திங்கள், 26 ஆகஸ்ட், 2013

குழந்தையை கடத்தி கொன்றதாக தந்தை மீது புகார் !

குழந்தையை கடத்தி கொன்றதாக தந்தை மீது புகார்: நடவடிக்கை எடுக்க
கோரி கலெக்டரிம் மனு குழந்தையை கடத்தி கொன்றதாக தந்தை மீது புகார்: நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிம் மனு வேலூர் அடுத்த பென்னாத்தூரை சேர்ந்தவர் மஞ்சுளா. குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் சங்கரிடம் இன்று மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: எனது தம்பி ஜெகதீசன் (வயது 34). மைசூரில் வசித்து வருகிறார். இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் சவுமியா (வயது 8). ஜெகதீசன் பெண் குழந்தை வேண்டாம் என்று கூறினார். இதனால் அந்த குழந்தையை நான் தத்து எடுத்து வேலூரில் வளர்த்து வந்தேன். 5 வருடங்களுக்கு பிறகு என்னிடம் வந்த ஜெகதீசன் எனக்கு ரூ.4 லட்சம் கொடு அல்லது குழந்தையை கொடு என்று கேட்டான். நான் ரூ.2½ லட்சம் கொடுத்தேன். பின்னர் 1 வருடம் கழித்து ரூ.10 லட்சம் கேட்டான். நான் பணம் தரமுடியாது என்று கூறினேன்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் பள்ளிக்கு சென்று திரும்பும் போது குழந்தையை கடத்தி சென்று விட்டான். பின்னர் அந்த குழந்தையை மைசூருக்கு கொண்டு சென்று கொலை செய்து விட்டான்.

ஆனால் அங்குள்ள போலீசார் மாடி படியிலிருந்து தவறி விழுந்து குழந்தை இறந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கணவன், மனைவி இருவரும் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடுகின்றனர். போலீசாரும் விசாரணை நடத்த மறுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிmaalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக