திங்கள், 26 ஆகஸ்ட், 2013

சத்யராஜ் பட இயக்குனர் : தலைவா சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை கொன்றுவிடுவதாக மிரட்டினார் !

உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும், எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்த பிரச்சினையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ‘தலைவா’ திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார்.
அந்த மனுவில், தற்போது சத்யராஜை கதாநாயகனாக வைத்து ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, ‘தலைவா’ படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை இரண்டு வாரங்களுக்கு முன் நேரில் அழைத்து பேசினார். அப்போது எங்களுடைய ‘தலைவா’ படத்தின் பிரச்னையில் நாளை முடிவு தெரிந்து விடும். தெரிந்ததும் ‘தலைவா’ படத்தை உடனே வெளியிடுகிறோம். உங்களுடைய ‘கலவரம்’ படம் வெளியிட்டால் எனது ‘தலைவா’ படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது. எனவே நானே உங்களுடைய படத்தினை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன். ஒப்பந்தம் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார். அதன்படி நேற்று ஒப்பந்தத்தோடு சந்திரபிரகாஷ் ஜெயினை சந்திக்க சென்றோம். அதற்கு அவர் எங்களை சந்திக்க மறுத்ததுடன், எங்களை தாழ்த்தியும் அவமானப்படுத்தியது மட்டுமில்லாது உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி படத்தை வாங்க மறுத்து விட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக