வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை தொடர முடிவு

புதுடெல்லி: ஏற்கனவே திட்டமிட்ட வழியில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வியாழன் அன்று நடந்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. சேது சமுத்திர திட்டத்தை ஏற்கனவே திட்டமிட்ட வழியில் நிறைவேற்றுவது என்று இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அப்துல்லா இதனை உறுதிப்படுத்தினார். இது அரசியலுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் அவர் தெரிவித்தார். தமிழக மக்களின் நீண்ட கால கனவான சேது சமுத்திர திட்டப் பணிகள் கடந்த 2005ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்கால் தொடங்கி வைக்கப்பட்டது.
< கடலுக்குள் 167 கிலோ மீட்டர் நீள கால்வாய் தோண்டும் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் திட்டத்தை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து இந்த பணிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை தொடர முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக