வியாழன், 29 ஆகஸ்ட், 2013

இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கல் நேபாளில் கைது

டெல்லி: பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன்
தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல். தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இருந்தார். இந்தியன் முஜாஹிதீன் நிறுவனர் யாசின் பட்கல் நேபாளில் கைது நூற்றுக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த பட்கல் கடந்த 2008ம் ஆண்டு இந்திய போலீசாரின் கைகளில் இருந்து நழுவினார். இந்நிலையில் அவரை நேபாளில் வைத்து தேசிய புலனாய்வு நிறுவனத்தார் இன்று கைது செய்துள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடக போலீசார் கொடுத்த தகவல்களை வைத்து தான் பட்கல் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக