வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

சிரியா மீது அமெரிக்க தாக்குதல் ஆயத்தம் !


சிரியாவில் கடந்த வாரம் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, சிரியா மீதான ராணுவ நடவடிக்கையை தனியாகவே கூட எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதை குறிப்புணர்த்தும் விதமாக மற்ற நாடுகளின் அயலுறவுக்கொள்கைக்கு அமெரிக்கா பொறுப்பாக முடியாது என்று அமெரிக்காவின் ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரி கூறியிருக்கிறார்.சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் வியாழனன்று இரவு தோற்றுப்போன பின்னணியில், சிரியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசும்போது ஜான் கெர்ரி இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறாரஇது தொடர்பாக அமெரிக்கா இறுதியில் என்ன முடிவை எடுத்தாலும் அதை நிறைவேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு இருக்கவேண்டும் என்பதே ஒபாமாவின் கொள்கையாக இருப்பதாக ராணுவச் செயலர் சக் ஹேகல் தெரிவித்திருக்கிறார்.சிரியா மீதான ராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் கோரும் பிரிட்டிஷ் அரசின் தீர்மானம் பிரிட்டனின் நாடாளுமன்றத்தில் தோற்றுப்போன செயலானது, உலக அரங்கில் தொடர்ந்தும் பிரிட்டன் முக்கிய பங்களிப்பை ஆற்ற விரும்புகிறதா என்கிற விவாதத்தை தோற்றுவித்திருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஜார்ஜ் ஓஸ்போர்ன் தெரிவித்திருக்கிறார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக