வியாழன், 29 ஆகஸ்ட், 2013

துர்க்கா IAS மீண்டும் பதவியில் ! முலாயம்சிங்கை சந்தித்து பேசினார்

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங்கை
சந்தித்து பேசினார். இதனால் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைநீக்க உத்தரவு ரத்து ஆகிறது. இடைநீக்கம் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால். கிரேட்டர் நொய்டாவில், மசூதியின் காம்பவுண்டு சுவரை இடிக்க உத்தரவிட்டதாக கூறி இவரை உத்தரபிரதேச மாநில அரசு கடந்த ஜூலை மாதம் 27–ந் தேதி பணி இடைநீக்கம் செய்தது. ஆனால் மணல் கடத்தல் கும்பலுக்கு எதிராக துர்கா தீவிர நடவடிக்கை எடுத்ததால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.துர்கா இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சோனியா காந்தி கடிதம் என்றாலும், துர்காவை இடைநீக்கம் செய்து மேற்கொண்ட நடவடிக்கையை உத்தரபிரதேச அரசு நியாயப்படுத்தியது. துர்காவுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதினார்.இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கும் உத்தரபிரதேச மாநில அரசுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

ரத்து ஆகிறது
இந்த நிலையில், உத்தரபிரதேச முதல்–மந்திரி அகிலேஷ் யாதவின் தந்தையும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான முலாயம் சிங்கை, துர்கா சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது நிலைப்பாட்டை விளக்கி கூறியதாக தெரிகிறது.இதைத்தொடர்ந்து, துர்காவை இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து ஆகும் என்றும், விரைவில் அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக