அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில்
பெண்களுக்கு அன்றாடம் இழைக்கப்படும் கொடு
மைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பட்டியல் வருமாறு:-"
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாற்று முறை குறை தீர்வு மையக் கட்டிடம் ஒன்று ரூ. 3.20 கோடி செலவில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா 20-8-2013 அன்று நடைபெற்றபோது, முதலமைச்சர் ஜெயலலிதா அதிலே கலந்து கொண்டு, மகளி ருக்காக அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையெல்லாம் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்.
மைகள் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அளித்துள்ள பட்டியல் வருமாறு:-"
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மாற்று முறை குறை தீர்வு மையக் கட்டிடம் ஒன்று ரூ. 3.20 கோடி செலவில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா 20-8-2013 அன்று நடைபெற்றபோது, முதலமைச்சர் ஜெயலலிதா அதிலே கலந்து கொண்டு, மகளி ருக்காக அ.தி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களையெல்லாம் தொகுத்துச் சொல்லியிருக்கிறார்.
பெண்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார
ரீதியாகவும் இடர்ப்பாட்டிற்கு ஆளாகக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்தத்
திட்டங்களை யெல்லாம் அ.தி.மு.க. அரசு அமலாக்கி வருகிறது என்று கூறியதோடு,
மற்ற மாநிலங்களுக் கெல்லாம் வழிகாட்டியாகச் செயல்படுவதாகவும் பேசியிருப்
பதைப் படித்தபோது, என் கண் எதிரே, 2-2-2000 அன்று தர்மபுரி நகரில்
அ.தி.மு.க.வினர் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக பேருந்து ஒன்றினை
வழிமறித்துத் தீயிட்டபோது உடல் கருகி அலறிக் கொண்டே இறந்த மாணவிகள்
கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோர் தான் தெரிந்தனர்.
அந்த வழக்கில் தர்மபுரி செஷன்ஸ் நீதிபதி
கடுமையாகக் கூறியபோது, வழக்கில் தொடர் புடையவர்கள் ஆளுங்கட்சியைச்
சேர்ந்தவர்கள் என்பதால், இவ்வழக்கை அனாதைக் குழந்தையைப் போல போலீஸ்
அதிகாரிகள் நடத்தியுள் ளனர். போலீஸ் மீதான நம்பிக்கை நன்மதிப்பைக்
குலைக்கும் வகையில் அவர்கள் நடந்துள்ளனர்.
இந்த இமாலயத் தவறுக்காக உள்துறைச் செய
லாளர், சி.பி., சி.அய்.டி. கூடுதல் எஸ்.பி.யை இந்த நீதி மன்றம்
கண்டிக்கிறது. அரசுத் தரப்பு சாட்சியங்களைக் கலைப்பதற்கு அனுமதி அளித்த
குற்றத்துக்காக சி.பி.,சி.அய்.டி., கூடுதல் எஸ்.பி. மீது, அதன் அய்.ஜி.,
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறியதும் நினைவிற்கு
வந்தது. மாணவியரைத் தீயிட்டுக் கொளுத்தி விட்டு, பெண்களைப் போற்றும்
மாண்புகள் பேசப்படுகின்றன.
அது மாத்திரமல்ல; 21-12-2012 தேதிய டைம்ஸ்
ஆப் இந்தியா இதழில் தமிழகத்தில் கற்பழிப்புக் குற்றங்களைப் பற்றி ஒரு
நீண்ட கட்டுரை வெளிவந்தது. அதன் தலைப்பு என்ன தெரியுமா? செப்டம்பர் வரை
500க்கு மேற்பட்ட வழக்குகள் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது -
தமிழ்நாட்டில் கற்பழிப்புக் குற்றங்கள் 9 சதவிகிதம் அதிகம் என்பதாகும்.
தமிழ்நாடு போலீஸ் பற்றிய வலைதளத்தில்,
2011ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை தமிழகத்தில் 484 கற்பழிப்புக்
குற்றங்கள் என்பதற்கு மாறாக; 2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை
528 கற்பழிப்புக் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த 528 குற்றங்களில், பெரும்பா லானவை அதாவது 75 கற்பழிப்புக் குற்றங்கள்
சென்னை மாநகரில் மட்டும் பதிவாகியுள்ளன. பெண்களைப் போற்றிடும் இந்த
அ.தி.மு.க. ஆட்சியிலேதான் இப்படிக் கற்பழிப்புக் குற்றங்கள் பெருகி
வருகின்றன!
மற்றொரு கொடுமை - திருவைகுண்டம் அருகில்
பள்ளிக்குச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவி 12 வயதான புனிதா என்பவர் மர்ம நபரால்
பலாத் காரம் செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, அனைத்து
நாளேடுகளிலும் அதுபற்றிப் பெரிதாகச் செய்தி வந்ததும், பெருமைக் குரிய இந்த
ஆட்சியிலேதான்! கடந்த ஏப்ரல் 12ஆம் தேதியன்று தொழில் நகரமான
திருப்பூரில் ஒரு கொடுமை. எட்டு வயதான ஒரு மலையாளச் சிறுமி பள்ளியிலிருந்து
திரும்பிய பிறகு, வீட்டிலே தனியாக இருந்த போது, ஒரு கும்பலால் அலற அலறக்
கற்பழிக்கப்பட்டிருக்கிறாள்.
திருப்பூரிலே மாத்திர மல்ல; தேனி
மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த
எஸ்.எஸ்.எல்.சி. மாணவி நதியா என்பவர் கற்பழிக்கப்பட்டு, கொலையே
செய்யப்பட்டாள். பாலியல் குற்றம் என்றால் டெல்லி மாநகரமே
அல்லோலகல்லோலப்படுகிறது; பேரணி - முற்றுகைப் போராட்டம் என்று கொந்தளிப்பு
ஏற்படுகிறது.
கேரளச் சிறுமி பாலியல் பலாத்காரத் துக்கு
ஆளான செய்தி கேள்விப்பட்டதுமே கேரள முதலமைச்சரும், மலையாளிகள்
சங்கத்தினரும் கவலை கொண்டு ஆறுதல் கரம் நீட்டுகிறார்கள். ஆனால் ஒரு பெண்மணி
ஆளும் தமிழ் மாநிலத்தில், தட்டிக் கேட்க ஆளில்லாமல் பாலியல் குற்றங்கள்
பரவலாக நடைபெறுகின்றன. ஆனால் முதல மைச்சர் பாலியல் வன்முறை சார்ந்த
குற்றங்களைக் கடும் குற்றங்களாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்
துறையினருக்கு அரசு உத்தர விட்டுள்ளது என்று நேற்றையதினம் கூறியிருக்
கிறார். அவர் கூறியிருப்பதற்கு மாறாகவே இத்த கைய கொடுங்குற்றம் பரவுகிறது!
திருச்சியில் அ.தி.மு.க. சட்டப்பேரவை
உறுப் பினர் பரஞ்சோதி என்பவர் மீது டாக்டர் ராணி என்பவர் கொடுத்த வழக்கில்
நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கப் பணித்தும், பல நாட்களாக நடவடிக்கை
எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் இன்னும்
பரிகாரம் கிடைத்தபாடில்லை! அதுபோலவே கடமலைக்குண்டு காவல் நிலையத்தில்
வசந்தி என்பவர் போலீசாரால் கொடூரமாகக் கற்பழிக்கப் பட்டார் என்ற புகாரின்
மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், அவர் மதுரை உயர்நீதிமன்றக்
கிளையிலே வழக்குத் தொடுத்தார்.
அதில் நீதிபதி கூறும்போது, கற்பழிப்பு
என்பதே சமுதாயத்துக்கு எதிரானது. அதைக் காவல் துறையினரே காவல் நிலையத்தில்
வைத்து செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு வந்துள்ள நிலையில், காவல் துறை உயர்
அதிகாரியான எஸ்.பி. கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைச்
செய்யாததோடு, வசந்தியின் புகார் உண்மைக்குப் புறம்பானது என்று பேட்டியும்
கொடுத்திருக் கிறார். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இவ்வளவு நாட்களாக
விசாரணைகூடச் செய்ய வில்லை என்றெல்லாம் கூறியதும் பெருமைக்குரிய இந்த
ஆட்சியிலேதான்! வேலியே பயிரை மேய்வதை அ.தி.மு.க. ஆட்சி வேடிக்கை
பார்க்கிறது.
கற்பழிக்கப்பட்டவர்கள்-கற்பழித்துக் கொலை
செய்யப்பட்டவர்கள் என்று ஒரு குறிப்பெடுத்தால், வேலூர் மாவட்டம்,
திருப்பத்தூரை அடுத்து ஆண்டியப்பன் கிராமத்தில் ஒன்பது வயது சிறுமி
காயத்ரி; 29-12-2012இல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை;
சிவகிரியில் நந்தினி என்ற பெண் கற்பழிக்கப்பட்டுக் கொலை; சைதாப்
பேட்டையில் விஜயா என்ற பெண்ணின் சடலம் (11-1-2013 தினத்தந்தி); நாகை
மாவட்டத்தில் 11 வயது தலித் இனத்தைச் சேர்ந்த சிறுமியை இரண்டு பேர்
சேர்ந்து கற்பழித்தனர். (23-12-2012 தினமணி); விருத்தாசலத்தில்
மணிமுத்தாறு நதிக்கரையில் சுகந்தி என்கிற இளம் பெண் கற்பழிக்கப்பட்டார்
(27-12-2012 தினமணி); சிதம்பரம் அருகில் மஞ்சக்குழி கிராமம், சந்தியா
என்கிற இளம்பெண், கற்பழிக்கப்பட்டு 3ஆவது மாடியிலிருந்து வீதியிலே
எறியப்பட்டாள்.
(27-12-2012 தீக்கதிர்); தர்மபுரியில்
அரூர் தாலுக்காவில் தாதராவலசை கிராமத்தில் மேனகா என்கிற இளம்பெண்
திருமணமானவர் கற்பழிக்கப் பட்டுப் படுகொலை. (28-12-2012 தினமணி);
தூத்துக்குடி மாநகரில், மாதாநகர் 2வது தெருவில் மாரியம்மாள் என்கிற
இளம்பெண் கணவனைப் பிரிந்து 3 குழந்தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து
வந்தார். விடியற்காலையில் வீடு புகுந்து கற்பழிக்கப் பட்டாள். (29-12-2012
தினமணி); விழுப்புரம் வானூர் ருக்மணிபுரம் பள்ளி மாணவி கல்கி என்பவள்
கற்பழிக்கப்பட்டு சவுக்குத் தோப்பில் பிணமாகத் தொங்கவிடப்பட்டாள்.
(5-1-2013 தினத்தந்தி) - உடுமலையில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டார்.
அவமானம் தாங்க முடியாமல் தீக்குளித்தாள்;
நாமக்கல்லில் 18 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நான்கு
பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். (6-1-2013 தினத்தந்தி); வேலுர்
மாவட்டம், ஆர்க்காடு அருகில் திமிரி என்கிற ஊரில் அபிநயா என்கிற 17
வயதுப் பெண், அச்சுறுத்தல், மிரட்டல் காரணமாக, கற் பைக் காப்பாற்றிக்
கொள்ளத் தீக்குளித்துத் தற் கொலை செய்து கொண்டார். (6-1-2013 தினத்தந்தி);
அம்பத்தூரில் முகப்பேர் பகுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியை வீடு
புகுந்து கற்பழித்திட முயற்சி. (6-1-2013 தினத்தந்தி);
சென்னை, பொழிச்சலூரில் பிரேமலதா
கற்பழித்துக் கொலை செய்யப் பட்டுப் பிணமாக வீசப்பட்டுக் கிடந்தாள்.
(6-1-2013 தினத்தந்தி); திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் திருமண மான
மீனா என்கிற இளம்பெண் தன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குச்
சென்றிருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று
கற்பழிப்பு; சென்னை கோயம்பேட்டில் வீட்டு வேலைசெய்து வந்த பெண்
கண்ணம்மாவை வீட்டு உரிமையாளர் கற்பழித்தார்.
(7-1-2013 தினத்தந்தி); ஒரத்தநாடு,
புதூரில் 6ஆம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுமி, ஆடு மேய்த்துக்
கொண்டிருந்த போது கற்பழிக்கப்பட்டார். (4-1-2013 தினத்தந்தி);
ராணிப்பேட்டை அருகில் சுடுகாட்டில் சிறுமி கொலை செய்யப்பட்டு, எரிந்த
நிலையில் பிணமாகக் கிடந்தார். (13-1-2013 தினத்தந்தி); சென்னை
ஆதம்பாக்கம் செல்வி ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கும் பெண் கற்பழிப்பு
(4-1-2013 தினத்தந்தி) என்று அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களின் மீது
நடத்தப்படும் கோரக் கொடுமைகள் பற்றி நாளேடுகளில் வெளிவந்த பட்டியல் நீண்டு
கொண்டேபோகும். முரசொலி, 22.8.2013)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக