புதன், 28 ஆகஸ்ட், 2013

நீரா ராடியா டேப் விவகாரம்.. மூடிய அறைக்குள் விசாரணை-

டெல்லி: அரசியல் தரகர் நீரா ராடியா டேப் விவகாரம் தொடர்பாக மூடிய அறைக்குள் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அரசியல் தரகர் நீரா ராடியாவின் டேப் விவகாரம். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலருடனும் நீரா ராடியா பேசிய தொலைபேசிய உரையாடல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் நீராவின் உரையாடல் கசிய விடப்பட்டதற்கு எதிராக தொழில் அதிபர் ரத்தன் டாட்டா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, வி.கோபால கவுடா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, இந்த விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டு இருப்பதால், மூடிய அறைக்குள் வாதங்களை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மூடிய அறைக்குள் வியாழன்று மத்திய அரசின் விவாதம் கேட்கப்படும். அப்போது, இதுதொடர்பான ரகசிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும் என்று கூறினர்.
amil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக