வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

வடகொரியா: காதலி உட்பட 12 பேருக்கு அதிபர் மரணதண்டனை அளித்தார் !

வடகொரியா அதிபராக கிம்ஜாங்-யுங் பதவி வகித்து வருகிறார். இவரது
முன்னாள் காதலி ஹயான் சாங்-எல் பிரபல பாப்பாடகி. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவரும் காதலித்தனர். அதை அறிந்த கிம்ஜாங்-யுன் தந்தையும் முன்னாள் அதிபருமான கிம்ஜாங்-இல் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, இவர்களது காதல் முறிந்தது. அதை தொடர்ந்து ஹயான், வடகொரிய ராணுவ அதிகாரியை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இருந்தும் அவ்வப்போது, பாடகி ஹயான் முன்னாள் காதலர் கிம்ஜாங்-யுன்னை சந்தித்து வந்தார். தற்போது உன்னாசு என்ற இசைக்குழுவை வைத்துள்ளார். இந்த இசைகுழுவில் 11 பேர் உள்ளனர் இ. இவர்கள் அனைவரும்  கவர்ச்சிகரமான ஆடைகளுடன் நடனமாடியும் செக்ஸ் காட்சிகளுடன் கூடிய இசை நிகழ்ச்சி நடத்தினர் அதை வீடியோ பம்ம் எடுத்து சீனா மற்றும் வடகொரியாவில் விற்றதாக தெரிகிறது.இதைதொடர்ந்து இவர்கள் அனைவரும் பாலியல் சட்டத்தில் கைது செய்யபட்டனர். இவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இவர்கள் 12 பேருக்கும் மரணதண்டனை வித்திக்கபட்டது. இதை தொடரந்து அவர்கள் அனைவரும் துப்பாக்கியால் சுட்டு கொல்லபட்டு தண்டனை நிறைவேற்றபட்டனர்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக