சனி, 31 ஆகஸ்ட், 2013

சோனியா : பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிக்கப்படும் ? முதல்ல அந்த கொடிய சிறுவனை தூக்கில போடுங்க அப்புறம் வாக்குறுதி கொண்டுங்க !

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்க அனைத்து முயற்சிகளும்
எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உறுதி அளித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம், வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளை எதிர்ப்பதில் நாட்டு மக்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல வாழ்வு அமைச்சகத்தின் அகிம்சை தூதர் என்ற திட்டத்தை டெல்லியில் இன்று அவர் துவக்கி வைத்து பேசினார். பாலியல், வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றுக்கு எதிராக பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அகிம்சை தூதர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அடிப்படை சட்ட உரிமைகளை பாதுகாத்தல், வழக்குகள் தொடர்பான அடிப்படை அறிக்கை அளித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக