வியாழன், 29 ஆகஸ்ட், 2013

கலைஞருக்கு பாமக கடிதம் ! அதிமுக அரசின் அஜாரகத்திற்கு எதிராக குரல்கொடுக்க அழைப்பு

 தமிழக அரசுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடிதம் எழுதியுள்ளது. திமுக தலைமை அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி திமுக தலைவர் கருணாநிதிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் புதன் கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையையும் தனது கடிதத்தில் ஜி.கே.மணி இணைத்து உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக