செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

chennai கல்லூரி மாணவர்கள் பயங்கர சண்டை அரிவாள் வெட்டு ! தமிழ்த்திரை பழக்கிய அரிவாள் சண்டை

சென்னை: சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதலின் போது ஒரு மாணவரை 25க்கும் மேற்பட்டவர்கள் அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டியதில் பதற்றம் உருவானது. ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை அங்குள்ள மல்ட்டி ப்ளெக்ஸ் முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும், நியூ காலேஜ் மாணவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறி பெரிய மோதல் உருவானது. இந்த நிலையில் நேற்று சண்டையில் காயம் அடைந்த மாணவர்கள் பழிக்கு பழி வாங்க தாக்குவதற்காக இன்று எக்ஸ்பிரஸ் அவென்யூ பகுதியில் நின்றிருந்தனர். பகல் 11.30 மணியளவில் அங்கு நியூ காலேஜ் மாணவர்களும், நந்தனம் கலை கல்லூரி மாணவர்களும் பயங்கரகமாக மோதிக் கொண்டனர். ஒருவரையொருவர் அவர்கள் அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நந்தனம் கலை கல்லூரி மாணவர்களை புதுகல்லூரி மாணவர்கள் ஓட, ஓட விரட்டி தாக்கினார்கள். அப்போது நந்தனம் கலை கல்லூரி மாணவர் திவாகரை சுமார் 25 மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். அவர் தலையில் அரிவாள் வெட்டு விழுந்தது. தகவல் அறிந்ததும் ராயப் பேட்டை போலீசார் வந்து அவரை மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு ராயப்பேட்டை போலீசார் மாணவர் திவாகரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது புது கல்லூரியைச் சேர்ந்த சயீது யூசுப் என்ற மாணவர் தன்னை தாக்கியதாக திவாகர் கூறினார்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் மாநில கல்லூரி மாணவர்களும் பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் மோதிக் கொள்வதுண்டு. இப்போது ராயப்பேட்டை புதுக் கல்லூரி- நந்தனம் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் இதே கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதியதில் இருவர் காயமடைந்தனர். இதற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக