வியாழன், 29 ஆகஸ்ட், 2013

15 வயது மகளை சாமியார் பலாத்காரம் செய்தது எப்படி? சத்தம் போட்டால் சுட்டு கொன்று ,,, மிரட்டல்

: உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 72 வயது சாமியாரான அசராம் பாபு
பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பெண்ணின் தந்தை கூறியதாவது: என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சாமியார் அசராம் பாபுவின் ஆசிரமத்துக்கு அழைத்து சென்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நாங்கள் தெய்வமாக வணங்கி வந்தோம். என் மகளை பிடித்துள்ள தீய சக்தியை விரட்ட பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். அப்போது அவர், ‘சத்தம் போட்டால், உன்னையும் வெளியே இருக்கும் உன் பெற்றோரை எனது பாதுகாவலர்கள் சுட்டு கொன்று விடுவார்கள்’ என்று மகளை மிரட்டியுள்ளார்.


அவர் மீது புகார் கொடுத்து 2 வாரங்களாகி விட்டது. இதுவரை போலீசார் அவரை கைது செய்யவில்லை. விசாரணைக்கு வரும்படி இப்போதுதான் போலீசார் அவருக்கு சம்மன் கொடுத்துள்ள னர். அசராம் பாபுவின் ஆசிரமத்தில் இருந்து எங்களுக்கு மிரட்டல் வருகிறது. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள்.

நாங்கள் பொய் சொல்லவில்லை. எந்த பெற்றோராவது தனது மகளின் மானத்தை காற்றில் பறக்கவிட்டு, இதுபோன்ற குற்றச்சாட்டை கூறுவார்களா? உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.dinakaran.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக