சனி, 31 ஆகஸ்ட், 2013

சினிமா தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் கோஷ்டிகள் !

தங்கம் கொட்டும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தல்;
வருகிற செப்டம்பர் 7ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ.  மைதானத்தில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் டைபெற விருக்கிறது.  இதில், கலைப்புலி தாணு தலைமையில் ஒரு அணியும், கே.ஆர்.  தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகிறது.கே.ஆர் . தலைமயிலான அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா, ஒரு ஓட்டுக்கு ஒரு கிராம் தங்கம், வெள்ளீத்தட்டு, 5 ஆயிரம் மதிப்புள்ள கிராண்ட் ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்து ஓட்டு வேட்டை யாடி வருகிறார்.இதை அறிந்து அதிர்ச்சியான தாணு, 3 கிராம் தங்க மோதிரம், ரொக்கம் 10 ஆயிரம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் பாக்ஸ் கொடுத்து ஓட்டு வேட்டையாடி வருகிறார்.கே.ஆர். அணியில் துணைத்தலைவருக்கு போட்டியிடும் என்.லிங்குசாமியின் சகோதரர் சுபாஷ்சந்திரபோஸ் ஓட்டுக்கு 20 ஆயிரம் என்று விலைபேசி 10 ஆயிரம் அட்வான்சாக கொடுத்துள்ளார்.   ஓட்டு போடும் நாள் அன்று மீதம் 10 ஆயிரத்தை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.தயாரிப்பாளர் சங்கத்தின் மொத்தம் 824 ஓட்டுகள் உள்ளன.  இதில், 200 ஓட்டுகள் பதிவாகாது போனாலும் கூட, 600 ஓட்டுகளை குறிவைத்து தாணூ, ஞானவேல்ராஜா, சுபாஸ் சந்திரபோஸ்    தங்கமும் , வெள்ளியும், ரொக்கமுமாக வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், வருமான வரித்துறைக்கு தண்ணீர் காட்டுவதற்காக, ஞானவேல்ராஜா, தனது தம்பிகள்  எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் ஆகியோர் பெயரிலும்,   கலைப்புலி தாணு தனது ஆபீஸ் ஊழியர் பெயரிலும் வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக