வியாழன், 29 ஆகஸ்ட், 2013

3 மாதங்களில் ரூ.21,554 கோடி அன்னிய முதலீடு வாபஸ்


 தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்தது. அதனால், எழுந்த பின் விளைவுகள், போராட்டங்கள்.
 அடுத்த ஆண்டு (2014) நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கு பெரிய கட்சிகள் இப்போதே தயாராகி வருவதன் பின்னணி நிகழ்வுகள்.
 பொதுத் தேர்தல் நெருங்குவதால் எந்த ஒரு விஷயத்திலும் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறும் போக்கு.
* பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி குறைவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் (அன்னியச் செலாவணி கட்டுப்பாடுகள்), தங்கம் இறக்குமதி வரி அதிகரிப்பு இப்படி தொடர்ச்சியான நிகழ்வுகள்
புதுடெல்லி : இந்த நிதியாண்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில் இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் வங்கிகளில் இருந்து சுமார் ரூ.21,554 கோடி அன்னிய முதலீட்டை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து கடந்த ஜூன் முதல் 3 மாதங்களில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எப்ஐஐ) சுமார் ரூ.21,554 கோடிக்கும் அதிகமாக அன்னிய முதலீட்டை திரும்பப்பெற்றுள்ளனர்.


 கடந்த 5 ஆண்டுகளில் அன்னிய முதலீட்டை திரும்பப் பெற்றதில் இது இரண்டாவது பெரிய தொகையாகும். அமெரிக்க பொருளாதாரம் மீட்சி பொறுவதால் டாலர் புழக்கத்தை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் பென் பெர்னான்கே சூசகமாக அறிவித்தார். இதையடுத்து, டாலர் புழக்கம் குறைந்து மதிப்பு உயரும் என்பதாலும், டாலர் கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்பதாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மள மளவென்று தங்களது முதலீடுகளை திரும்பப் பெற துவங்கினர். கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 27ம் தேதி வரையில் மொத்தம் ரூ.21,554 கோடி (3.54 பில்லியன் டாலர்) அன்னிய முதலீடு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக செபி புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 2008 மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் (7 மாத காலத்தில்) இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து மொத்தம் ரூ.43,875 கோடி திரும்பப் பெறப்பட்டது.   அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் லேமென் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானதால் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மற்ற நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் அப்போது ரூபாயின் மதிப்பு சுமார் 23 சதவீதம் சரிவைச் சந்தித்தது. இதன் எதிரொலியால்தான் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து ரூ.43,875 கோடி (9.6 பில்லியன் டாலர் ) திரும்பப் பெறப்பட்டது.

பீதியை ஏற்படுத்திய காரணங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பீதியை ஏற்படுத்திய காரணங்கள்:

* அவசர சட்டம் மூலம் உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றம்.
* தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவித்தது. அதனால், எழுந்த பின் விளைவுகள், போராட்டங்கள்.
* அடுத்த ஆண்டு (2014) நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலுக்கு பெரிய கட்சிகள் இப்போதே தயாராகி வருவதன் பின்னணி நிகழ்வுகள்.
* பொதுத் தேர்தல் நெருங்குவதால் எந்த ஒரு விஷயத்திலும் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மத்திய அரசு தடுமாறும் போக்கு.
* பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி குறைவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் (அன்னியச் செலாவணி கட்டுப்பாடுகள்), தங்கம் இறக்குமதி வரி அதிகரிப்பு இப்படி தொடர்ச்சியான நிகழ்வுகள் dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக