வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

28 தலித் வீடுகளை இடித்த அதிகாரிகள் தற்காலிக பதவி நீக்கம்

சுதந்திரத்தினந்தன்று பாப்பபான்குளத்தில் 28 தலித் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கியது தொடர்பாக சிவகங்கை வட்டாட்சியர் குருசிமுத்து, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகிய மூவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.ஆகஸ்ட் 15ந் தேதி அன்று தொடங்கி மூன்று தினங்கள் பாப்பான் குளத்தில் 28 தலித் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுத்தார்கள். கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன், ஒய்வு பெற்ற நிலஅளவை அதிகாரி ஆகியோர் சேர்ந்து ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அரசு கட்டிக் கொடுத்த 5 வீடுகள் உள்ளிட்ட 28 வீடுகள் இடிக்கப்பட்டன. ஆகஸ்ட் 15ல் இடிக்கப்பட்ட பிரச்சனை ஆகஸ்ட் 20ல் பெரும் திரள் போராட்டத்திற்கு பின்பு  உயர்நீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்றம் 16 உயர் அதிகாரிகள் பதிலளிக்க 2 வாரம் அவகாசம் அளித்துள்ளது. இதற்கிடையில், சிவகங்கை வட்டாட்சியர் குருசிமுத்து, வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன் ஆகிய மூவரையும் தற்காலிக பதவி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. -நா.ஆதித்யா<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக