செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது !

* நாட்டின் 70 சதவீத மக்களுக்கு குறைந்த விலையில் மாதந்தோறும் உணவு தானியம் கிடைப்பதை மசோதா உறுதி செய்கிறது.
* இதன் மூலம் அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள் கிலோவுக்கு ரூ.1 முதல் ரூ.3 வரை ஒரு நபருக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ கிடைப்பது உறுதி செய்யப்படும்.
* இந்த திட்டத்தின் கீழ் 6.2 கோடி டன் அரிசி, கோதுமை மற்றும் தானியங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
* இத்திட்டத்துக்கு ஆண்டுதோறும் ஸி1.25 ஆயிரம் கோடி செலவாகும்.

* மக்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியம் கிடைக்க செய்யும் இந்த திட்டம் உலகிலேயே மிகப் பெரிய மக்கள் நலத்திட்டமாபுதுடெல்லி : உணவு பாதுகாப்பு மசோதா,  மக்களவையில் நேற்று 9 மணி நேர காரசார விவாதத்துக்கு பின்னர் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு மசோதா கடந்த 7ம் தேதி மக்களவையில் தாக் கல் செய்யப்பட்டது. நேற்று மசோதா விவாதத் துக்கு எடுத்துக் கொள்ளப்பட் டது. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ், ‘‘தமிழகம், கேரளா மாநிலங்கள் வேண்டுகோளை ஏற்று அந்த மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.


பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: நாட்டின் 70 சதவீத மக்களுக்கு குறைந்த விலையில் உணவு தானியங்கள் கிடைக்க வகை செய்யும் உணவு பாதுகாப்பு மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளது. இப்போதுள்ள கடுமையான நிதி நெருக்கடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமா? என்று கேட்கின்றனர். நம்மால் செயல்படுத்த முடியுமா? முடியாதா? என்பது கேள்வி அல்ல. மக்களின் நலனுக்காக திட்டத்தை செயல்படுத்தியே ஆக வேண்டும். நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவரின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது என்ற மிகப் பெரிய செய்தியை சொல்லும் நேரம் வந்துள்ளது.

உணவு பாதுகாப்பு மசோதாவில் சில திருத்தங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கூறும் ஆக்கபூர்வமான கருத்துக்களை திறந்த மனதுடன் வரவேற்கிறோம். இதில் சில குறைபாடுகள் இருந்தாலும் சரி செய்வோம். ஆனால், மக்களின் நலன் கருதி மசோதா தொடர்பாக நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை அகற்ற வேண்டும். மசோதா நிறைவேற எல்லா எம்.பி.க்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலம் வரலாற்றை உருவாக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் மசோதா ஒருமனதாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார். விவாதத்தை தொடங்கி வைத்து பா.ஜ. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி பேசினார். தலைவர்களின் பேச்சு விவரம்:
முரளி மனோகர் ஜோஷி (பா.ஜ.): மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. நிதி நெருக்கடி உள்ள நிலை யில், இந்த மசோதா எப்படி நிறைவேற்றப்படும் இதன் பயனாளிகள் யார் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். தேர்தலுக்காக அவசரமாக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது உணவு பாதுகாப்பு மசோதா அல்ல. ஓட்டு பாதுகாப்பு மசோதா.

முலாயம் சிங் யாதவ் (சமாஜ்வாடி): உணவு பாதுகாப்பு மசோதாவால் விவசாயிகளின் நலன் பாதிக்கப் படும். தேர்தலை மனதில் கொண்டு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில முதல்வர்களை ஆலோசித்து கருத்தொற்றுமை ஏற்படும் வரை மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும். டி.ஆர்.பாலு (திமுக): ஏழைகளுக்கு ஆதரவான பல அம்சங்கள் மசோதாவில் இருப்பது வரவேற்கத்தக்கது. மாநிலங்களின் உரிமை பாதிக்கக் கூடாது. தமிழகத்துக்கு வழங்கப் படும் அரிசியின் அளவை குறைக்க கூடாது. திமுகவின் சார்பில் கொடுக்கப்பட்ட திருத்தங்களை மசோதாவில் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தம்பிதுரை (அதிமுக): உணவு பாதுகாப்பு மசோதா மூலம் தமிழகத் துக்கு கூடுதலாக ரூ.3,000 கோடி நிதிச்சுமை ஏற்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள திருத்தங் களை மசோதாவில் சேர்க்க வேண்டும். இப்போதுள்ள வடிவில் மசோதாவை ஆதரிக்க முடியாது. ஏ.சம்பத் (மார்க்சிஸ்ட்): அரிசி, கோதுமை, கம்பு போன்ற உணவு தானியங்களுடன் சர்க்கரை, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் போன்றவையும் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும்.

சரத் யாதவ் (ஐ.ஜ.த.): உணவு பாதுகாப்பு மசோதாவை வரவேற்கிறோம். அதே நேரம், இந்த மசோதா மாநில அரசுக்கு மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்தி விடக்கூடாது.
லாலு பிரசாத் (ஆர்.ஜே. டி.): வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் அனைவரையும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்.): தேர்தல் நேரத்தில் ஓட்டு ஆதாயத்துக்காக இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால், இந்த திட்டத்துக்கான நிதிச்சுமையை ஏற்கும் கட்டாயத்துக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

இதை தொடர்ந்து பல் வேறு எம்பிக்கள் கொண்டு வந்த திருத்த மசோதாக்கள் தொடர்பாக விவாதிக்கப் பட்டன.  9 மணி நேர மாரத்தான் விவாதத்தை யடுத்து நேற்றிரவு 10.50 மணியளவில் குரல் வாக்கெடுப்பு மூலம் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக