வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

மகள்களை விபச்சாரத்தில் தள்ளிய தாய்க்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை

பெற்ற மகள்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புதுச்சேரி தாயாருக்கு 41 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய புதுச்சேரியைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரை கடந்த 2005-ம் ஆண்டு சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த புரோக்கர்கள் ஆனந்த், கர்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை இப்போது முடிவடைந்து. இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றங்கள் நிரூபணமானதால், ஜெயஸ்ரீக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் இரண்டு முறை தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், விபச்சார தடுப்புச் சட்டத்தின்கீழ் 3 முறை தலா 7 ஆண்டு சிறைத்தண்ட னையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். புரோக்கர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஜெயஸ்ரீக்கு விதிக்கப்பட்ட 41 ஆண்டு சிறைத் தண்டனையையும் அவர் 10 ஆண்டுகளில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக