புதன், 28 ஆகஸ்ட், 2013

14 மாணவிகளை வார்டன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் ! இங்கு யாருக்கும் வெட்கமில்லை ?

அருணாசல் பிரதேசத்தில் மேற்கு சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபாலியில்
தனியார் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிகூடத்திற்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரை தொடரந்து லிகாபாலி போலீசார் அந்த தங்கும் விடுதியின் வார்டன விபின் விஸ்வான் என்பவரை கைது செய்தனர்.அவனிடம் விசாரணை நடத்தியதில் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக அந்த விடுதியில், இருந்த 14 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இவர்கள் 3 வயதில் இருந்து 13 வயது உடையவர்கள். மேலும் மாணவிகள் பள்ளி ஆசிரியர்களின் காம பசிக்கும் இந்த வார்டன் அவர்களை பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் கூறும் போது, இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வார்டன் மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான் இது அவர்களது பெற்றோர்கள் வாயிலாக வெளியே வந்து உள்ளது என்று தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக