புதன், 28 ஆகஸ்ட், 2013

ஒரே காவல்நிலையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நியமனம் ! ம்ம்ம் இப்படிதான் இருக்கவேண்டும் பொம்பளே

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள தும்பைபட்டியைச் சேர்ந்த எம்.முத்தையா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,  ‘’எனக்கு 2 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். இதில் மகன்கள் இருவரும் தும்பைப் பட்டியில் உள்ள 7 ஏக்கர் விவசாய நிலத்தை பராமரித்து வருகின்றனர். எனது மகள் ராஜேஸ்வரி அந்த நிலத்தில் உரிமை கோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந் நிலையில் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக தர்மராஜ் என்பவர் மேலூர் போலீஸ் தலைமைக்காவலர் முத்துக் குமார் துணையுடன் எனது நிலத்தை அபகரிக்க திட்டமிட்டு மிரட்டி வருகிறார். மேலும் குவாரி உரிமையா ளர்களுக்கு நிலத்தை வழங்குமாறு மிரட்டுகின்றனர்.எனவே தலைமைக்காவலர் முத்துக்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறைச் செயலர், டிஜிபி, ஐஜி ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியும் பலன் இல்லை. இதில் தொடர்புடைய முத்துக்குமாரின் தங்கை மாரீஸ்வரி சார்பு ஆய்வாளராகவும் அக்காள் செண்பகவல்லி போலீஸ்காரராகவும் அவரது கணவர் வைரவசுந்தரம் தலைமைக் காவலராகவும் மேலூர் காவல் நிலையத்தில் பணியாற்றுகின்றனர்’’ என மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன்,  ஒரே போலீஸ் நிலையத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பணியாற்ற அனுமதித்தது தொடர்பாக விளக்கம் அளிக்க மாவட்ட ஊரக காவல் கணகாணிப்பாளர் வி.பால கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார்</

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக