செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

பாலியல் பலாத்காரங்கள் அதிகரிப்பு! நடவடிக்கை என்ன? மாநிலங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு! நடவடிக்கை என்ன? அனைத்து
மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ஹரியானாவில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு,  சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மாணவியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆர்.எம்.லோதா மற்றும் மதன் பிலோகுர் ஆகியோர் கொண்ட டிவிஷன் பென்ச் முன்பு 26.08.2013 திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவது, சூழ்நிலை மிகவும் மோசமான நிலைக்கு செல்வதை காட்டுகிறது என்று கண்டனம் தெரிவித்தனர்.
நடைமுறையில் என்ன தவறு இருக்கிறது? ஏன் 90 சதவீத பாலியல் பலாத்கார வழக்குகள் விடுதலையில் முடிகின்றன. ஏன் இந்த சம்பவங்கள் மீண்டும், மீண்டும் நடக்கின்றன. பெரு நகரங்களில் கூட அதிகம் நடக்கிறது. அனைத்து மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டத்தை அவசரமாக கொண்டுவர வேண்டும். அந்த திட்டத்தில் பள்ளி மாணவிகளாக இருந்தால், அவர்கள் கல்வியை தொடரவும், தங்கும் வசதி, நிவாரண உதவி, பாதிக்கட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் பாதுகாப்பு போன்ற அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர் nakheeran.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக