திங்கள், 26 ஆகஸ்ட், 2013

உபியில் துப்பாக்கி முனையில் பாலியல் வன்முறை ! என்னதான் நடக்கிறது ?

உத்தர பிரதேசத்தில் திருமணமான 32 வயது பெண்ணை பக்கத்து வீட்டுக்காரர் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ளது கர்முக்தேஷ்வர். அந்த நகரைச் சேர்ந்த 32 வயது பெண் நேற்று மாலை வயலில் புல் வெட்டச் சென்றார். அப்போது அவரது பக்கத்து வீட்டுக்காரர் அங்கு வந்து 3 குழந்தைகளுக்கு தாயான அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்தார். இந்த விவகாரத்தை யாரிடமாவது கூறினால் உன் குழந்தைகளை கொன்றுவிடுவேன் என்று அந்த பெண்ணை அவர் மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண் தனக்கு நேர்ந்தது குறித்து தன் கணவரிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து சிம்பாவாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த நபர் அப்பெண்ணை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பும் பலாத்காரம் செய்ததாக எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக