சனி, 31 ஆகஸ்ட், 2013

காமம் தாண்டிய காதல் ? மொள்ளைமாரி தத்துவ திரைப்படங்கள் ! அட காமத்தை தாண்டினால் எதுக்குடா மனுஷாளை காதலிக்கணும் ?


tharamanai‘இந்தி’ தலைப்பில் தமிழ் உணர்வாளரின் तमिल सिनेमा; காதல் Vs காமம் = கள்ளக்காதல்

ராம்-राम-Ram ன் அடுத்த படம் ‘தரமணி’ என்று (30-8-2013) நாளிதழில் விளம்பரம் வந்திருக்கிறது. அதில் இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரு புதுமை நடந்திருக்கிறது.
தமிழ் ‘இந்தி’ ஆங்கிலம் மூன்று மொழிகளில் ‘தரமணி’ என்று அறிவித்திருக்கிறார்கள்.தமிழ் உணர்வு அதிகமானால் இப்படியெல்லாம் ஆகுமோ? ஒரு வேளை, தரமணி ரயில் நிலையத்தில் நடைபெறும் காதல் கதையோ?
‘ரயில் நிலையத்தில் எழுதப்பட்ட இந்தி தமிழுக்கு எதிரானது’ என்று திராவிட இயக்கத்தவர்கள் ‘ரயில் நிலைய இந்தி எழுத்தின் மேல்’, தார் பூசினார்கள். அவர்களை கடுமையாக விமர்சிக்கிற தமிழ்த் தேசியவாதிகள் இந்தி பெயரிலேயே படம் எடுக்கிறார்கள். (யதார்த்தம் முக்கியம் அமைச்சரே)
தமிழுக்கு எதிராக இருந்தாலும் யதார்த்ததை கை விடாத படைப்பாளர்கள், காதலை யதார்த்தமாக பார்ப்பதில்லை. அந்த விளம்பரத்தின் கடைசியில் சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம்காதல்என்ற அந்தப் படத்திற்கான ‘பஞ்ச்’ வந்திருக்கிறது.
‘சதை தாண்டி, இச்சை தாண்டி, காமம் தாண்டி’ இதெல்லாம் ஒண்ணுதானே;. எதுக்கு தடகள ஓட்டம் போல் இத்தனைத் தாண்டல்?
‘காமம் தாண்டி சஞ்சரிக்கும் தவம் ‘காதல்’ இப்படி மட்டும் சொல்லியிருக்கலாம். ‘கா’ வுக்கு ‘கா’ எதுகை மோனையோடு எடுப்பா இருந்திருக்கும்.

சரி. அதென்ன சினிமா எடுக்கிற எல்லோரும் ‘காமத்தைத் தாண்டிய காதல்’ என்கிறார்கள்.
காமத்தை எதுக்கு தாண்டனும்? காமத்தை தாண்டி எதுக்கு காதலிக்கனும்? காமம் இல்லாமல் காதலிக்க முடியுமா? முடியுமென்றால், ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் ஏன் காதலிக்க வேண்டும்? எதாவது மரம், செடி, கொடியை காதலிச்சிட்டு போலாமே?
சஞ்சரிக்கும் தவம்காதல்’. தவம் சாமியார்தான் செய்வான். காதலர்களுக்கு எதுக்கு?
காமத்தைத் தாண்டினால், கத்தோலிக்க பாதிரியாகலாம். இந்து சாமியாராகலாம். ஆனால், அவர்களில் பலரே ரிவர்ஸ் கீர் போட்டு, காமத்திற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.
கெழட்டு சாமியார்களுக்கே காமம் வேண்டும் எனும்போது, இளைஞர்களான காதலர்களுக்கு காமம் வேண்டாம் அல்லது காமத்தைத் தாண்ட வேண்டுமென்றால், இது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்.
காமம் தாண்டிய காதல், கல்யாணத்தில் முடிந்தால்; ஹனிமூனுக்கு போக முடியாது. பலனா ‘டாக்டர்’ சேலம் சித்த வைத்தியர் சிவராஜீடம்தான் போகனும்.
காமத்தைத் தாண்டி காதலித்தால் அது காதலை வாழ வைக்காது, கள்ளக் காதலைதான் வாழவைக்கும்.
காதல் எப்படி ஒரு கவுரமான உணர்வோ அதுபோலவே காமமும்.
காதலும்-காமமும் காதலர்களின் உரிமை. அதில் அடுத்தவர்கள் எட்டிப் பார்ப்பதும் தலையிடுவதும் ‘பஞ்சாயத்து’ செய்வதும் தான் அநாகரீகம்.
tharamanai
மத்திய அரசின் தமிழ் விரோதப் போக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக