படத்தின் இயக்குனர் ராம்’ என்று இயக்குனர் ராம் அவர்களை இனி அறிமுகப்படுத்தத் தேவையிராது. தங்க மீன்கள் திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸானதிலிருந்தே ரசிகர்களால் தங்க மீன்கள் ராம் என்று அழைக்கப்படுகிறார். ஆகஸ்டு 30-ஆம் தேதி பல நெருக்கடிகளை நீந்திக் கடந்து ரிலீஸாகவிருக்கிறது தங்க மீன்கள். அப்பா-மகள் உறவுக்கிடையேயுள்ள பாசப்போராட்டத்தை அழுத்தமாக இத்திரைப்படத்தில் பதிவு செய்திருக்கும் இயக்குனர் ராம், நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், அப்பா-மகள் உணர்ச்சிப் போராட்டத்தைத் தவிர தங்க மீன்கள் எந்தெந்த பிரச்சனைகளை நீந்திச் செல்கிறது என்று கூறியுள்ளார்.பேட்டியில் பேசிய ராம் “ தங்க மீன்கள் மற்றுமொரு உண்மையை பதிவு செய்திருக்கிறது. இந்தியா 1992-ல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, கல்வித்துறையை தனியார் வசம் ஒப்படைக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.அதனால் இப்போது பன்னி குட்டி போட்டது மாதிரி எங்கு பார்த்தாலும் தனியார் பள்ளிகள் இருக்கின்றன. அத்தனை பள்ளிகளிலும் வேலை செய்ய தகுதியான ஆசிரியர்கள் இல்லை.

அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ! லஞ்சமும் ஒரு காரணாமா ?

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு அன்றாடம் இழைக்கப்படும் கொடு
மைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பட்டியல் வருமாறு:-"
 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்  தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில்  மாற்று முறை குறை தீர்வு மையக் கட்டிடம் ஒன்று ரூ. 3.20 கோடி செலவில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா  20-8-2013 அன்று நடைபெற்றபோது, முதலமைச்சர் ஜெயலலிதா அதிலே கலந்து கொண்டு, மகளி ருக்காக அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையெல்லாம் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்.
பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் இடர்ப்பாட்டிற்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்தத் திட்டங்களை யெல்லாம் அ.தி.மு.க. அரசு அமலாக்கி வருகிறது என்று கூறியதோடு, மற்ற மாநிலங்களுக் கெல்லாம் வழிகாட்டியாகச் செயல்படுவதாகவும் பேசியிருப் பதைப் படித்தபோது,  என் கண் எதிரே, 2-2-2000 அன்று தர்மபுரி நகரில் அ.தி.மு.க.வினர் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து ஒன்றினை வழிமறித்துத் தீயிட்டபோது உடல் கருகி அலறிக் கொண்டே இறந்த மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் தான் தெரிந்தனர்.

வழக்குகளில் தண்டனை பெறும் அரசியல்வாதிகள் பயப்படவேண்டியதில்லை ! உங்களை பாதுகாக்கும் சட்டம் ஒருமனதாக ராஜ்யசாபாவில்

  புதுடில்லி:குற்ற வழக்குகளில், தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, நெருக்கடி கொடுக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை, பயனற்றதாக்கும் சட்ட திருத்த மசோதா, நேற்று, ராஜ்யசபாவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.ஊழல் கறைபடிந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையிலான தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில் அளித்தது. அதில், "குற்ற வழக்குகளில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள் தண்டனை பெற்றால், அவர்களின் பதவியை பறிக்க வேண்டும். சிறையில் இருப்பவர்களும், போலீஸ் காவலில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது இதனால், அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. இதற்கு முட்டுக் கட்டை போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசும், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்தது.

கலைஞர்: பசியை போக்கும் மணிமேகலையாக சோனியா திகழ்கிறார்

சென்னை : "பசியை போக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை
நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை சார்பில், திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின், 115வது பிறந்த தின விழா சென்னையில் நேற்று நடந்தது. வழுவூர் ரவி வரவேற்றார். நாதஸ்வர கலைஞர் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி பிள்ளை, நாதஸ்வர கலைஞர் கீவளுர் கணேசன், தவில் கலைஞர் இலுப்பூர் நல்லகுமார் ஆகியோருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி பரிசு வழங்கி பேசியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சுதந்திரம் பெற்றது போன்ற உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

அநாதை இல்ல சிறுமியை இருவாரங்களுக்கு மணமகளாக விற்ற கொடுமை !

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு அனாதை இல்லத்தை சேர்ந்த 17 இந்நிலையில் தனது மகளுக்கு அனாதை இல்லத்தில் உள்ளவர்கள், கட்டாய திருமணம் செய்து வைத்தனர் என்று கூறி அந்த சிறுமியின் தாயார், போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிறுவர், நீதிச்சட்டப்படி வரதட்சணை கொடுமைக்கு எதிரான குற்றம் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றம் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு குறித்து முழு விவரத்தை அளிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஆசிரம் நிர்வாகம் பெற்றோர் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடந்தது என்று ஆவணங்களை காட்டியுள்ளது.
வயது சிறுமிக்கு கடந்த ஜூன் மாதம் ஐக்கிய அரபு குடியரசு நாட்டை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடந்தது. பின்னர் அவர்கள் இருவரும் தேனிலவு கொண்டாட இரண்டு வாரம் காலம் கோழிக்கோடு மற்றும் குமாரகம் சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர். அதன்பின்னர் அந்த நபர் துபாய் சென்றுவிட்டார். ஆனால், தன் விருப்பத்திறகு மாறாக திருமணம் நடந்ததாகவும், தன்னை திருமணம் செய்த நபர், கோழிக்கோடு மற்றும் குமாரகத்திற்கு அழைத்துச் சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்த சிறுமி குற்றம் சாட்டினார்.

உச்சநீதிமன்றம் : சமரசத்திற்கு இடமில்லை ! பாலியல் கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவரே குற்றவாளியை மன்னித்தாலும் ,,,

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவரே குற்றவாளியை மன்னித்தாலும் சமரசத்திற்கு இடம் அளிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகள் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இடையேயான சமரச ஒப்பந்தம் ஏற்படுத்துவது சட்டவிரோதமானது எனக் கூறியுள்ளது. < பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், சமரசம் செய்து கொள்ள விசாரணை நீதிமன்றங்கள் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். பாலியல் குற்றவாளிகளுக்கு ஒருபோதும் கருணை காட்டக் கூடாது எனக் கூறிய நீதிபதிகள் பாதிக்கப்பட்டவரே குற்றவாளியை மன்னித்துவிட்டாலும் தவறு செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

ஈவ்டீசிங்கை தடுத்த சகோதரனை கொன்ற இருவருக்கு மரண தண்டனை !

டெல்லி சுல்தான்பூரியில் 2009-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி இரவு சிவபக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் தெருவில் ஆடிப்பாடி அவர்கள் சென்றதை பார்க்க பொதுமக்கள் திரண்டனர். அப்போது, உள்ளூர் ரவுடிகளான சுனில் மற்றும் சுதிர் ஆகியோர், அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணிடம், ஆபாசமாக சைகைகளை காட்டி ஈவ் டீசிங் செய்துள்ளனர். இதனை அவரது சகோதரனும், தாயாரும் தடுத்தபோது பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அந்த பெண்ணின் சகோதரனை சுனில், சுதிர் மற்றும் அவர்களின் நண்பர்கள் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

chennai கல்லூரி மாணவர்கள் பயங்கர சண்டை அரிவாள் வெட்டு ! தமிழ்த்திரை பழக்கிய அரிவாள் சண்டை

சென்னை: சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலின் போது ஒரு மாணவரை 25க்கும் மேற்பட்டவர்கள் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டியதில் பதற்றம் உருவானது. ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை அங்குள்ள மல்ட்டி ப்ளெக்ஸ் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும், நியூ காலேஜ் மாணவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறி பெரிய மோதல் உருவானது. இந்த நிலையில் நேற்று சண்டையில் காயம் அடைந்த மாணவர்கள் பழிக்கு பழி வாங்க தாக்குவதற்காக இன்று எக்ஸ்பிரஸ் அவென்யூ பகுதியில் நின்றிருந்தனர். பகல் 11.30 மணியளவில் அங்கு நியூ காலேஜ் மாணவர்களும், நந்தனம் கலை கல்லூரி மாணவர்களும் பயங்கரகமாக மோதிக் கொண்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஜெயாவின் சகல சொத்துக்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க திமுக மனு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் புதிய மனு ஒன்றை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகை உட்பட அசையும் சொத்தை ஒப்படைக்க வேண்டும். அசையும் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்வரை வழக்கை நடத்தக் கூடாது என்று கூறியிருந்தார்.
க.அன்பழகன் மனுவுக்கு செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவிடம் 1997ல் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஆர்.பி.ஐ. பாதுகாப்பில் உள்ளனnakkheeran.in

Mumbai திரையுலகத்தினரின் கற்பழிப்புக்கு எதிரான ஊர்வலம்

மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த
23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ஆம் தேதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது போன்ற தொடர் நிகழ்வுகள் பொதுமக்களிடையே கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  மும்பையில் நடந்த நிகழ்ச்சி குறித்து, பல ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் கோபத்தை இணையதளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.அவர்களில் சோனம் கபூரும் ஒருவராவார். இவர் நடிகர் அனில் கபூரின் மகளாவார்.முன்னாள் மாடல் அழகியான இவர், பிரான்ஸ் நாட்டு அழகுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான லோ ரியலின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார். 

அரசு வக்கீல் பவானி சிங் நீக்கம்! ஜெ.,சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக கோரிக்கை ஏற்பு !

பெங்களூரு: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை
நடத்தி வந்த அரசு வக்கீல் பவானிசிங் அதிரடியாக மாற்றப்பட்டார். குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளிடம் சரியான குறுக்கு விசாரணை செய்யவில்லை என குற்றம் சாட்டி இவரை மாற்ற வேண்டும் என தி.மு.க.,தரப்பில் கோர்ட்டில் மனு செய்திருந்தது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதால் தி.மு.க.,வுக்கு மகிழ்ச்சியும், அ.தி.மு.க.,வுக்கு பின்னடைவும் ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன். இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி பாலகிருஷ்ணா முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அரசு வக்கீல் பவானி சிங், தன் கடமையை சரியாக செய்யவில்லை. எனவே, அவரை மாற்ற வேண்டும். அதுவரை, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என, தி.மு.க., பொது செயலாளர் அன்பழகன், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

விடியோ கேம் திரில்லில் பாட்டியை சுட்டுகொன்ற பேரன் desensitization games

An eight-year-old boy shot intentionally shot and killed his own grandmother after playing the violent video game Grand Theft Auto IV.அமெரிக்காவில் 8 வயது
சிறுவன் ஒருவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தனது பாட்டியை சுட்டுக் கொலை செய்துள்ளான். அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மேரி ஸ்மாதர்ஸ்(87). அவர் தனது 8 வயது பேரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் அந்த சிறுவன் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ IV என்ற வீடியோ கேமை விளையாடி உள்ளான் அதன் பிறகு அவன் டிவி பார்த்துக் கொண்டிருந்த தன்னுடைய பாட்டிக்கு பின்னால் வந்து நின்றுள்ளான். வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவன் தனது பாட்டியின் தலையில் சுட்டான். இதில் மேரி தலையில் குண்டடிபட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். விசாரணையில் சிறுவன் துப்பாக்கியில் இருந்து குண்டு ஏதேச்சையாக வெளிவந்ததாக முதலில் தெரிவித்தான். ஆனால் மேலும் விசாரணை நடத்தியதில் சிறுவன் வேண்டும் என்றே சுட்டது தெரிய வந்தது. லூசியானா சட்டப்படி 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு குற்றத்திற்கான தண்டனையில் இருந்து விதிவிலக்கு உள்ளது. அதனால் சிறுவன் மீது எந்த குற்றமும் சுமத்தப்படாது tamil.oneindia.in

பாலியல் பலாத்காரங்கள் அதிகரிப்பு! நடவடிக்கை என்ன? மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு! நடவடிக்கை என்ன? அனைத்து
மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஹரியானாவில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு,  சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆர்.எம்.லோதா மற்றும் மதன் பிலோகுர் ஆகியோர் கொண்ட டிவிஷன் பென்ச் முன்பு 26.08.2013 திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது, சூழ்நிலை மிகவும் மோசமான நிலைக்கு செல்வதை காட்டுகிறது என்று கண்டனம் தெரிவித்தனர்.

சிரஞ்சீவிக்கு டி.ஆர்.எஸ் :நாக்கை அறுத்துடுவோம் ! இவர் ஒருவரே போதும் தெலுங்கானவை ஒருவழி பண்ணுவார் ?

ஹைதராபாத்: தெலுங்கானாவுக்கு சொந்தமான ஹைதராபாத்தை யூனியன்
பிரதேசமாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சிரஞ்சீவி உட்பட யார் கோரிக்கை விடுத்தாலும் நாக்கை வெட்டிவிடுவோம் என்..று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. தெலுங்கானா தனி மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஹைதராபாத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்துவிட்டால் கடலோர ஆந்திரா, ராயலசீமாவின் போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும் என்று மத்திய அமைச்சர் சிரஞ்சீவி யோசனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய ராஷ்ட்டீரிய சமிதி எம்.எல்.ஏ.வும், சந்திரசேகரராவ் மருமகனுமான ஹரிஸ்ராவ், ஹைதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக யார் அறிவித்தாலும் அவர்களின் நாக்கை தெலுங்கானா மக்கள் அறுத்து எறிவார்கள். அது சிரஞ்சீவி உள்பட யாராக இருந்தாலும் அனைவருக்கும் இது பொருந்தும். ஹைதராபாத் தங்களுக்கு சொந்தம் என்று யார் கூட்டம் நடத்தினாலும் எங்களது விஸ்வரூபத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.
tamil.oneindia.in

சோனியா காந்தி திடீர் உடல்நலகுறைவு ! உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் ஏற்பட்ட விளைவு ?

புதுடெல்லி
பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடந்து கொண்டிருந்தபோது, காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்திக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக, மருத்துவ பரிசோதனைக்காக டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
திடீர் உடல் நலக்குறைவு
பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்ட மசோதா மீது நேற்று இரவு வரை காரசாரமான விவாதம் நடைபெற்றது. 8 மணிக்கு மேல், மசோதாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மீது ஓட்டெடுப்பு நடைபெற்றுக்கொண்டு இருந்தது.8.15 மணி அளவில், சபையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவர் உடனடியாக டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (‘எய்ம்ஸ்’) ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுச் சென்றார்.

உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது !

* நாட்டின் 70 சதவீத மக்களுக்கு குறைந்த விலையில் மாதந்தோறும் உணவு தானியம் கிடைப்பதை மசோதா உறுதி செய்கிறது.
* இதன் மூலம் அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.3 வரை ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கிடைப்பது உறுதி செய்யப்படும்.
* இந்த திட்டத்தின் கீழ் 6.2 கோடி டன் அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
* இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் ஸி1.25 ஆயிரம் கோடி செலவாகும்.

* மக்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியம் கிடைக்க செய்யும் இந்த திட்டம் உலகிலேயே மிகப் பெரிய மக்கள் நலத்திட்டமாபுதுடெல்லி : உணவு பாதுகாப்பு மசோதா,  மக்களவையில் நேற்று 9 மணி நேர காரசார விவாதத்துக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு மசோதா கடந்த 7ம் தேதி மக்களவையில் தாக் கல் செய்யப்பட்டது. நேற்று மசோதா விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ், ‘‘தமிழகம், கேரளா மாநிலங்கள் வேண்டுகோளை ஏற்று அந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

சோனியா காந்தி: உணவு பாதுகாப்பு மசோதா ! தேர்தல் வாக்குறுதி !

புதுடெல்லி: 2009ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே உணவு பாதுகாப்பு மசோதா என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மக்களவையில் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு மசோதா குறித்த விவாதத்தில் பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தான் மகிழ்ச்சியடைவதாக கூறிய அவர், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என தனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
ஏழை மக்களுக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதாக கூறிய சோனியா, மசோதா நிறைவேற்றுவதன் மூலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார். உணவுக்கான சட்ட உரிமையை அளிப்பது நாடாளுமன்றத்தின் வசம் உள்ளதாக கூறிய சோனியா காந்தி, மக்களுக்கு உணவு தரும் கடமையை இந்தியா ஏற்றுள்ளதை உலகுக்கு அறிவிக்கும் நாள் எனக் கூறினார்.

வளைகுடா நாடுகளுக்கு பொதுவான விசா நடைமுறை விரைவில் Schengen-type common visa

- Six Arabian Gulf countries are now taking steps to adopt a Schengen-type common visa system to attract more tourists and businessmen
 ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 25 நாடுகளுக்கும், உறுப்பினரல்லாத ஐஸ்லாந்து, நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கும் சேர்த்து தற்போது 'செங்கன் விசா' என்ற நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்த நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்புவோர் ஒரு விசா அனுமதி பெறுவதன்மூலம் அனைத்து நாடுகளுக்கும் சென்றுவர முடியும். இதனால் பயணிகளுக்கு காலவிரயம் ஏற்படாமல் தடுக்கப்படுவதுடன், ஐரோப்பாவின் பெரும்பான்மையான நாடுகளுக்கு சென்றுவர இது எளிதான நடைமுறையாகவும் இருக்கிறது. இதே போன்றதொரு பொதுவான விசா நடைமுறையை வளைகுடா நாடுகளுக்கும் கொண்டுவர வளைகுடா கூட்டுறவு கவுன்சில் முடிவு செய்துள்ளது. வரும் 2014-ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படும் இந்தத் திட்டத்தால் பயணிகளின் பயண விதிமுறைகள் எளிதாக்கப்படும் என்று கவுன்சிலின் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், அரேபியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகள் இந்தக் கூட்டுறவு கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ளன.

தேசியக்கொடி ஏற்ற சுதந்திரமில்லாத தலித்மக்கள் ! ஆதிக்க சாதியிடம் இருந்து இன்னும் விடுதலை பெறவில்லை !

ராகுல்ரவிதாஸ் கோயில்பீகார் மாநிலம் ரோத்தாஸ் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற கிராமத்தில் இந்த ஆண்டு ‘சுதந்திர’ தினத்தன்று குரு ரவிதாஸ் கோவிலின் முன்பாக மூவர்ணக் கொடி ஏற்றுவது தொடர்பான சச்சரவில் தாழ்த்தப்பட்ட சமார் சாதியினர் மீது ஆதிக்க சாதி இராஜபுத்திர சாதி வெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் விலாஸ் ராம் என்ற தலித் கொல்லப்பட்டார். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட 54 பேர் படுகாயமடைந்து பாட்னா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது விளையாடிக் கொண்டிருந்த பல குழந்தைகள் ஆலயத்தின் கூரைப் பகுதியில் இருந்து கீழே தூக்கி வீசி எறியப்பட்டுள்ளனர். இரும்புக்கம்பி, தடிகள், பெட்ரோல் குண்டுகளுடன் நடந்த இத்தாக்குதலில் சமார் சாதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கருக்கலைந்து போயுள்ளது. ரவிதாஸ் ஆலயம்< ஆதிக்க இராஜபுத்திர சாதியினர் சுமார் 500 பேர் திரண்டு வந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஏற்கெனவே சமார் சாதியினர் வழிபடும் குரு ரவிதாசின் கோவிலானது தங்களது சாதியை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் நிஷாந்த் சிங் பெயரில் அமைந்த பள்ளிக்கூடத்தை மறைக்கும் விதமாக அமைந்திருப்பதாக அவர்கள் பிரச்சினையை கிளப்பி வந்தனர்.

மும்பை பலாத்கார குற்றவாளிகள் ஏற்கனவே பல பெண்களை பலாத்காரம் செய்துள்ளார்கள்

மும்பை: மும்பையில் பெண் நிருபரை பலாத்காரம் செய்த கும்பல் ஏற்கனவே பல் பெண்களை சீரழித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த வாரம் வியாழக்கிழமை மும்பை மகாலட்சுமி பகுதியில் பாழடைந்த மில் ஒன்றை படம் பிடிக்க சென்ற பெண் பத்திரிகையாளர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை விரைவு நீதிமன்றம் விசாரிக்கும் என மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்துள்ளார். மேலும் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக செயல்பட்ட உஜ்வல் நிகாம் இந்த வழக்கிலும் அரசு தரப்பு வக்கீலாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு flashback : நடிகர் விஜயின் நாக்கில் சனி ;அம்மாவின் ஆட்சி அமைய தானும் காரணமாம்

திங்கள், 30 மே, 2011  இது நம்ம பழைய செய்தி ஒன்று

நடிகர் விஜயின் நாக்கில் சனி ;அம்மாவின் ஆட்சி அமைய தானும் காரணமாம்  ஜெயலலிதா தனது வெற்றிக்கு யாரும் உரிமை கோருவதை சகிக்க முடியாதவர் என்பது தம்பி விஜய்க்கு தெரியாது போலும் யாரவது எடுத்து சொல்லுங்களேன் அவர் பாவம் சார்ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்: நடிகர் விஜய்
ஜெயலலிதா ஆட்சி அமைய அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் என்று நடிகர் விஜய் பேசினார்.
சென்னையில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் 29.05.2011 அன்று மாலை நடிகர் விஜய், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை திடீரென சந்தித்தார். நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், நமது இயக்கம் அதி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன். நீங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, என் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஜெயலலிதாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, நாமும் ஓர் அணிலாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.

சத்யராஜ் பட இயக்குனர் : தலைவா சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை கொன்றுவிடுவதாக மிரட்டினார் !

உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும், எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்த பிரச்சினையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ‘தலைவா’ திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.

குழந்தையை கடத்தி கொன்றதாக தந்தை மீது புகார் !

குழந்தையை கடத்தி கொன்றதாக தந்தை மீது புகார்: நடவடிக்கை எடுக்க
கோரி கலெக்டரிம் மனு குழந்தையை கடத்தி கொன்றதாக தந்தை மீது புகார்: நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிம் மனு வேலூர் அடுத்த பென்னாத்தூரை சேர்ந்தவர் மஞ்சுளா. குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் சங்கரிடம் இன்று மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது தம்பி ஜெகதீசன் (வயது 34). மைசூரில் வசித்து வருகிறார். இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் சவுமியா (வயது 8). ஜெகதீசன் பெண் குழந்தை வேண்டாம் என்று கூறினார். இதனால் அந்த குழந்தையை நான் தத்து எடுத்து வேலூரில் வளர்த்து வந்தேன். 5 வருடங்களுக்கு பிறகு என்னிடம் வந்த ஜெகதீசன் எனக்கு ரூ.4 லட்சம் கொடு அல்லது குழந்தையை கொடு என்று கேட்டான். நான் ரூ.2½ லட்சம் கொடுத்தேன். பின்னர் 1 வருடம் கழித்து ரூ.10 லட்சம் கேட்டான். நான் பணம் தரமுடியாது என்று கூறினேன்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் பள்ளிக்கு சென்று திரும்பும் போது குழந்தையை கடத்தி சென்று விட்டான். பின்னர் அந்த குழந்தையை மைசூருக்கு கொண்டு சென்று கொலை செய்து விட்டான்.

மனநோயாளிகளை அடைத்து வைத்து லட்சக்கணக்கில் சம்பாதித்த போலி டாக்டர்

மன நோயாளிகளை வைத்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாதித்தேன்: போலி
மருத்துவர் வாக்குமூலம்" மன நோயாளிகளை வைத்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாதித்தேன்: போலி மருத்துவர் வாக்குமூலம்" பாரிமுனையில் உள்ள பிரபல லாட்ஜ் ஒன்றில் மனநோயாளிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் தாமரைக் கண்ணன், இணை கமிஷனர் ஸ்ரீதர், துணை கமிஷனர் நிர்மல் குமார் ஜோஷி, உதவி கமிஷனர் முரளி ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் அந்த லாட்ஜை சோதனையிட்டனர். அப்போது அந்த லாட்ஜில் 3 அறைகளில் 6 மன நோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 6 வயது சிறுமி ராஜேஸ்வரி வாய் பேசாதவள். மற்றவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரியா, காஞ்சீபுரத்தை சேர்ந்த கண்ணகி, மேற்கு வங்காளத்தை சேர்ந்த முன்னா, ஆந்திராவை சேர்ந்த லட்சுமணராவ், மராட்டியத்தை சேர்ந்த ராகு என்பது தெரிய வந்தது. இந்த 6 மன நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களை பிச்சை எடுக்க வைத்து சுந்தர் (40) என்பவர் சம்பாதித்ததும் தெரிய வந்தது. மன நோயாளிகளை பராமரிப்பதற்காக கே.எம்.கார்டனை சேர்ந்த ஆனந்தி (32), பெரியமேட்டை சேர்ந்த தமயந்தி (38) ஆகியோர் நர்சுகளாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

ஜுவாலா கட்டா வருத்தம் அசிங்கமாக கமெண்ட் அடிக்கிறார்களே ! நமது பாரம்பரியம் கலாசாரம் சனாதனம் எல்லாம் இதுதான் அம்மணீ

பெங்களூர்: ரசிகர்கள் என்னைப் பற்றி அசிங்கமாக கமெண்ட் அடிக்கிறார்கள் என்று கோபம் வெளியிட்டுள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. சமீபத்தில் கட்டாவுக்கும், சாய்னா நேவாலுக்கும் இடையே டிவிட்டரில் போர் வெடித்தது. இந்த நிலையில் ரசிகர்கள் மீது தனது கோபத்தைத் திருப்பியுள்ளார் ஜுவாலா கட்டா.பெங்களூர் ஸ்ரீகண்டீரவா இன்டோர் ஸ்டேடியத்தில் இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி நடந்தது. அப்போதுதான் இந்த சம்பவம் நடந்தது 
ரசிகர்களின் கமெண்ட்டால் முகம் சுளிப்பு போட்டியின்போது ஜுவாலா குறித்து ரசிகர்கள் சிலர் அடித்த கமெண்ட் அவரை கோபப்படுத்தி விட்டது
 இந்தப் போட்டியில் ஜுவாலாவும், திஜுவும் இணைந்து இரட்டையர் ஆட்டத்தில் ஆடினர். போட்டி முழுவதும் சிலர் ஜுவாலாவைப் பார்த்து கமெண்ட் அடித்தபடி இருந்ததால் அவர் முகவும் துன்பத்துடன் காணப்பட்டார்

உபியில் துப்பாக்கி முனையில் பாலியல் வன்முறை ! என்னதான் நடக்கிறது ?

உத்தர பிரதேசத்தில் திருமணமான 32 வயது பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ளது கர்முக்தேஷ்வர். அந்த நகரைச் சேர்ந்த 32 வயது பெண் நேற்று மாலை வயலில் புல் வெட்டச் சென்றார். அப்போது அவரது பக்கத்து வீட்டுக்காரர் அங்கு வந்து 3 குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்தார். இந்த விவகாரத்தை யாரிடமாவது கூறினால் உன் குழந்தைகளை கொன்றுவிடுவேன் என்று அந்த பெண்ணை அவர் மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண் தனக்கு நேர்ந்தது குறித்து தன் கணவரிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து சிம்பாவாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த நபர் அப்பெண்ணை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பும் பலாத்காரம் செய்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
tamil.oneindia.in

ஹரியானா பெண் பலாத்காரம், கொலை: 30 பேருந்துகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

ஹரியானா மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், 30 பேருந்துகளை அடித்து நொறுக்கினர். ஜின்த் மாவட்டம், வாணியக்கேடா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பி.எட். தேர்வு எழுதச் சென்றார். அவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிய உறவினர்கள், கால்வாய் ஒன்றில் சடலமாக கண்டெடுத்தனர். அவர் உடலில் ஏராளமான காயங்களும், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்த காயங்களும் இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துகளை அடித்து நொறுக்கினர். கொலையாளிகள் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். பேருந்துகளை அடித்து நொறுக்கதுடன், சாலை மறியலிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் வாகனங்களையும் சேதப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பேருந்தை இயக்க அரசு பேருந்து ஓட்டுநர்கள் மறுத்துள்ளனர்nakkheeran.in

சுஷ்மா ஸ்வராஜ் :மரண தண்டனை வழங்கவேண்டும் ! மும்பை பாலியல் குற்றவாளிகளுக்கு !

மும்பையில் கடந்த வாரம் 23 வயதான பெண் புகைப்பட பத்திரிகையாளர் 5
பேர் கொண்ட கும்பலால் பா-யல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 குற்றவாளிகளையும் படிப்படியாக கைது செய்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், இந்த பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றார்nakkheeran.in