புதன், 28 ஆகஸ்ட், 2013

வரலட்சுமி: படங்கள் ஏற்காவிட்டாலும் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தேன்

சென்னை:வரலட்சுமி.போடா போடி படம் மூலம் அறிமுகமானார்  நடித்த 2 படங்களுமே தாமதம் ஆனதால் வருத்தமா என்பதற்கு இந்த படமும் சில மாதங்களுக்கு முன்பே ரிலீசாக வேண்டியது. ஆனால் தாமதம் ஆகிவிட்டது. அடுத்தடுத்து இரண்டு படங்களுமே தாமதம் ஆனதால் வருத்தமா என்கிறார்கள். போடா போடியில் நடிக்கும்போதே சினிமாவை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். அதனால் படம் தாமதம் ஆவது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஒரு படம் நன்றாக இருந்தால் எப்போது ரிலீசானாலும் ஓடும்.மதகஜ ராஜாவில் எனது இன்னொரு முகத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள். அதாவது இதில் கிளாமர் வேடம் ஏற்றிருக்கிறேன். போடா போடி படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இந்த கேரக்டர் இருக்கும்.

சிம்புவுடன் நடித்த போடா போடி படத்துக்கான ஷூட்டிங் 2 வருடங்கள் நடந்தது. படம் எப்போது வரும் என காத்திருந்தேன். அந்த பட ஷூட்டிங்கிற்கு இடையே சில வாய்ப்புகளும் வந்தது. ஆனால் எதையும் ஏற்கவில்லை. காரணம், முதல் படம் அதுவாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்தேன். சிம்பு மீதும் இயக்குனர் விக்னேஷ் சிவா மீதும் கொண்ட நம்பிக்கையால் அப்படி நினைத்தேன். படங்கள் ஏற்காவிட்டாலும் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்தேன். அந்த படம் ரிலீசானதும் மதகஜ ராஜாவை ஒப்புக்கொண்டேன். tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக