வியாழன், 29 ஆகஸ்ட், 2013

ஜாமீனில் வந்தார் பவர்ஸ்டார் ! பஞ்சு டயலாக் கீரோக்கள் எல்லோருமே ஒருவிதத்தில் பவர் ஸ்டார்கள்தான்

லத்திகா திரைப்படத்தின் மூலம் உலகம் முழுக்க பிரபலமானதாக்(!) கூறப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன் கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் உண்மையிலேயே பல ரசிகர்களை கவர்ந்தார்.வருங்கால முதல்வர், இந்திய ஜனாதிபதி என்பதையெல்லாம் தாண்டி எதிர்கால அமெரிக்க ஜனாதிபதி என்று ரசிகர்களால்(!) பாராட்டப்பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன் சில மாதங்களாக பண மோசடி வழக்கில் சிறையில் தள்ளப்பட்டார்.
பவர்ஸ்டார் சிறையில் இருந்தபோது அவர் நடித்த ஆர்யா சூர்யா திரைப்படத்தின் நிகழ்ச்சிகள் நடந்துவிட்டதால், இத்திரைப்படத்தைப் பற்றி அவரால் ரசிகர்களுக்கு எதுவும் கூற முடியவில்லை.ரசிகர்கள், உறவினர்களை சந்திக்க இரண்டு நாள் ஜாமீனில் வெளிவந்த பவர்ஸ்டார் அளித்த பேட்டியில் “ரொம்ப பில்டப் குடுத்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்து நிக்குறேன். ஆர்யா சூர்யா திரைப்படத்தில் நான் ஹீரோ கேரக்டரில் நடித்திருக்கிறேன். என் மீதுள்ள நம்பிக்கையில் என்னை வைத்து இரண்டு படங்கள் எடுத்திருக்கும், என்னுடைய காட்ஃபாதர் ராமநாராயணன் சாருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
;ராமநாராயணன் சார் வழக்கமாக அனிமல்ஸை வைத்து படமெடுப்பார். ஆனால் அவரது 126-வது திரைப்படத்தில் என்னையும், விஷ்ணு ப்ரியனையும் வைத்து எடுத்திருக்கிறார். என் ஆனந்தத் தொல்லை திரைப்படம் கோச்சடையானுடன் தீபாவளியன்று எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்.மேலும் டெல்லி ஜெயிலில் இருந்த அனுபவம் பற்றி கேட்டபோது “நான் ஜெயிலில் இருந்த போது கிட்டத்தட்ட 1500 ரசிகர்கள் வந்து என்னை பார்த்துவிட்டுச் சென்றனர். ஒரு நடிகனாக சென்றதால் ஜெயிலில் எனக்கு நல்ல மரியாதை கிடைத்தது. சினிமா தொடர்பு இல்லாமல் நான் சாதாரணமாக சென்றிருந்தால், வேறு மாதிரி கவனித்திருப்பார்கள். எனவே நான் சினிமாவை நிறைய நேசிக்கிறேன்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக