திங்கள், 26 ஆகஸ்ட், 2013

ஹரியானா பெண் பலாத்காரம், கொலை: 30 பேருந்துகளை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

ஹரியானா மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக புகார் தெரிவித்த பொதுமக்கள், 30 பேருந்துகளை அடித்து நொறுக்கினர். ஜின்த் மாவட்டம், வாணியக்கேடா என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பி.எட். தேர்வு எழுதச் சென்றார். அவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடிய உறவினர்கள், கால்வாய் ஒன்றில் சடலமாக கண்டெடுத்தனர். அவர் உடலில் ஏராளமான காயங்களும், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டிருந்த காயங்களும் இருந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பேருந்து நிலையத்தில் இருந்த பேருந்துகளை அடித்து நொறுக்கினர். கொலையாளிகள் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டினர். பேருந்துகளை அடித்து நொறுக்கதுடன், சாலை மறியலிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீசார் வாகனங்களையும் சேதப்படுத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பேருந்தை இயக்க அரசு பேருந்து ஓட்டுநர்கள் மறுத்துள்ளனர்nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக