புதுடெல்லி: காஷ்மீரில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய
தீவிரவாதிகள் 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகளை சோதனை
செய்தபோது, அதில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உணவுப்
பொட்டலங்கள் இருந்தன. வடக்கு காஷ்மீர், பாரமுல்லா மாவட்டத்தின் ஊரி
பகுதியில் ராணுவ முகாமுக்குள் நேற்று தீவிரவாதிகள் திடீரென புகுந்தனர்.
அங்கிருந்த ராணுவ வீரர்களை சராமரியாக துப்பாக்கியால் சுட்டனர். வீரர்களும்
பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினர் இடையே நடந்த கடும் சண்டையில் 11
ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 தீவிரவாதிகள் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
சனி, 6 டிசம்பர், 2014
விஜய் டிவி தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்களா? ரோஸ் வெங்கடேசன் குமுறுகிறார்!
சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!ஒ
ளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார்.
ளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார்.
”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…”
அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார்.
அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார்.
“ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?”
”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர்
“உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான குரலில் நடுவர்.
”அம்மா வரலை, அம்மாவுக்கு உடம்பு முடியாததால, வந்து உட்கார முடியாது. .அதனால வரலை.” – போட்டியாளர்.
“அப்டியா? நிஜம்மா?” – போலித்தனமான இரக்க வார்த்தைகளில் நடுவர்.
”ஆமா, நிஜமாத்தான் சார்” – பாடலை பாதியில் நிறுத்தச் சொன்ன கலக்கத்துடன் பதிலளிக்கிறார் போட்டியாளர்
“இங்கே பாருங்க, ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு”
என்று நடுவர் சொன்னதும், அரங்கமே திரையில் பார்க்கிறது. அங்கு, வாசலுக்கு
வெளியே ஸ்ட்ரெச்சரிலிருந்து ஒரு அம்மாவை இறக்குகிறார்கள்.
ரூ. 1 கோடி சம்பளத்தில் கார்ப்பரேட் வேலை: கான்பூர் ஐஐடி மாணவர்கள் நிராகரிப்பு !
சென்னை: மாதத்திற்கு ஒரு லட்சம் சம்பளத்தில் புது வேலை கிடைத்தாலே
பார்க்கிற வேலையை விட்டுவிட்டு அந்த வேலைக்கு தாவுபவர்கள்தான் இன்றைக்கு பல
நிறுவனங்களில் உள்ளனர்.
ஆனால் கான்பூர் ஐஐடியில் படிக்கும் நான்கு மாணவர்கள், வளாகத்தேர்வில்
தங்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் கிடைக்க
வாய்ப்பிருந்தும் அந்த வேலைவாய்ப்புகளைப் நிராகரித்துள்ளனர்.
அதேசமயம் ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை மறுத்துவிட்டு ஆண்டுக்கு ரூபாய் 50
லட்சம் சம்பளம் தரும் வேலையை பெற்றுள்ளனர் இரண்டு மாணவர்கள்.
ஒரு சிலரோ, உயர்கல்வி மற்றும் வேலையில் நிறைவின்மை மற்றும் ஆகியவற்றுக்காக
தங்களுக்கு ரூ. 1 கோடி ஊதியம் கிடைக்கும் வாய்ப்பை மறுத்துள்ளனர்.
கண்ணாலே பேசிக்கொள்ளும் சாந்தினி தமிழரசன்.
ஊர்வசி,
சுலக்ஷனா வரிசையில் கே.பாக்யராஜ் அறிமுகத்தில் ‘சித்து பிளஸ் 2'வில்
நடித்தவர் சாந்தினி. ‘ரவுத்திரம்' படத்தில் நடித்தவர் சைதன்யா கிருஷ்ணா.
இவர்கள் இருவரும் நடிக்கும் படம் ‘போர்க்குதிரை'. தெலுங்கில் ‘காளிச்சரண்'
என்ற பெயரில் வந்த இப்படம் தமிழில் வெளியாகிறது. இதுபற்றி இயக்குனர் ஸ்ரீ
பிரவின் கூறும்போது,‘80களில் நடப்பதுபோல் இப்படத்தின் கதை
அமைக்கப்பட்டிருக்கிறது. ஹீரோ சைதன்யா கிருஷ்ணா. 30 வருடங்களுக்கு முன்
ஆணும், பெண்ணும் சகஜமாக பேசும் பழக்கம் கிடையாது. பார்வையால்தான்
பேசிக்கொள்வார்கள்.
அதற்கேற்ப பார்வையில் பேசும் ஹீரோயினை
தேடியபோது சாந்தினி பொருத்தமாக இருந்தார். இப்படத்தை எடுத்து முடிக்க
ஒன்றரை வருடம் ஆனது. அதுவரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் சைதன்யா,
சாந்தினி கால்ஷீட் ஒதுக்கி நடித்துக்கொடுத்தார்கள். அரசியல் பின்னணியிலான
இப்படத்தில் கவிதா, நாகி நீடு, பங்கஜ் கேசரி , சஞ்சய் உள்ளிட்டோர்
நடித்திருக்கின்றனர். பரத் வி.எம் அண்ட் நந்தன் ராஜ் இசை' என்றார். காஜல்
அகர்வால், அனுஷ்கா, தமன்னா போன்றவர்கள் கோலிவுட்டில் என்டர் ஆனபோது
வரவேற்பு பெறவில்லை. ரீ என்ட்ரியில் பிக் அப் ஆகிவிட்டனர். இப்போதுள்ள
போட்டியில் கேப் விட்டு ரீ என்ட்ரி ஆகும் சாந்தினி தாக்குபிடிப்பாரா என
கோலிவுட் முணுமுணுக்கிறது. - tamilmurasu.org
சோனியா : காங்கிரஸ் கொண்டு வந்த நலத்திட்டங்களை பாஜக கைவிட்டது வேதனை !
ரேபரேலி:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை
மத்திய பாஜ அரசு கைவிட்டிருப்பது கவலையை அளிக்கிறது என்று சோனியா காந்தி
தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களாக தனது
தொகுதியான ரேபரேலியில் சுற்றுபயணம் செய்து வருகிறார். பர்சத்கஞ்ச் விமான
நிலையத்தில் இருந்து நேற்று காலை மாலின் கா பூர்வா கிராமத்திற்கு திடீர்
விசிட் அடித்தார். இது தலித்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமமாகும்.
அங்கு சென்ற அவரை கிராம பெண்கள் சூழ்ந்து கொண்டு கிராமப்புற வேலைவாய்ப்பு
திட்டம், இந்திரா வீடு கட்டும் திட்டம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட
திட்டங்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக புகார்
அளித்தனர்.
சகாயம் தங்கியிருந்த அறையில் ஒட்டுகேட்பு கருவி? காலி செய்யும்படி கூறியதாகவும் குற்றச்சாட்டு
மதுரை : கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க, மதுரையில் தங்கியிருந்த
சர்க்யூட் ஹவுஸ் அறையில், ஓட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்டதாக வந்த
தகவலையடுத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் வேறு அறைக்கு மாறினார். மாறிய அறை
அமைச்சருக்கு(செல்லூர் ராஜூ) ஒதுக்கப்பட்டுள்ளதால், அதை காலி செய்யும்படி
சகாயத்தின் உதவியாளரிடம் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அறையை
காலி செய்ய சகாயம் மறுத்து விட்டார்.சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி
கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம் மதுரையில் முகாமிட்டுள்ளார்.
அவர் தங்க அழகர்கோவில் ரோடு சர்க்யூட் ஹவுஸ் முதல் மாடியில் அறை (எண் 1)
ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் வந்த அறிவியல் நகர அலுவலர்கள் ஹேமா,
தேவசேனாதிபதி தங்க முறையே அறைகள் எண் 2, 3 ஒதுக்கப்பட்டிருந்தன.
போனில் தகவல்:
நேற்று
முன் தினம் பொது மக்களிடம் மனுக்களை பெற்று விசாரணை முடித்த சகாயம்,
உதவியாளர் ஆல்பர்ட்டுடன் சர்க்யூட் ஹவுஸ் அறையில் தங்கினார். இரவு 11
மணிக்கு அவரது அறை மற்றும் விசாரணை அலுவலகத்தில் ஒட்டுகேட்பு கருவிகள்
பொருத்தப்பட்டுள்ளதாக போனில் ஒருவர் தெரிவித்தார். சகாயத்திற்கு ஜெயா கொடுக்கும் குடச்சளால், சகாயம் வெறியாகி, சில பல அதிமுக அமைச்சர்களை ஜெயிலுக்குள்////////
ரேஷன் கடைகளில் கெரசின் கிடைக்காது ~! மானியம் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு !
புதுடெல்லி: பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மானிய விலையில்
மண்ணெண்ணைக்கு வழங்கும் திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக மாநில
அரசுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கடிதம்
எழுதியுள்ளார்.பொதுமக்கள் பயன்படுத்தும் காஸ் சிலிண்டர், ஏழைகள்
பயன்படுத்தும் மண்ணெண்ணெய், விவசாயிகளுக்கான யூரியா போன்றவற்றுக்கு மத்திய
அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில்
கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு பெரும்
நிதிசுமை ஏற்படுவதால் மானியத்தை படிப்படியாக குறைக்க மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. மானியம் வழங்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவரவும் முடிவு
செய்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டருக்கு வழங்கும் மானியத்தை
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் சேர்க்கும் நடவடிக்கை வருகிற ஜனவரி 1ம்
தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
சமஸ்கிருதம் படிப்பதில் என்ன தவறு? சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கேள்வி?
உபயோகத்தில் / நடைமுறையில் உள்ள ஏதோ ஒரு கருமத்தை படிச்சா/ செஞ்சு தொலைச்சா
தப்பு இல்ல. ஆனா இந்த சமஸ்கிருதம் எந்த வகையில் சேர்ந்தது. கொஞ்சம் புரிய
வைங்க சாமிகளே?
புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், மத்திய அரசு பள்ளிகளிலும், மூன் றாவது மொழிப் பாடமாக ஜெர்மானிய மொழிக்கு பதில், சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும்' என, பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, சமீபத்தில் தெரிவித்தது.இதை எதிர்த்து, மாணவர்களின் பெற்றோர் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது,நடப்பு கல்வியாண்டில் ஜெர்மானிய மொழியை மூன்றா வது பாடமாக தொடருவது குறித்து, பரிசீலிக்க வேண்டும். சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக்காமல், கூடுதல் பாடமாக வைத்திருக்கலாம்' என, தெரிவித்தது.இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், 'மாணவர்களின் சிரமம் கருதி, இந்தாண்டு சமஸ்கிருத தேர்வு எதுவும் மத்திய அரசு தரப்பில் நடத்தப்படாது' என, உறுதி அளிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஏ.ஆர். தாவே, ''குழந்தை கள் கூடுதல் மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை கற்பதில் எந்த தவறும் இல்லை. ஒரு தந்தையாக, அரசின் இந்த முடிவை நான் ஏற்கிறேன். குழந்தை கள் சமஸ்கிருதத்தை கூடுதலாக படிப்பதில் என்ன தவறு உள்ளது?'' என்றார்.இந்த வழக்கின் விசாரணை, நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. dinamalar.com
புதுடில்லி: 'நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும், மத்திய அரசு பள்ளிகளிலும், மூன் றாவது மொழிப் பாடமாக ஜெர்மானிய மொழிக்கு பதில், சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்படும்' என, பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, சமீபத்தில் தெரிவித்தது.இதை எதிர்த்து, மாணவர்களின் பெற்றோர் சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது,நடப்பு கல்வியாண்டில் ஜெர்மானிய மொழியை மூன்றா வது பாடமாக தொடருவது குறித்து, பரிசீலிக்க வேண்டும். சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழிப் பாடமாக்காமல், கூடுதல் பாடமாக வைத்திருக்கலாம்' என, தெரிவித்தது.இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில், 'மாணவர்களின் சிரமம் கருதி, இந்தாண்டு சமஸ்கிருத தேர்வு எதுவும் மத்திய அரசு தரப்பில் நடத்தப்படாது' என, உறுதி அளிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவரான ஏ.ஆர். தாவே, ''குழந்தை கள் கூடுதல் மொழிப் பாடமாக சமஸ்கிருதத்தை கற்பதில் எந்த தவறும் இல்லை. ஒரு தந்தையாக, அரசின் இந்த முடிவை நான் ஏற்கிறேன். குழந்தை கள் சமஸ்கிருதத்தை கூடுதலாக படிப்பதில் என்ன தவறு உள்ளது?'' என்றார்.இந்த வழக்கின் விசாரணை, நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. dinamalar.com
மாலைதீவுக்கு தண்ணீர்! அவசரமாக இந்தியா இலங்கை தண்ணீர் அனுப்புகிறது
மாலத்தீவு தலைநகர் மாலேவில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில்
ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்நகரில் வசிக்கும் 100000 குடும்பத்தினர்
குடி தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.இதையடுத்து இந்த இக்கட்டான
சூழ்நிலை குறித்து இந்தியா, இலங்கை, சீனா மற்றும அமெரிக்கா ஆகிய
நாடுகளிடம் உதவி கேட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் முகமது ஷெரிப்
தெரிவித்தார். குடிநீருக்காக அவதிப்படும் மக்கள் தண்ணீர் விற்கும் கடைகளை
அடித்து நொறுக்கினர். இந்நிலையில் மாலத்தீவுக்கான இந்திய தூதர் ராஜிவ்
சகாரே, இந்தியாவிலிருந்து ஐந்து விமானங்கள் மூலம் தண்ணீர் இன்று கொண்டு வர
உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாஜகவின் ஆச்சார்யா கனிமொழிக்கு எதிராக சாட்சியம்! அரசியல் நோக்கம்?
புதுடில்லி : கலைஞர் டி.வி.,க்கு முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட
விவகாரத்தில் திமுக எம்.பி., கனிமொழிக்கு முக்கிய பங்கு இருந்ததாக முன்னாள்
மத்திய அமைச்சர் ராசாவின் முன்னாள் கூடுதல் தனிச்செயலாளர் ஆசீர்வாதம்
ஆச்சாரி பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கலைஞர்
டி.வி.,க்கு ரூ.200 கோடி முறைகேடாக பணபரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில்
அவர் அளித்த சாட்சியத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2ஜி ஊழல் மற்றும் அது தொடர்பான முறைகேடான பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தற்போது, சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள, ராசாவின் கூடுதல் தனி செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி நேற்று நேரில் ஆஜராகி சாட்சி அளித்தார். இதனால் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
2ஜி ஊழல் மற்றும் அது தொடர்பான முறைகேடான பணபரிமாற்றம் தொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தற்போது, சாட்சியங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள, ராசாவின் கூடுதல் தனி செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி நேற்று நேரில் ஆஜராகி சாட்சி அளித்தார். இதனால் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
வெள்ளி, 5 டிசம்பர், 2014
பி ஆர் பி குழுவினர் நிலத்தை பறித்ததாக போலீசாரே சகாயத்திடம் புகார்
மதுரை: 3வது நாள் விசாரணையில் சகாயத்திடம் உதவி ஆய்வாளர் மற்றும் போலீஸார்
புகார் அளித்துள்ளனர். தல்லாகுளம் எஸ்.ஐ. ராதாகிருஷ்ணன், அண்ணாநகர் காவலர்
முருகேசன் ஆகியோர் மனு அளித்துள்ளார். 2001ல் பி.ஆர்.பி. குழுவினர் தங்களை
மிரட்டி நிலத்தை அபகரித்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுதாமரைப்பட்டியில்
அபகரித்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை
விடுத்துள்ளனர். சகாயம் குழுவுக்கு பாதுகாப்பாக இருக்கும் போலீசாரே வந்து
மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது dinakaran .com
மின் இணைப்பு இருந்தால் ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க முடியாது'
மின் இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் மானியம் நேரடி பயன்மாற்ற முறையில் வழங்கப்படும்.
அதிகளவில் மானியங்கள் வழங்கப்படுவதாக வெகுவாக விமர்சித்துவரும் மத்திய நிதி
அமைச்சர் அருண் ஜேட்லி, பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும்
மானிய விலை மண்ணெண்ணெய் திட்டத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.
"அளவிடப்படாத மானியங்களால் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. மானியம் என்பது
அளவிடத்தக்கதாகவும், அடையாளம் காணப்பட்ட பிரிவினருக்கும் வழங்கப்படும்
தொகையாக இருக்க வேண்டும். வீட்டுல கரண்டு உள்ளவிங்க எல்லாம் இனி பணக்காரைங்க ?
வி.ஆர். கிருஷ்ணய்யர்! அதுதான் முதல் பொதுநல வழக்கு! ~ மதிமாறன்.~
ஒரு கைதி, துண்டுத் தாளில் இந்தியாவின்
உயர் பதவியிலிருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதி அனுப்பியதை,
பொதுநல வழக்காக ஏற்று.. நியாயம் வழங்கியவர் வி.ஆர். கிருஷ்ணய்யர். அதுதான்
முதல் பொதுநல வழக்கு என்று நினைக்கிறேன்.
டாக்டர் அம்பேத்கரின் உழைப்பால்
நீதிபதியானவர்கள், பெரியாரின் முயற்சியால் இன்னும் சமூக நீதி அரசியலின்
பயனாய் நீதிபதியானவர்கள் செய்யாத அல்லது செய்ய விரும்பாத பல சிறப்பான
செயல்களை, எளிய தலித் மக்களுக்கும்
பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் செய்தவர் மரியாதைக்குரிய வி.ஆர்.
கிருஷ்ணய்யர். . அதுவும் ஒரு பார்ப்பனக் குடும்பத்திலிருந்து… என்பது
அவருக்குக் கூடுதல் சிறப்பு.
தமிழக அரசே மதுவிற்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி! டாஸ்மாக் கடைகள் அரசியல் சாசனத்துக்கு முரண்?
இந்திய
அரசியல் சாஸனம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென வழிகாட்டும்போது,
தமிழ்நாட்டில் மாநில அரசே மதுபான விற்பனையில் ஈடுபடுவது ஏன் என சென்னை உயர்
நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருப்பது பலத்த விவாதங்களை ஏற்படுத்தியள்ளது.
சாலை
விபத்தில் பலியானவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோரி அவர்களது
குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணை செய்தபோது, பலியானவர்கள்
மது அருந்தி வாகனம் ஓட்டினார்கள் என அரசுத் தரப்பில் ஒருவாதம்
முன்வைக்கப்பட்டது.
கிரானைட் அதிபர்களிடம் சிக்கியுள்ள 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் :சகாயத்திடம் பொதுமக்கள் புகார்
கிரானைட் குவாரிகளால் அழிந்து போன 74 கண்மாய்களை சீரமைப்பதுடன், குவாரி
அதிபர்களிடம் உள்ள 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களை நில
உச்சவரம்பு சட்டப்படி பறிமுதல் செய்ய வேண்டும் என விசாரணை அதிகாரியான
உ.சகாயத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
கிரானைட் முறைகேடு குறித்து வியாழக்கிழமை 2-வது நாள் விசாரணையை சகாயம்
நடத்தி னார். கிரானைட் மோசடியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பல்வேறு
துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். பின்னர் பொதுமக்களிடம் மனுக்களை
பெற்றார். மேலூர், கீழையூர் பகுதி களைச் சேர்ந்த 35 பேர் பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். நிலங்கள் அபகரிப்பு, குறைந்த
விலைக்கு வாங்கியது, முழுமையாக பணம் தராதது, ஒப்பந்தத்தை மீறியது, கூடுதல்
நிலங்களிலும் கிரானைட் வெட்டி எடுத்தது, பாதை களை மறித்தது என பல்வேறு
குற்றங்களில் குவாரி உரிமை யாளர்கள் ஈடுபட்டுள்ளதாக மனுவில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
பஞ்சாபில் 60 பேருக்கு பார்வை பறிபோனது!கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை .....
பஞ்சாப், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமில்
கலந்து கொண்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 60 பேருக்கு கண் பார்வை
பறிபோனது.
அரசு சாரா நிறுவனம் நடத்திய இந்த கண் சிகிச்சை முகாமில், அமிர்தசரஸ் அருகே
உள்ள கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கும், குர்தாஸ்பூர் அருகே உள்ள கிராமங்களை
சேர்ந்த 44 பேருக்கும் பார்வை பறிபோனது. அவர்கள் அனைவரும் அமிர்தசரஸ்
மற்றும் குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள இ.என்.டி மருத்துவமனைகளில் தற்போது
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அமிர்தசரஸ் துணை ஆணையர் ரவி பகத், பார்வை
பறிபோன 16 பேரும் நகரிலுள்ள இ.என்.டி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அவர்களுக்கு துணை பேராசிரியர் கரம்ஜித்
சிங் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவருக்கும்
நிரந்தரமாக பார்வை பறிபோனது என்று அவர் கூறினார்.
பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை முடக்கினேன்!
திருவனந்தபுரம்: ''பம்பை - அச்சன்கோவில் - வைப்பாறு திட்டத்தை
செயல்படுத்த அனுமதிக்க முடியாது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என,
கேரள அரசு, தொடர்ந்து, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்ததை அடுத்து,
செயல்படுத்த உள்ள முன்னுரிமை திட்டங்கள் பட்டியலில் இருந்து, இந்த திட்டம்
நீக்கப்பட்டு உள்ளது,'' என, கேரள முதல்வரும், காங்கிரசை சேர்ந்தவருமான,
உம்மன் சாண்டி, அம்மாநில சட்டசபையில் நேற்று தெரிவித்தார்.துவக்கத்திலிருந்தே.
தமிழகத்தின், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர்
மாவட்டங்களில், 2.24 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு, பாசன வசதி கிடைக்கும் என,
12 ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, பம்பை நதி -
அச்சன்கோவில் ஆறு - வைப்பாறு நதி இணைப்பு திட்டத்திற்கு, துவக்கத்தில்
இருந்தே, கேரளா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாமளும்தான் தம்பிரபரணி - நம்பியாறு திட்டத்தை மூன்று ஆண்டுகளாக குப்பையில்
போட்டுவிட்டு 5 tmc தண்ணீரை போன மாதம் வீணாக கடலில் விட்டுவிட்டு, இபபோது
பிச்சை எடுக்க ஆரம்பித்து விட்டோம்.
கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அமெரிக்க உற்பத்தி!
அமெரிக்கா அதிக அளவில் 'ஷேல் காஸ்' உற்பத்தி செய்யத் துவங்கியுள்ளது தான் உலக அளவில் கச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.உலகளவில்
கச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 12 நாடுகளின்
கூட்டமைப்பு (ஒபெக்) கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது வழக்கம். ஆனால்
கடந்த வாரம் இக்கூட்டமைப்பின் கூட்டத்தில் அவ்வாறு குறைக்க வேண்டாம் என
முடிவு செய்யப்பட்டது. ஆழ்கடல் பாறைகளில் துளையிட்டு எடுக்கப்படும் இந்த
எரிவாயுக்கு 'ஷேல் காஸ்' என பெயர். மேலும் இந்த துளைகளில் இருந்து கச்சா
எண்ணெய்யும் அதிக செலவில் எடுக்கப்படுகிறது. கடந்த 2008ல் கச்சா எண்ணெய்
விலை பேரலுக்கு 140 டாலர் என ஒபெக் உயர்த்திய போது அமெரிக்கா எடுத்த அதிரடி
முடிவால் இப்போது அந்த நாட்டில் அதிக அளவு ஷேல் எண்ணெய் மற்றும் ஷேல்
எரிவாயு கிடைக்கிறது.
வியாழன், 4 டிசம்பர், 2014
ஸ்ரீரங்கத்தின் கீதையே ! அதிமுக அடிமைகளின் நெஞ்சத்து அகலாதசுகபாணி அருள்வாயே அபிராமியே அந்தாதியே?
சென்னை: சட்டசபையில் முதல்வர் பன்னீர்செல்வம் பேச துவங்குகையில், ஸ்ரீரங்கத்தின் கீதையே !
தமிழர் வாழ்வு செழிக்க, விழி காட்டி, வழி காட்டியாக திகழும், அம்மா என்ற
மூன்றெழுத்து மந்திரமே ! காலத்தால் அள்ளித்தந்த தங்கமே ! வாழும் ஏழைகள்
வாழ்வில் ஒளி ஏற்றிய பூரண ஒளியேற்றும் புண்ணியமே ! ஏழை தொழிலாளிகள் உரிமை,
காவரி முல்லை பெரியாறு மீட்ட விலையில்லா அருள் அள்ளித்தரும் வெல்லாமை
காட்டிய வீர மங்கையே ! எதிர்காலத்தில் வெப்ப சலணம் அடையும் என தீர்க்க
தரிசனத்தால் மண்ணை குளிர்விக்க மழை நீர் திட்டம் தந்த மாதரசியே ! மண்ணுக்கு
நீரும் , மாணவர்களுக்கு மடிக்கணினியும் தந்த தாயே ! செந்தமிழே ! தியாகமே
உருவான திரும்ங்கையே ! தாயே ! தாங்கள் வீற்றிக்கும் திசை நோக்கி தலைவணக்கம்
தெரிவித்தார். ஸ்ரீரங்கத்தின் கீதையே ! இவ்வாறு வர்ணிக்கும் போ அவையில்
கரவொலி எழுந்தது.
ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தபோது சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மு.க. ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மறுத்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அது தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றை வாசித்தார். பதவி பணத்துக்காக தன்மானத்தையும் விற்கும் அடிமை கூட்டம் வார்த்தைகள் இல்லை ! தூத்தேறி.....அசிங்கப் பிழைப்பு.....இதுதான் சுய மரியாதையா?..
ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தபோது சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மு.க. ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டை மறுத்து, சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அது தொடர்பான விளக்க அறிக்கை ஒன்றை வாசித்தார். பதவி பணத்துக்காக தன்மானத்தையும் விற்கும் அடிமை கூட்டம் வார்த்தைகள் இல்லை ! தூத்தேறி.....அசிங்கப் பிழைப்பு.....இதுதான் சுய மரியாதையா?..
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் மறைவு ! மனித உரிமைக் காவலர்
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கிருஷ்ணய்யர் மரணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள இரங்கல் உலகின் ஈடு இணையற்ற மனித உரிமைக் காவலரும், நீதியரசருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் உடல்நலக் குறைவால் கொச்சியில் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி மற்றும் துயரத்தில் நிலை குலைந்து போனேன்.கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தாலும் பட்டப்படிப்பையும், சட்டப்படிப்பையும் முறையே அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் தான் கிருஷ்ணய்யர் நிறைவு செய்தார். சுதந்திரத்திற்கு பிறகு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இப்போது கேரளத்தில் உள்ள குதுபரம்பா தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.1957 ஆம் ஆண்டில் கேரளத்தில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த இந்தியாவின் முதல் இடதுசாரி அரசில் சட்டம், நீதி, மின்சாரம், நீர்ப்பாசனம், உள்துறை, சமூகநலன் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக திறம்பட பணியாற்றினார்.
சாமஜவாடி ஜனதாதள் கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் தெரிவு!
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதல், ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து
சென்று மாநில கட்சிகளை நடத்தி வந்த முக்கிய தலைவர்களான முலாயம் சிங் யாதவ்,
லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார், சரத் யாதவ் மற்றும் முன்னாள் பிரதமர்
தேவேகவுடா ஆகியோர் ஓரணியில் இணைந்தனர். இத்தலைவர்கள் கலந்து கொண்ட முதல்
கூட்டம் கடந்த மாதம் டெல்லியில் உள்ள முலாயம் சிங் யாதவ் வீட்டில்
நடைபெற்றது. வைகோவும் ராமதாசும் திமுக பக்கம் வருவது போல் தெரிந்தது ஆனால் திடீரென்று பல்டி அடித்து இனி திமுக அதிமுக வோடு கூட்டணியே கிடையாது என்று சொன்னதன் மர்மம் இதுதான் போலும்? தமிழ்நாட்டில் சாமஜவாடி ஜனதாதள் கூட்டணியில் வைகோ முதலில் சேருவார் பின் ராமதாஸ் கம்யுனிஸ்ட் .... ஏதோ நல்லது நடந்தால் சரி, ஆனா வைகோ எப்படியும் தப்பான முடிவுதான் எடுப்பார் என்பது அவர் ஜாதகம் அதாய்ன் ரோசனையா கீது
மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள்! kingfisher and Spicejet story !
கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதைகுழியில்
சிக்கியிருக்கிறது. 2011-ல் திணற ஆரம்பித்து 2012-ல் மூச்சை விட்ட விஜய்
மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்சின் அடியொற்றி இப்போது ஸ்பைஸ் ஜெட்
நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது; இந்திய தனியார் விமான சேவைத் துறையின்
அடுத்த கோல்மால் திவால்.
தரை தட்டும் ஸ்பைஸ் ஜெட்
சனிக்கிழமை (நவம்பர் 29, 2014) இரவு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் முதன்மை
செயல்பாட்டு அலுவலர் சஞ்சீவ் கபூர், “நவம்பர் சம்பளம் வழங்குவது 1-3
நாட்கள் தாமதமாகும்” என்று அந்நிறுவனத்தில் பணி புரியும் 5,000
ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார். ஒரு நிறுவனம்
திவாலாவதன் கடைசி அறிகுறி இதுதான் என்பது கிங் ஃபிஷர் அத்தியாத்திலேயே
பார்த்தோம்.இரட்டைமலை சீனிவாசன்! கொந்தடிமைகளை சுதந்திர மக்களாக்கியவர்!-மூடப் பழக்கங்களில் மூழ்கியோரை சிந்திக்கும் மனிதர்களாகச் செதுக்கியவர்!
இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் 1930 ஆம்
ஆண்டு நடைபெற்ற வட்டமேசை மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து சர்.ஏ.டி.
பன்னீர்செல்வம், ஏ. இராமசாமி முதலியார் ஆகியோருடன், தாழ்த்தப்பட்டோர்களின்
சார்பாக டாக்டர் அம்பேத்கர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர்
அழைக்கப்பட்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளை பிரிட்டிஷ்
நாட்டின் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் விருந்துக்கு அழைத்திருந்தார். ஒவ்வொரு
பிரதிநிதியும் தம்மை அறிமுகப்படுத்தி மன்னருடன் கைக்குலுக்கினர். இரட்டைமலை
சீனிவாசன் மட்டும் கைகலக்காமல் தன் கையை இழுத்துக் கொண்டு விட்டார்.
திகைத்து நின்ற மன்னர், ‘ஏன்’?- என்று காரணம் கேட்டார். அப்போது “நான்,
எங்கள் நாட்டில் ஒரு தீண்டத்தகாதவன்; என்னை நீங்கள் தீண்டக்கூடாது; நான்
பறையன்; இந்தியாவில் தீண்டப்படாத சமுதாயத்திலிருந்து வந்தவன்” – என்று
கூறினார். தாம் அணிந்திருந்த கோட்டில், ‘இராவ் சாகிப் இரட்டை மலை
சீனிவாசன், பறையன்; தீண்டப்படாதவன்’ என்று எழுதி மாட்டிக் கொண்டிருந்தார்.
மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் கை குலுக்க முனைந்தபோது, சீனிவாசன் மறுத்து, தன்னைத்
தொட்டால் தீட்டு ஒட்டிக் கொள்ளும் என்ற நிலை உள்ளதை உணர்த்தினார். ஆனால்,
மன்னரோ அவரை அருகே அழைத்து, கை குலுக்கினார்.
சமாஜ்வாடி ஜனதா தளம் ! 6 கட்சிகள் இணைந்து புதிய கட்சி! முலாயம் லாலு நிதீஷ் சரத் யாதவ்.....
சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசை எதிர்த்து உருவான புதிய
கட்சியான ‘‘ஜனதா தளம்’’ மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. வி.பி.சிங்
பிரதமராக பதவியில் அமர்ந்தார். ஆனால் ஜனதா தளம் மூத்த தலைவர்கள் இடையே
ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜனதா தளம் கட்சி துண்டு, துண்டாக உடைந்து
பல கட்சிகளாக மாறின.
அப்படி சிதறிய கட்சிகளில் முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம், நிதிஷ்குமார், சரத்யாதவின் ஐக்கிய ஜனதா தளம், தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம், கமல் மொரர்காவின் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகிய 6 கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து, புதிய தேசிய கட்சியாக மாற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்படி சிதறிய கட்சிகளில் முலாயம்சிங்கின் சமாஜ்வாடி, லல்லு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம், நிதிஷ்குமார், சரத்யாதவின் ஐக்கிய ஜனதா தளம், தேவேகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம், கமல் மொரர்காவின் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஆகிய 6 கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து, புதிய தேசிய கட்சியாக மாற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவையை நடத்த விடுங்கள்: எதிர்க்கட்சியினருக்கு மோடி வேண்டுகோள்!
சர்ச்சைக்குரிய
வகையில் பேசியதாக மத்திய அமைச்சர் நிரஞ்சன் ஜோதியை பதவி நீக்கம் செய்ய
வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற
மாநிலங்களவையில் அமளில் ஈடுபட்டனர்.மத்திய
அமைச்சர் நிரஞ்சன் ஜோதியை பிரதமர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று
காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா கூறினார். நிரஞ்சன் ஜோதியை பதவி நீக்கம்
செய்யும் வரை அவையை நடத்தமாட்டோம் என்று சீதாராம் யெச்சூரி கூறினார்.கடும்
அமளியால் மாநிலங்களவை 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும்
மாநிலங்களவை தொடங்கியதும் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்
நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கேட்டு விட்டதால் அவையை நடத்த விடுங்கள் என்றார்.பாஜக எதிர்கட்சியாக இருந்த பொழுது எவ்வளவு அமைதியாக இருந்தாக ???பாவம் மன்மோகன் சிங் இந்த காவி காட்டுமிராண்டிகளிடம் சபையில் எவ்வளவு துன்பபட்டிருப்பார்
ரோதக் சகோதரிகளால் தாக்கப்பட்ட இளைஞர்கள் மீது தவறு இல்லை... 6 பெண் பயணிகளின் ஆதரவால் திடீர் திருப்பம்
சண்டிகர்: ஹரியானா மாநிலம் ரோதக் நகரில் ஓடும் பேருந்தில், ரோதக்கைச்
சேர்ந்த 2 சகோதரிகளிடம் 3 இளைஞர்கள் தவறாக நடந்ததாக கூறப்படும்
விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அந்த இளைஞர்கள் மீது எந்தத் தவறும் இல்லை
என்று அதே பேருந்தில் பயணம் செய்த 6 பெண் பயணிகள் போலீஸில்
தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரோதக்கைச் சேர்ந்த சகோதரிகளான ஆர்த்தி மற்றும் பூஜா ஆகியோர் அந்த மூன்று
இளைஞர்களையும் சரமாரியாக அடித்தனர். தங்களிடமிருந்த பெல்ட்டால் அவர்களை
அடித்தனர். இதுதொடர்பான காட்சி வீடியோவில் படமாக்கப்பட்டு வெளியிலும்
வந்தது. இதையடுத்து குல்தீப், மோஹித், தீபக் ஆகிய மூன்று இளைஞர்களையும்
போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று
அந்தப் பேருந்தில் சம்பவத்தின்போது பயணம் செய்த 6 பெண்களில் போலீஸாரிடம்
தெரிவித்துள்ளனர்.
இளங்கோவன் : தொண்டர்களுக்கும், கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள் ஒதுங்கி போய் விட்டனர்
இளங்கோவன் பேச்சு உண்மையான
காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள்
ஒதுங்கி போய் விட்டனர். என கட்சியினருக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
வேண்டுகோள் விடுத்து உள்ளார்.திண்டுக்கல்
மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் நாயுடு
மகாலில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,உண்மையான
காங்கிரஸ் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நஞ்சாக இருந்தவர்கள்
ஒதுங்கி போய் விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க.
நிர்வாகிகள், அடுத்த தேர்தலை பற்றி சிந்திக்காமல் வாசனுக்கு ஆட்களை
சேர்த்து கொண்டிருக்கும் புரோக்கர்களாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர்.மூப்பனாரை
பற்றி தவறாக நான் சொல்லி விட்டதாக அருமை தம்பி ஜி.கே.வாசன் சொல்கிறார்.
முல்லைப் பெரியாறு : கேரளத்தின் மறுஆய்வு மனு தள்ளுபடி!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136
அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அனுமதி அளித்து கடந்த மே மாதம் உச்ச
நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, கேரள அரசு தாக்கல்
செய்த மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், மதன் பி. லோகுர், எம்.ஒய். இக்பால், சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கேரள அரசின் மனுவை செவ்வாய்க்கிழமை பரிசீலித்தது. மறுஆய்வு மனு என்பதால் தலைமை நீதிபதி அறையில் வைத்து இந்த மனுவை விசாரிப்பதா, வேண்டாமா என்று நீதிபதிகள் பரிசீலித்தனர்.
இது தொடர்பாக தலைமை நீதிபதி எச்.எல். தத்து, நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், மதன் பி. லோகுர், எம்.ஒய். இக்பால், சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கேரள அரசின் மனுவை செவ்வாய்க்கிழமை பரிசீலித்தது. மறுஆய்வு மனு என்பதால் தலைமை நீதிபதி அறையில் வைத்து இந்த மனுவை விசாரிப்பதா, வேண்டாமா என்று நீதிபதிகள் பரிசீலித்தனர்.
ஜெ., அபராதம் கட்டியது ஏன்? வாஜ்பாய் அரசை கவிழ்த்த கேஸ் அல்லவா இது? ம மு மாமுதாய்ன்.
எல்லோரின் மனத்திலும் எழுந்துள்ள அய்யப்பாடு! :கலைஞர் கடிதம் 1991
முதல் 1993ஆம் ஆண்டு வரையிலான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை
என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, மற்றும் சசி எண்டர்பிரைசஸ்
நிறுவனம் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில்
வருமான வரித் துறை உதவி ஆணையாளர் வழக்கு தொடர்ந்தார்.இந்த
வழக்கு கடந்த 1997ஆம் ஆண்டு முதல் 17 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்து
தற்போது ஒரு முடிவுக்கு வரும் கட்டத்தை எய்தியுள்ளது. அந்த வழக்கின்
விவரம் பற்றி நீ புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றை இங்கே விளக்கிட
விரும்புகிறேன்.இது
குறித்த வழக்கு 21-8-1997 அன்று முதன் முதலாகத் தாக்கல் செய்யப்பட்டது.
வருமான வரித் துறையினர் குறிப்பிட்டுள்ள அந்தக் கால கட்டத்தில், தனக்கு
வருமானம் இல்லை எனவும், அதனால் கணக்குத் தாக்கல் செய்யவில்லை எனவும்
ஜெயலலிதா தரப்பிலே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை வருமான வரித் துறையினர்
ஏற்றுக் கொள்ளவில்லை. வருமான வரிச் சட்டப்படி, வருமான வரி செலுத்துபவர்கள்,
வருமானம் இல்லாத காலத்திற்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்பதுதான்
சட்டம். சதானந்த கவுடாவை சட்டத்துறை மந்திரியா ஆக்கினப்பவே தெரிஞ்சு போச்சே அம்மாஜி
அடுத்த மார்ச்சில மக்கள் முதல்வர் போஸ்ட்ல இருந்து தமிழக முதல்வர் ;
அடுத்த மார்ச்சில மக்கள் முதல்வர் போஸ்ட்ல இருந்து தமிழக முதல்வர் ;
வைகுண்டராஜன் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக.....மக்களின் முதல்தர பினாமி ?
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத் தலைவராக
இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ் என்ற அதிகாரிக்கு தனது சட்டவிரோத நடவடிக்கைகள்
மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி லஞ்சமாக
வழங்கியுள்ளார் வைகுண்டராஜன்.
சுப்பையா அய்.ஏ.எஸ் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர். சுப்பையாவின் தாயார் ஜானகியின் பெயரில் காரியாபட்டியில் ஒரு நிலம் உள்ளது. வானம் பார்த்த பூமியான சில லட்ச ரூபாய் மதிப்பேயுள்ள இந்த நிலத்தை சந்தை விலையை விட பல கோடி ரூபாய் அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் வைகுண்டராஜனும், அவரது அண்ணன் ஜெகதீசனும். மிகவும் நூதனமாக நடந்த இந்த ஊழலுக்கு RC MAI 2012 A 0055-என்ற வழக்கு எண்ணில் 120-B IPC r/w 13(2) r/w 13(1)(e) of PC act 1988-ன் படி கடந்த 24.12.2012-ல் சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது. கடந்த 17.10.2014 அன்று சுப்பையாவின் சகோதரர் ஜெயராமன் சி.பி.அய்-ஆல் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார் வைகுண்டராஜன். மேற்படி முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது தலைமறைவாகியுள்ளார் வைகுண்டராஜன்.
தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் கடந்த 20 வருடங்களாக நடத்திவரும் தாது மணல் கொள்ளையானது கனிம வளச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் கீழ் குற்றமாகும். குறிப்பாக அணு உலை மற்றும் அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது.
சுப்பையா அய்.ஏ.எஸ் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர். சுப்பையாவின் தாயார் ஜானகியின் பெயரில் காரியாபட்டியில் ஒரு நிலம் உள்ளது. வானம் பார்த்த பூமியான சில லட்ச ரூபாய் மதிப்பேயுள்ள இந்த நிலத்தை சந்தை விலையை விட பல கோடி ரூபாய் அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் வைகுண்டராஜனும், அவரது அண்ணன் ஜெகதீசனும். மிகவும் நூதனமாக நடந்த இந்த ஊழலுக்கு RC MAI 2012 A 0055-என்ற வழக்கு எண்ணில் 120-B IPC r/w 13(2) r/w 13(1)(e) of PC act 1988-ன் படி கடந்த 24.12.2012-ல் சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது. கடந்த 17.10.2014 அன்று சுப்பையாவின் சகோதரர் ஜெயராமன் சி.பி.அய்-ஆல் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார் வைகுண்டராஜன். மேற்படி முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது தலைமறைவாகியுள்ளார் வைகுண்டராஜன்.
தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் கடந்த 20 வருடங்களாக நடத்திவரும் தாது மணல் கொள்ளையானது கனிம வளச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் கீழ் குற்றமாகும். குறிப்பாக அணு உலை மற்றும் அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது.
ராமனின் புத்திரர்களா ? விபச்சார விடுதியில் பிறந்தவர்களா?” பாஜகவின் மற்றொரு வாந்தி?
நிரஞ்சன் ஜோதி:
”உங்களுக்கு யார் வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள் ? ராமனின் புத்திரர்களா ? அல்லது விபச்சார விடுதியில் பிறந்தவர்களா?” என்று முத்தாய்ப்பாகக் கூறி டில்லி மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மோடியின் அமைச்சரவை சகா சாத்வி நிரஞ்சன் ஜோதி என்ற பெண் சாமியார் தனது உரையை முடித்தார். தனது பேச்சுக்கு ஒரு விளக்கத்தையும் அளித்தார் சாத்வி. அது அவரை இன்னும் தெளிவாக அம்பலப்படுத்தியது. ‘இந்தியாவின் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ராமனின் குழந்தைகளே. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் உண்மையான இந்தியர்கள் இல்லை’ என்பதே தனது உரையின் சேதி என்றார்.
நிரஞ்சன் ஜோதி பேசியவை பாராளுமன்றத்தில் உடனே எதிரொலித்தது. காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் ‘நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும்; மோடி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று பாராளுமன்றத்தை முடக்கினார்கள்.
”உங்களுக்கு யார் வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள் ? ராமனின் புத்திரர்களா ? அல்லது விபச்சார விடுதியில் பிறந்தவர்களா?” என்று முத்தாய்ப்பாகக் கூறி டில்லி மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் மோடியின் அமைச்சரவை சகா சாத்வி நிரஞ்சன் ஜோதி என்ற பெண் சாமியார் தனது உரையை முடித்தார். தனது பேச்சுக்கு ஒரு விளக்கத்தையும் அளித்தார் சாத்வி. அது அவரை இன்னும் தெளிவாக அம்பலப்படுத்தியது. ‘இந்தியாவின் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ராமனின் குழந்தைகளே. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் உண்மையான இந்தியர்கள் இல்லை’ என்பதே தனது உரையின் சேதி என்றார்.
நிரஞ்சன் ஜோதி பேசியவை பாராளுமன்றத்தில் உடனே எதிரொலித்தது. காங்கிரஸ், சிபிஎம், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் ‘நிரஞ்சன் ஜோதி மன்னிப்பு கேட்க வேண்டும்; மோடி அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று பாராளுமன்றத்தை முடக்கினார்கள்.
ரோட்டக் சகோதரிகளும் பாஜகவின் இரட்டை வேடமும்
ரோட்டக் சகோதரிகள் இப்போது சமூக வளைத்தளங்களில்
பிரபலங்களாகி விட்டனர். சமூக வலைத்தள கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா
வாய்ப்பைத் தவற விட அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்பதால், எதிர்வரும்
குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ரோட்டக் சகோதரிகளை கவுரவிக்கப் போவதாக
அறிவித்துள்ளது.
ரோட்டக் சகோதரிகள் யார், அவர்கள் நிகழ்த்திய சாதனை என்னவென்று அறியாதவர்களுக்காக – ஆர்த்தி மற்றும் பூஜா குஹார் ஆகிய இருவரும் சகோதரிகள். ஹரியாணா மாநிலம் சோனேபட் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் அருகில் உள்ள ரோட்டக் நகரின் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகள். கடந்த 28ம் தேதி இவர்கள் இருவரும் ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறையின் பேருந்து ஒன்றில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
குஹார் சகோதரிகள் பயணம் செய்த அதே பேருந்தில் வந்த குல்தீப், மோஹித் மற்றும் தீபக் என்ற மூன்று வாலிபர்கள், இருக்கையில் அமர்ந்து வந்த சகோதரிகளுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர். பெண்கள் என்றால் இருக்கையில் அமரக் கூடாது என்றும், எழுந்து நிற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு பதிலளிக்காத சகோதரிகளை இழிவாக பேசி, துண்டுச் சீட்டில் தங்கள் தொலைபேசி எண்களை எழுதி அவர்கள்மேல் வீசியுள்ளனர்.
ரோட்டக் சகோதரிகள் யார், அவர்கள் நிகழ்த்திய சாதனை என்னவென்று அறியாதவர்களுக்காக – ஆர்த்தி மற்றும் பூஜா குஹார் ஆகிய இருவரும் சகோதரிகள். ஹரியாணா மாநிலம் சோனேபட் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் அருகில் உள்ள ரோட்டக் நகரின் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகள். கடந்த 28ம் தேதி இவர்கள் இருவரும் ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறையின் பேருந்து ஒன்றில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
குஹார் சகோதரிகள் பயணம் செய்த அதே பேருந்தில் வந்த குல்தீப், மோஹித் மற்றும் தீபக் என்ற மூன்று வாலிபர்கள், இருக்கையில் அமர்ந்து வந்த சகோதரிகளுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர். பெண்கள் என்றால் இருக்கையில் அமரக் கூடாது என்றும், எழுந்து நிற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு பதிலளிக்காத சகோதரிகளை இழிவாக பேசி, துண்டுச் சீட்டில் தங்கள் தொலைபேசி எண்களை எழுதி அவர்கள்மேல் வீசியுள்ளனர்.
புதன், 3 டிசம்பர், 2014
Bhopal விஷவாயு கசிவு 30 ஆண்டுகளுக்கு பின்பும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது!
போபாலில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் கடந்த 1984 ஆம் ஆண்டு
மெத்தைல் ஐசோசயனேட் என்ற மரணத்தை விளைவிக்கும் விஷவாயு கசிந்து
வெளியேறியது.
இச்சம்பவத்தில் 1700 பேர் இறந்ததுடன், 5 லட்சத்துக்கும் அதிகமானோர்
உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இவ்விபத்து நடந்து 28 ஆண்டுகளுக்கு
பிறகு போபாலில் வசிக்கும் சம்ஷாத் மற்றும் மெமுனா குரேஷி தம்பதிக்கு தாஹா
குரேஷி என்ற அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது 2 வயதாகும்
அக்குழந்தைக்கு ரத்த புற்றுநோய் தாக்கியுள்ள அதிர்ச்சி தகவல்
வெளியாகியுள்ளது.
இதற்கு காரணம் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வெளியான விஷவாயு கசிவு தான்
என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெற்றோர்கள் இருவரும் விஷவாயு
கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் இக்குற்றச்சாட்டு உண்மையாக
இருக்குமோ? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
காவலர் சர்மிலாவை கற்பழித்து கொலைசெய்த காவல்துறையினர்? சென்னை சிறப்பு காவல் படையில் பணியில்
திண்டுக்கல் நத்தம் பகுதி கோட்டயூரைச் சேர்ந்த சகோதரி சர்மிலா பானு வயது
22 ,சென்னை சிறப்பு காவல் படையில் பணியில் இருந்த காவலரை கற்பழித்து கொலை
செய்து காவல்துறையினர்
பின்னர் அந்த பெண்ணின் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அந்த பெண்ணின் சடலத்தையும் அவர் பெற்றோரிடம் ருபாய் 15000 கொடுத்து மிரட்டினர்
பின்னர் த.மு.மு.க கலமிறங்கி அந்த பெண்ணின் உடலை 2 ஆம் முறையாக பிரோத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் வழிமறித்து சடலத்தை கைப்பற்ற வந்தனர்
பின்னர் தடையை மீறி ஜனாசா ஊர்வலமாக எடுத்துச் சென்று மறியல் போராட்டத்திற்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோணைக்கு கொண்டு செல்லப்பட்டது ஊடகங்களில் ஏன்இந்தசெய்தி வரவில்லை ?இணையத்தில் வந்தகாணொளி இந்த செய்தியை உறுதிபடுத்தி உள்ளது
பின்னர் அந்த பெண்ணின் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அந்த பெண்ணின் சடலத்தையும் அவர் பெற்றோரிடம் ருபாய் 15000 கொடுத்து மிரட்டினர்
பின்னர் த.மு.மு.க கலமிறங்கி அந்த பெண்ணின் உடலை 2 ஆம் முறையாக பிரோத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் வழிமறித்து சடலத்தை கைப்பற்ற வந்தனர்
பின்னர் தடையை மீறி ஜனாசா ஊர்வலமாக எடுத்துச் சென்று மறியல் போராட்டத்திற்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோணைக்கு கொண்டு செல்லப்பட்டது ஊடகங்களில் ஏன்இந்தசெய்தி வரவில்லை ?இணையத்தில் வந்தகாணொளி இந்த செய்தியை உறுதிபடுத்தி உள்ளது
விஜயகாந்த் ஒரு மாதமாக பேப்பர் படிக்கலியாம்! மலேசியாவில ஒரே சூட்டிங்காம்! இனியும் படிக்காதீங்க நாட்டுக்கு ரொம்ப நல்லது .
ஒரு மாத காலமாக செய்தித் தாள்கள் படிக்கவில்லை: சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் பேட்டி&ஒரு
மாத காலமாக செய்தித் தாள்கள் படிக்கவில்லை என, வெளிநாட்டு சுற்றுப்
பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கூறியுள்ளார் இளைய
மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தின்
படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்ற விஜயகாந்த், ஒரு மாதத்திற்குப்
பின்னர் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரிடம் சட்டசபை கூடுவது
குறித்தும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி
எழுப்பினர்.செய்தியாளர்களுக்கு
பதில் அளித்த அவர், ஒரு மாத காலமாக சென்னையில் இல்லை என்பதால், அரசியல்
நிலவரம் தெரியவில்லை. கடந்த ஒரு மாத காலமாக தமிழ் செய்தித் தாள்கள், தமிழ்
தொலைக்காட்சிகளையும் பார்க்கவில்லை. அரசியல் நிலவரத்தை தெரிந்துகொண்ட
பின்னர் தேமுதிக எம்எல்ஏக்கள் செயல்படும் முறை தீர்மானிக்கப்படும் என்றார் nakkheeran.in
வேல்முருகன் போர்வெல்ஸ் படக்கதை லிங்கா படக்கதை போல இருக்கிறதா?
வேல்முருகன் போர்வேல்ஸ் படம் லிங்கா படத்தில் இருந்து திருடப்பட்டதாகக் கூறுவது தவறான செய்தி. இதை நம்பி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் வேல்முருகன் போர்வேல்ஸ் பார்க்க சென்றதாக வாய்வழி செய்தி பரவி உள்லது. தயவு செய்து தவறான தகவல்களை பரப்பி என்னையும், என் படக்குழுவினரையும் அவமானப்படுத்த வேண்டாம் இவ்வாறு இயக்குனர் எம்.பி.கோபி அறிக்கை
சென்னை,டிச.02 (டி.என்.எஸ்) காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் படம் 'வேல்முருகன் போர்வெல்ஸ்' கிராமங்களில் போர் போடும் போர்வெல் லாரி உரிமையாளரான கஞ்சா கருப்பு, தான் வெளியூர் செல்வதால், தனது லாரியை தன்னிடம் வேலை செய்யும் நாயகன் மகேஷிடம் ஒப்படைத்துவிட்டு, எங்கெல்லாம் போர் போட வேண்டுமோ, அந்த விபரத்தையுக் கொடுத்து விட்டுச் செல்கிறார். ஆனால், மகேஷோ தான் காதலிக்கும் நாயகி ஆருஷியின் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதை அறிந்து, அந்த ஊருக்கு இலவசமாக போர் போட்டு கொடுப்பதற்காக செல்கிறார்.
அந்த ஊரில் வெற்றிகரமாக போர் போட்டு, தண்ணிரும் வர, அந்த தண்ணீரை பிடிப்பதற்காக ஊர் பெண்களிடம் ஏற்படும் மோதல் கலவரத்தில் முடிகிறது.
பிளஸ் 2 மாணவன் அறைந்ததில் ஆசிரியை காது கிழிந்தது ! மதுரவாயலில்ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இந்தியாவின் இழிவு – படிக்க வேண்டிய அருந்ததி ராய் கட்டுரை
என் தந்தை ஓர் இந்துப் பார்ப்பனர். நான்
வயதுக்கு வரும் வரை அவரைப் பார்த்ததே இல்லை. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டு
ஆட்சி நடந்த கேரளாவில் அயமெனம் சிற்றூரில் ஒரு சிரிய கிறித்துவக்
குடும்பத்தில் என் தாயோடு வளர்ந்து வந்தேன். அயமெனம் சிற்றூர்க்கென
அமைந்திருந்த ‘பறையர்’ தேவாலயத்தில் ‘பறையர்’ குருமார்கள் ‘தீண்டத்தகாத"
திருக்கூட்டத்தினரைப் பார்த்து போதனைகள் வழங்குவர். ஊர் மக்களின்
பெயர்களில், அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதில், செய்யும்
தொழிலில், உடுத்தும் உடையில், ஏற்பாடு செய்யும் திருமணங்களில், பேசும்
மொழியில் சாதி ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனாலும் நான் ஒரு பள்ளிப் பாடப்
புத்தகத்தில் கூட சாதி என்னும் கருத்தைக் கண்டதே இல்லை. இந்திய
எழுத்தாளரும் சிந்தனையாளருமாகிய பி. ஆர். அம்பேத்கர் 1936இல் வழங்கிய
உரையாகிய சாதி ஒழிப்பு என்னும் நூலைப் படித்த பிறகுதான் நமது பயிற்றுமுறை
உலகில் உள்ள பெரும் இடைவெளி பற்றி என் மனத்தில் உறைத்தது. இந்த இடைவெளி
இருப்பதேன் என்றும், அது இந்தியச் சமுதாயம் அடிப்படையான மாற்றத்துக்கு உள்ளாகாத வரை தொடரவே செய்யும் என்றுங்கூட அவ்வாசிப்பு
எனக்குத் தெளிவாக உணர்த்தியது.
உங்களுக்கு
இந்த ஆண்டின் நோபல் பரிசைக் கூட்டாகப் பெற்ற மலாலா யுசாஃப்சைப் பற்றித்
தெரியும், ஆனால் சுரேகா போட்மங்கே பற்றித் தெரியாது என்றால் அம்பேத்கரைக்
கட்டாயம் படியுங்கள்.
சட்டசபை மூன்று நாட்களுக்கு மட்டும் கூடும் ?
நடக்காத சட்டசபையை முதலில் கலையுங்க
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம், மூன்று நாட்கள் மட்டும் நடைபெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டம் நாளை துவங்குகிறது. இக்கூட்டத்தில், பருப்பு ஊழல், முட்டை முறைகேடு, பால் ஊழல், கனிமவள முறைகேடு, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, அரசு அலுவலகங்களில், ஜெயலலிதா படத்தை அகற்றாதது என, பல பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. >இதுகுறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது, கூட்டம் துவங்கும் நாளில், அலுவல் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கும். முதலில், ஒரு வாரம் கூட்டம் நடத்த, அரசு முடிவு செய்தது. ஆனால், தற்போது, மூன்று நாட்கள் மட்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.dinamalar.com அம்மா பஜனை பாசுரம் எல்லாம் படிக்க மூன்று நாள் போதுமா?
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம், மூன்று நாட்கள் மட்டும் நடைபெற வாய்ப்புள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டம் நாளை துவங்குகிறது. இக்கூட்டத்தில், பருப்பு ஊழல், முட்டை முறைகேடு, பால் ஊழல், கனிமவள முறைகேடு, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, அரசு அலுவலகங்களில், ஜெயலலிதா படத்தை அகற்றாதது என, பல பிரச்னைகளை எழுப்ப, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. >இதுகுறித்து, சட்டசபை செயலக அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை கூட்டம் எத்தனை நாள் நடைபெறும் என்பது, கூட்டம் துவங்கும் நாளில், அலுவல் குழு கூடி முடிவு செய்து அறிவிக்கும். முதலில், ஒரு வாரம் கூட்டம் நடத்த, அரசு முடிவு செய்தது. ஆனால், தற்போது, மூன்று நாட்கள் மட்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.dinamalar.com அம்மா பஜனை பாசுரம் எல்லாம் படிக்க மூன்று நாள் போதுமா?
செவ்வாய், 2 டிசம்பர், 2014
நடிகை தேவயாணி சர்ச் பார்க் காண்வென்டில் ஆசிரியராக சேர்ந்துள்ளார்!
பள்ளிக்கூடத்தில் ஆசிரியை வேலையில் சேர்ந்துள்ளதாக தேவயானி தெரிவித்தார்.
நடிகை தேவயானி ‘தொட்டா சினுங்கி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 1995–ல்
இப்படம் வந்தது. ‘காதல் கோட்டை’ படம் இவரை பிரபலபடுத்தியது.
சூர்யவம்சம், பிரண்ட்ஸ், மறுமலர்ச்சி, தெனாலி, வல்லரசு உள்ளிட்ட பல
படங்களில் நடித்தார்.
2001–ல் டைரக்டர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு
சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார். தற்போது அவருக்கு 40 வயதாகிறது.
வீட்டில் கணவர், குழந்தைகளை கவனித்து வந்த அவர் திடீரென ஆசிரியை வேலையில்
சேர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து தேவயானி கூறியதாவது:–
வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம்
உண்டு. ஆசிரியை வேலை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக
ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஆசிரியர் பயிற்சி படிப்பை
முடித்ததும் ஆசிரியை வேலையில் சேர முடிவு செய்தேன்.
எனது மகள்கள் படிக்கும் பள்ளியில் ஆசிரியையாய் வேலை பார்க்க விரும்பினேன். இதற்காக பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து வேலை கேட்டேன்.
அவரும் சம்மதித்தார். இப்போது அந்த பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
நான் பாடம் நடத்தும் வகுப்பில் 45 குழந்தைகள் உள்ளனர்.
போலீசார் சீருடையில் மினி கேமரா: ஒபாமா அதிரடி! கருப்பினத்தவர் மீது துப்பாக்கி சூடு எதிரொலி?
வாஷிங்டன்:
அமெரிக்காவின் பெர்க்யூசன் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் கருப்பினத்தை
சேர்ந்த வாலிபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், பொம்மை
துப்பாக்கி வைத்திருந்த 12 வயது சிறுவனை அமெரிக்க போலீசார் சுட்டுக்
கொன்றனர். எவ்வித விசாரணையும் இன்றி கருப்பினத்தை சேர்ந்தவர்கள் மீது
போலீசார் துப்பாக்கி சூடு நடத்துவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம்
தெரிவித்தனர். இதை எதிர்த்து ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இப்பிரச்னை குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நேற்று மனித
உரிமை ஆர்வலர்கள், சட்டத்துறை வல்லுநர்களை சந்தித்து பேசினார். காவல் துறை
விதிமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவர உள்ளதாக தெரிவித்த ஒபாமா,
சம்பவத்தின் உண்மை தன்மையை கண்டறியும் வகையில், போலீசாரின் சீருடையில்
சிறிய அளவிலான கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சினிமா நடிகைகள் எல்லாம் கல்கி (அம்மாபகவன் ) ஆசிரமத்தில்!
நகரி - ஆந்திர மாநிலம் சித்தூரில் வரதய்யா பாளையம் பகுதியில் கல்கி பகவான்
ஆசிரமம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கல்கி பகவானை
தரிசித்து செல்கிறார்கள்.
நேற்று முன்தினம் கல்கி ஆசிரமத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரை வரதீட்சை பூ ஜை நடைபெற்றது. நாட்டில் விவசாயம் செழிக்கவும், அனைவரும் நலன் பெறவும் நடைபெற்ற இந்த பூஜையில் நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஹேமமாலினி, ஷில்பா ஷெட்டியின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 3 ப ேரும் கல்கி ஆசிரமத்தில் நடந்த வரதீட்சை பூஜையில் க லந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் கல்கி ஆசிரமத்தில் காலை 9 மணியில் இருந்து 12 மணி வரை வரதீட்சை பூ ஜை நடைபெற்றது. நாட்டில் விவசாயம் செழிக்கவும், அனைவரும் நலன் பெறவும் நடைபெற்ற இந்த பூஜையில் நடிகைகள் மனிஷா கொய்ராலா, ஹேமமாலினி, ஷில்பா ஷெட்டியின் சகோதரி மற்றும் தாய் ஆகியோர் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 3 ப ேரும் கல்கி ஆசிரமத்தில் நடந்த வரதீட்சை பூஜையில் க லந்து கொண்டனர்.
100 நாள் வேலை திட்டத்தில் விவசாய பணிகளைச் சேர்க்கவேண்டும்
100 நாள் வேலை திட்டத்தில்
விவசாய பணிகளைச் சேர்க்கவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கவிஞர் கனிமொழி
எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எனப்படுகிற 100 நாள் வேலைத்திட்டத் துக்கான நிதி குறைக்கப் படுகிறது, இந்தத் திட் டத்தை செயல்படுத்தும் பகுதிகள் குறைக்கப்படு கிறது என்ற தகவல் கவலை அளிப்பதாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் அதன் ஆற்றலைக் குறைக் கும் மாற்றங்கள் செய்வது கவலைக்குரியது. பெருமள விலான மக்கள் இந்த வேலைவாய்ப்புகளை நம்பியே இருக்கிறார்கள்.
மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எனப்படுகிற 100 நாள் வேலைத்திட்டத் துக்கான நிதி குறைக்கப் படுகிறது, இந்தத் திட் டத்தை செயல்படுத்தும் பகுதிகள் குறைக்கப்படு கிறது என்ற தகவல் கவலை அளிப்பதாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் அதன் ஆற்றலைக் குறைக் கும் மாற்றங்கள் செய்வது கவலைக்குரியது. பெருமள விலான மக்கள் இந்த வேலைவாய்ப்புகளை நம்பியே இருக்கிறார்கள்.
தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கவேண்டிய அவசியம் என்ன? டாக்டர் ராமதாஸ் கேள்வி?
தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க
வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக
நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடப்பாண்டில்
ரூ.27,147 கோடிக்கு மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம்
திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக
மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள விலை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடி முதல் ரூ.12 ஆயிரம்
கோடி வரை இழப்பை சந்தித்து வருகிறது. மின்வாரியத்தின் நிர்வாகத்
திறமையின்மையும், மின்சாரம் கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழலும் தான்
இதற்குக் காரணம் என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன். புத்தம் புது காளை என்ற மெட்டில் : புத்தம்புது ஊழல்? மின்துறை ஊழல் மின்துறை ....
ஜெயலலிதாவின் வருமான வரி வழக்கு முடிவு! 2 கோடி மட்டுமே அபராதம் ! பின்னணியில்...?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம்,
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறிய வழக்கில், அபராத தொகை, வருமான வரி
தொகை, வழக்கு செலவு தொகை என, இரண்டு கோடி ரூபாயை முழுமையாக செலுத்தி
விட்டதாக, சென்னை, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.<
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா
ஆகியோர், பங்குதாரர்களாக இருந்த, சசி என்டர்பிரைசஸ் நிறுவனம், 1991 - 92,
92 - 93ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதா,
சசிகலா, தனிப்பட்ட முறையில், 1993 - 94ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை
தாக்கல் செய்யவில்லை.இவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய
தவறியதற்காக, 1996ல், சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல்
நீதிமன்றத்தில், வருமான வரித்துறை வழக்கு தொடுத்தது. அதெப்படி எந்த லாபமும் இல்லாத நிறுவனத்திற்கு வரி கட்டுவார்கள் ....அப்ப இந்த இரண்டு கோடிக்கும் கணக்கு காட்ட வேண்டுமே
திங்கள், 1 டிசம்பர், 2014
லிங்கா ! தமிழ் ரசிகர்களின் தலையில் அதிக விலையுள்ள மிளாகாய்
ரூ.150, ரூ.200க்கு
டிக்கெட் விற்கப்பட்டாலும் கொடுக்கப்பட்ட டிக்கெட்டில் ரூ.50 என்று தான்
இருக்கும். இல்லாவிட்டால் டிக்கெட்டில் விலையே இருக்காது.
தமிழகத்தின் ஹாட் டாக் இப்போது 'லிங்கா' தான். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் 'லிங்கா' திரைப்படத்தின் ஆடியோவின் உரிமை இத்தனை கோடி.. வெளிநாட்டு உரிமை இத்தனை கோடி... தொலைக்காட்சி உரிமை இத்தனை என கோடி...என இந்த படத்தின் வியாபாரங்கள் மக்களிடம் முக்கிய விவாதப் பொருளாகி உள்ளது.
தமிழகத்தின் ஹாட் டாக் இப்போது 'லிங்கா' தான். இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் 'லிங்கா' திரைப்படத்தின் ஆடியோவின் உரிமை இத்தனை கோடி.. வெளிநாட்டு உரிமை இத்தனை கோடி... தொலைக்காட்சி உரிமை இத்தனை என கோடி...என இந்த படத்தின் வியாபாரங்கள் மக்களிடம் முக்கிய விவாதப் பொருளாகி உள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு 'லிங்கா' படம் விற்றுவிட்டதாக
சுவாரஸ்யத்துடன் பேசிவருகின்றோம். ஆனால் அது கடைசியில் படம் பார்க்க
செல்பவர்களின் தலையில்தான் விடியும் என்பதை வசதியாய் மறந்து விட்டோம். தமிழகத்தின் சகல மீடியாக்களும் ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுத்து லிங்கா படத்தின்டிக்கெட்விலையைஉயர்த்துகிறார்கள்.கோடி கோடியாக பேசப்படும் லின்காவின் விலைஎல்லாம் சாதாரண ரசிகர்கள் பார்க்கும் டிக்கெட்டின் விலையை உயர்த்த கட்டி எழுப்பப்படும் பலூன் என்பதை மறக்கவேண்டாம் , இதற்காகத்தான் இவர் அரசியல் ஆசை என்ற மசாலைவையும் தூவுகிறார். இவர் ஒரு காரிய கிறுக்கன் தமிழ் ரசிக மகா ஜனங்களே தாராளமாக ஏமாறுங்க. சொன்னா கேக்கவா போறீங்க?
துடிக்கும் ராஜா?கடிக்கும் தமிழிசை – வீபிடணர் வைகோவின் பதில் என்ன?
பாஜகவினர் தாறுமாறாகப் பேசி வரும் நிலையில் பாஜக கூட்டணியிலிருந்து
வைகோ வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால் இதுவரை கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான எந்த அறிகுறியையும்
காட்டாமல் உள்ளார் வைகோ. அதேசமயம், மதிமுகவினர் கூட்டணிக்குக் குட் பை
சொல்லத் தயாராகி விட்டனர். விரைவில் வைகோவும் அறிவிப்பார் என்று
மதிமுகவினர் கூறுகிறார்கள்.
மீண்டும் ஒரு
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக முதல் ஆளாக பாஜக கூட்டணியில் இணைந்தவர்
வைகோ. இது பாஜகவினருக்கு பெரும் ஊக்கம் அளித்தது. ஆனால் அடுத்தடுத்து
தேமுதிக, பாமக என முக்கியக் கட்சிகள் வந்ததால் வைகோவை சற்றே ஓரம் கட்ட
ஆரம்பித்தது பாஜக. இது வைகோவை கோபத்தில் ஆழ்த்தியது. இருப்பினும் அமைதி
காத்தார்.
தேமுதிக, பாமகவுக்கெல்லாம் சீட் ஒதுக்கிக் கொடுத்த பின்னர்தான் மதிமுக
பக்கம் திரும்பிப் பார்த்தது பாஜக. அதையும் கூட வைகோ பொறுத்துக் கொண்டார்.
ஈழத் தமிழர் விவகாரத்தில் வாஜ்பாயைப் போல மோடி ஆக்கப்பூர்வமாக
செயல்படுவார், ராஜபக்சேவை ஒடுக்க முயற்சிப்பார், இலங்கையைக் கண்டிப்பார்
என்றெல்லாம் நினைத்திருந்தார் வைகோ. அடேங்கப்பா நினைத்திருந்தார்? நினைத்திருப்பதாக நடித்தார்! ஆனால் எல்லோரையும் நம்பவைத்தார் இந்த அரசியல் நடிகர் திலகம் வை.கோபாலசாமி என்பதே உண்மை.தமிழக அரசியலில் இவரை ஒரு அப்பாவி என்று பலரும் இன்னும் நம்புகிறார்களே?
காவியத் தலைவன் ! எந்த ஃப்ரேமிலும் காவியத்தலைவனை .....
ஜெயமோகன் காவியத்தலைவனில் எப்படியெல்லாம் தடுமாறியிருக்கிறார் என்பதை
பார்க்கும்போது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே சினிமாவில் வசனங்களால் அனல்
கக்கிய அண்ணாவும், கலைஞரும், கண்ணதாசனும், திருவாரூர் தங்கராசும் எத்தனை
மகத்தான எழுத்தாளுமைகள் என்பதை உணரமுடிகிறது.ராஜபார்ட் வேஷம் கட்டும் பொன்வண்ணன், குரு நாசரிடம் கோபித்துக் கொண்டு
கிளம்புகிறார். பிருத்விராஜை நடித்துக் காட்டும்படி நாசர் சொல்கிறார்.
பொன்வண்ணனைவிட பிரமாதமாக பிருத்வி நடிக்கிறார். அடுத்து சித்தார்த்தையும்
நடித்துக்காட்ட சொல்கிறார். நம்மூர் நாடக மரபு நடிப்பினை உடைத்து, லேசான
மேற்கத்திய தாக்கத்தோடு சித்தார்த் செய்ய காவியத் தலைவன் உருவாகிறான் என்று
நம்பிக்கை பிறக்கிறது.
அமெரிக்க ஆள் கடத்தலும் விசா மோசடியும் !
கோபி முத்துபெரியசாமி மதுரையைச் சேர்ந்தவர். கணினி
மென்பெருள் வல்லுனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழையும் பலரையும் போல்
அமெரிக்க கனவுகளைக் கொண்டவர். அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும், அங்கே
ஒரு நல்ல வேலையையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளும் கனவுகள் அவருக்கு
இருந்தது. அமெரிக்காவில் வேலை தேடி வந்த கோபிக்கு சாப்டெக் என்கிற
நிறுவனத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது.
2007-ம் ஆண்டு சாப்டெக் நிறுவனத்தில் வேலை கிடைத்து அமெரிக்கா சென்றுள்ளார் கோபி. சாப்டெக் நிறுவனத்தில் வேலை என்றால் அது சாப்டெக் நிறுவன வேலையல்ல – குழப்பமாக இருக்கிறதா? சாப்டெக் கிருஷ்ண குமார் என்பவரால் அமெரிக்காவில் நடத்தப்பட்டு வரும் ஒரு ’ஆள்பிடி’ நிறுவனம்.
2007-ம் ஆண்டு சாப்டெக் நிறுவனத்தில் வேலை கிடைத்து அமெரிக்கா சென்றுள்ளார் கோபி. சாப்டெக் நிறுவனத்தில் வேலை என்றால் அது சாப்டெக் நிறுவன வேலையல்ல – குழப்பமாக இருக்கிறதா? சாப்டெக் கிருஷ்ண குமார் என்பவரால் அமெரிக்காவில் நடத்தப்பட்டு வரும் ஒரு ’ஆள்பிடி’ நிறுவனம்.
மதிமாறன் : இந்த வசனகர்த்தாவுக்கு வசனம் எழுதத் தெரியல? ரசிகர்கள் ஒவ்வொரு முறையும் தெளிவாக...
கடலுக்குப் பிறகு காவியத் தலைவனின் கதை முடித்த கலைஞன் வே.மதிமாறன்
‘கடல்’ படத்திற்குப் பிறகு, அதுபோலவே.. வசனகர்த்தா ‘ஜெயமோகன்’ தன் வேலையை காட்டியிருக்கிறார் போல..
காவியத்தலைவனுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்'
காவியத்தலைவனுக்கு என் ஆழந்த அனுதாபங்கள்'
வசனகர்த்தா ஜெயமோகன் எழுதிய பலப்படங்களைப் பார்த்திருக்கிறேன்.
கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாகவும்
இல்லை. சரி, பரவாயில்லை, பாத்திரத்தைத் தாண்டி வசனம் ரசிக்கும்படியாக
இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வசனத்தோடு கூடவே திரைக்கதையும்
எழுதிட்டாருன்னு வைச்சிக்கங்க, அது திரைக்கு எழுதப்பட்ட கதையல்ல, அந்தப்
படத் தயாரிப்பாளருக்கு எழுதப்பட்ட இரங்கல்.
எப்படி இவர.. வசனகர்த்தாவா தொடர்ந்து பலபேர் பயன்படுத்துகிறார்கள்? படுதோல்விகளுக்குப் பிறகும். அதுவும் ‘பெரிய தில்லாலங்கடி’ இயக்குநர்களே.
சமூகப் பொறுப்புள்ளவர்களாகச் சொல்லிக்
கொள்கிற அல்லது சொல்லப்படுகிறவர்களும், சமூக விரோத கருத்துக்களைச்
சொந்தமாகக் கொண்ட இவரைதான் பயன்படுத்துகிறார்கள். அந்த இயக்குநர்களின்
சமுகப் பொறுப்புக்கு இதுவே சாட்சி.
ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை திடீர் முடிவு ஏன்? பின்னணியில் பாஜக?
சென்னை: 18 ஆண்டுகளாக நடைபெற்ற வருமான வரி ஏய்ப்பு வழக்கில், திடீரென
ஜெயலலிதாவுடன் சமரசமாக போக வருமான வரித்துறை முன் வந்ததற்கு பின்னணியில்
அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது
தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக்
கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம்,
கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத்
தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக, முதல்வர்
ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீதும்
வருமான வரித் துறை 1996, 1997-ஆம் ஆண்டுகளில் வழக்குத் தொடர்ந்தது.
மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது? 13 ஜோடி யானைத் தந்தங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவருக்கு விருதா?
வீட்டில் யானைத் தந்தங்கள்
வைத்திருந்ததல், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பத்ம பூஷன் வழங்க விலங்குகள்
பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது
மோகன் லாலுக்கு பத்மபூஷன் விருது வழங்க கேரள அரசு சிபாரிசு செய்துள்ளது.
யானைத் தந்தங்களைப் பதுக்கியவருக்கு பத்மபூஷன் விருது வழங்குவது ஏற்புடையது
அல்ல என்று விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதிக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளர் பி.கே.வெங்கடாசலம் கூறும்போது,
'மோகன்லால் தனது வீட்டில் 13 ஜோடி யானைத் தந்தங்களைப் பதுக்கி
வைத்திருந்தார்.
குஷ்புவை விமர்சித்த தமிழிசைக்கு கண்டனம்! அமைச்சர் ஸ்மிருதியை விட குஷ்புவுக்கு அரசியல் தெரியும்
புதுவை மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வீரராகவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துள்ள குஷ்புவிற்கு காங்கிரஸ் வரலாறே
தெரியாது என்றும், காங்கிரஸ் வரலாறை முழுமையாக அறியாதவர் என்றும் தமிழக
பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தராஜன் விமர்சித்துள்ளார். பாரதீய ஜனதா
கட்சி நடிகை ஸ்மிருதி ராணியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக
பதவியில் அமைத்துள்ளது. அவர்களுக்கு தெரிந்த வரலாறு அரசியல் ஆகியவற்றை விட
குஷ்புவிற்கு அதிகமாகவே காங்கிரஸ் வரலாறு தெரியும். ஸ்மிருதி ராணியை விட
தேச நலனில் அதிக அக்கறை கொண்டவர் குஷ்பு.
முதலில் காங்கிரசில் குஷ்பு இணைந்திருக்கிற இந்த தருணத்தை பார்க்கவேண்டும்.
காங்கிரஸ் வெற்றி வாய்ப்பினை இழந்துள்ள இந்த தருணத்தில் மிக துணிச்சலாக
மதச்சார்பின்மையை பாதுகாக்க தேச நலனை கருத்தில்கொண்டு கட்சியில்
இணைந்துள்ளார்.
நூடுல்ஸ்! இதய நோய், பக்கவாதம், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு?
நூடுல்ஸ்... என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது
குழந்தைகளின் குதூகலம்தான். அதிலும் துரித நூடுல்ஸ் என்றால் பெரும்பாலான
அம்மாக்களுக்கும் மகிழ்ச்சிதான்.
எடுத்தோமா 5 நொடியில் செய்தோமா.. குழந்தையிடம் கொடுத்தால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டுவிடும். வாயிறு நிரம்பிய திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும் என்று நினைப்போம்.
ஆனால் நூடுல்ஸ் அவ்வளவு எளிதான உணவு பொருளும் அல்ல, அதனை நினைத்து மகிழ்ச்சி கொள்ளவும் ஏற்றது அல்ல.
நூடுல்ஸ் சாப்பிடாதீங்கன்னு நிறைய பேர் சொல்றாங்க தாங்க.. ஆனா, எங்க புள்ளைங்க அதத்தானே விரும்பி சாப்பிடுறாங்கன்னு சொல்வது புரிகிறது. ஆனா, அவங்களுக்குப் பிடிக்கும்னு கல்லையோ மண்ணையோ நீங்க சாப்பிடக் கொடுப்பீங்களா.. அப்படியே கல்லையோ மண்ணையோ கொடுத்தால் கூட அது நூடுல்ஸை விட அதிகக் கெடுதியை செய்து விடாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஏன் எனில் நூடுல்ஸை வேண்டவே வேண்டாம் என்று சொல்வதற்கு எங்களிடம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றை சொல்ல நேரமில்லாததால் ஒரு முக்கியமான பத்து காரணங்களை இங்கே சொல்கிறோம்.
எடுத்தோமா 5 நொடியில் செய்தோமா.. குழந்தையிடம் கொடுத்தால் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டுவிடும். வாயிறு நிரம்பிய திருப்தியும் நமக்குக் கிடைத்துவிடும் என்று நினைப்போம்.
ஆனால் நூடுல்ஸ் அவ்வளவு எளிதான உணவு பொருளும் அல்ல, அதனை நினைத்து மகிழ்ச்சி கொள்ளவும் ஏற்றது அல்ல.
நூடுல்ஸ் சாப்பிடாதீங்கன்னு நிறைய பேர் சொல்றாங்க தாங்க.. ஆனா, எங்க புள்ளைங்க அதத்தானே விரும்பி சாப்பிடுறாங்கன்னு சொல்வது புரிகிறது. ஆனா, அவங்களுக்குப் பிடிக்கும்னு கல்லையோ மண்ணையோ நீங்க சாப்பிடக் கொடுப்பீங்களா.. அப்படியே கல்லையோ மண்ணையோ கொடுத்தால் கூட அது நூடுல்ஸை விட அதிகக் கெடுதியை செய்து விடாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
ஏன் எனில் நூடுல்ஸை வேண்டவே வேண்டாம் என்று சொல்வதற்கு எங்களிடம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றை சொல்ல நேரமில்லாததால் ஒரு முக்கியமான பத்து காரணங்களை இங்கே சொல்கிறோம்.
நாடு முழுவதும் பின்பற்றப்படும் 10+2+3 கல்வி முறை மாறுகிறது: புதிய 8+4+3 திட்டம்! கல்வி மேதை ஸ்மிருதி இராணி அறிவிப்பு ~!
புதுடில்லி : இந்தியாவில் பின்பற்றப்படும், 10+2+3 கல்வி முறையை மாற்ற,
மத்திய அரசு விரைவில் முடிவு செய்யும். இதற்காக, ஆர்.எஸ்.எஸ்.,சின் ஒரு
அமைப்பான, பி.எஸ்.எம்., புதிய கொள்கை திட்டத்தை, மத்திய அரசிடம்
வழங்கியுள்ளது. அதன்படி, 8+4+3 என, விரைவில் கல்வி முறை மாற உள்ளது.கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில், 6 - 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு,
மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த ஜெர்மன் நீக்கப்பட்டு, சமஸ்கிருதம்
கட்டாயமாக்கப்பட்டது. அது போல, நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கல்வி முறையை
கொண்டு வருவதற்காக, மாநில பட்டியலில் உள்ள கல்வியை, மத்திய பட்டியலில்
சேர்க்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், இம்மாதம், 17 மற்றும்
18ம் தேதிகளில், ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற
உள்ள, ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்வி பிரிவான, 'பாரதிய சிக் ஷா மண்டல் -
பி.எஸ்.எம்.,' மாநாட்டில், புதிய கல்வி முறைக்கான வரைவுத் திட்டம்
வெளியிடப்பட உள்ளது.அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள, 10 + 2 + 3 என்ற
முறை மாற்றப்பட்டு, 8 + 4 + 3 என்ற புதிய முறையை அறிமுகப்படுத்த, அந்த
மாநாட்டில் விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளது. Certificate course க்கும், degree course க்கும் வித்தியாசம் தெரியாத,
degree கூட படிக்காத ஒரு கல்வி அமைச்சர், இது பலகோடி மாணவர்களின்
தலையெழுத்தை மாத்தப்போகிறது. என்ன கொடுமை? காமராஜர் என்ன படித்தார்ன்னு காவிங்க கேட்டாலும் கேப்பாய்ங்க
ஞாயிறு, 30 நவம்பர், 2014
இந்த விஞ்ஞானி உண்மையிலேயே அறிவாளி தான்
(டி.என்.எஸ்) பண்டையக்கால தமிழ் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும், அவை
குறித்த வரலாற்று குறிப்பிகளையும் மையமாக வைத்து ஒரு கற்பனை கதையுடன்
உருவாகியுள்ள விஞ்ஞானம் சம்மந்தமான படம் தான் இந்த ‘விஞ்ஞானி’
விஞ்ஞானியான
நாயகன் பார்த்தி, எதிர்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கும்
சூழ்நிலை உள்ளதால், குறைந்த தண்ணீரில் விளையக்கூடிய நெல்லை கண்டுபிடிக்கும்
முயற்சியில் இறங்குகிறார். இது சாத்தியமில்லாத ஒன்று, என்று சக
விஞ்ஞானிகள் கூற, இதை சாத்தியமாக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டு,
அதற்கான முயற்சியில் இறங்குகிறார் பார்த்தி.
இந்த நிலையில், தமிழக
கிராமம் ஒன்றில், தமிழ் ஆசிரியையாக இருந்துக்கொண்டு, விவசாயத்திலும்
ஈடுபாடு காட்டி வரும் மீரா ஜாஸ்மீன், தனது கிராமத்தில் உள்ள மலை கோவில்
அருகே ஒரு கல்வெட்டு இருப்பது போலவும், அதன் அருகில் நெல் பயிர்களை சிலர்
புதைத்து வைப்பது போலவும் கனவு காணுகிறார். அதன்படி, அந்த இடத்தில் மீரா
ஜாஸ்மீனின் குடும்பம் அந்த கல்வெட்டை தேடி கண்டுபிடிக்கிறார்கள். அதில்,
தொல்காப்பியர் எழுதிய கல்வெட்டு என்றும், அதில், தாகம் தீர்த்த நெல் என்ற
ஒன்று இருப்பதாகவும், அது குறைந்த நீரில் பெரும் விளைச்சல் கொடுக்க கூடிய
நெல், என்றும் குறிப்பிட்டிருப்பதுடன், அந்த நெல்லை ஒரு பானையில் வைத்து
அங்கே புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது. அதை மீரா
ஜாஸ்மீன் கைப்பற்றுகிறார்.
தமிழகத்தில் பாஜக திருவள்ளுவர் மீது (வஞ்ச) புகழ்ச்சி?
வைகோவுக்கு அடுத்த வழி?
வைகோவை பா.ஜ.கவின் சுனா சாமியும் எச்.ராஜாவும் ஏன் அடிக்க
ஆரம்பித்திருக்கிறார்கள்? 'தூக்கி வீசப்படுவதற்கு முன் வைகோ வெளியேற
வேண்டும்’ என சுப்பிரமணியசாமி பேசியிருக்கிறார். ‘வைகோவுக்கு நாவடக்கம்
தேவை. இல்லையென்றால் பத்திரமாக திரும்ப முடியாது’ என்று எச். ராஜா
பேசியிருக்கிறார். மேலிடத்தின் கண்ணசைவு இல்லாமல் இதற்கெல்லாம் வாய்ப்பே
இல்லை என்றுதான் நினைக்கிறேன். வைகோவின் கொள்கைகளுக்கு நேர் எதிரான
நிலையில் நிற்கும் இந்த இரண்டு பேரும் கொம்பை எடுத்து ஊத
ஆரம்பித்திருக்கிறார்கள். இனி கணிசமான பா.ஜ.க தொண்டர்களும் வைகோவை
அவமதிக்கத் தொடங்குவார்கள். பிற தலைவர்களும் இவர்களோடு கை கோர்த்துக் கொள்ள
நிறைய வாய்ப்பிருக்கிறது.
தமிழகத்தில் யாருமே கண்டு கொள்ளாத சுப்பிரமணிய சாமிக்கு தனது கட்சியில் ஒரு
இடத்தைக் கொடுத்த போது நிறையப் பேர் ஆச்சரியப்பட்டார்கள். அவருக்கு
அளிக்கப்பட்டிருந்த அஜெண்டாவில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து
குடைச்சலை கொடுத்து வர வேண்டும் என்கிற அஜெண்டா முக்கியமான இடத்தில்
ஒளிந்திருந்ததை இப்பொழுது புரிந்து கொள்ளலாம். அதிமுகவுக்கு சொத்துக்
குவிப்பு வழக்கு. திமுகவுக்கு 2ஜி. இப்பொழுது மதிமுகவுக்கு அவமானம்.
'எல்லோரையும் சந்தேகி' -தருண் விஜய் உள்பட!
பாரதிய ஜனதாவிற்குப் பல முகங்கள் உண்டு! அமைதியாகப் பேசும் இல. கணேசன்
ஒரு முகம். அடாவடியாய்ப் பேசும் ஹெச்.ராஜா இன்னொரு முகம்! தமிழர்களைப்
பொறுக்கிகள் என்று சொல்லும் சு.சாமி ஒரு முகம், தமிழ் மொழியை,
திருக்குறளைப் போற்றும் தருண் விஜய் இன்னொரு முகம். எப்போதும்
தமிழர்களுக்கு மட்டும் ஒரே முகம் - ஏமாளி முகம்!
பா.ஜ.கட்சி, தான் ஆட்சிக்கு வருவதற்கு முன் எத்தனையோ உறுதிமொழிகளைக்
கொடுத்தது. வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் இந்தியாவிற்குக்
கொண்டுவந்து, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்
கொடுப்போம் என்றது. (பாவம், அதை நம்பிப் பலபேர் கடன் வேறு வாங்கி
விட்டார்கள்!) இப்படிப் பல்வேறு உறுதிமொழிகள். ஆனால் இன்றோ, சமஸ்க்ருதத்
திணிப்புக்கு மட்டும்தான் அவர்களுக்கு நேரம் இருக்கிறது.
முதலில் சமஸ்க்ருத வாரம். பிறகு, கேந்திரிய வித்யாலயங்களில் ஜெர்மன்
மொழிக்குப் பதிலாக, சம்ஸ்க்ருதப் பாடம். கடந்த வாரம், தில்லியில் நடைபெற்ற
'ஜல் தன்மன்' என்னும் நதிநீர் இணைப்புக் கருத்தரங்கில், நீர் வளத் துறை
அமைச்சர் உமா பாரதி ஒரு புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். அங்கே
பேசியவர்களில் சிலர் ஆங்கிலத்தில் பேசும்போது, எதிர்த்துச் சிலர் குரல்
எழுப்பியுள்ளனர். உடனே, உமா பாரதி எழுந்து, சிலருக்கு இந்தி தெரியவில்லை,
சிலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. இந்தச் சிக்கலைப் போக்குவதற்கு ஒரே
வழிதான் உள்ளது. இந்தியா முழுவதும் சமஸ்க்ருதத்தை இணைப்பு மொழியாக்கிட
வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் மைக்கேல் பிரவுனை சுட்டுகொன்ற போலீஸ்காரர் பதவி விலகல்
அமெரிக்காவில் மிசோரி மாகாணம், பெர்குசனில் கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி,
மைக்கேல் பிரவுன் என்ற கருப்பின வாலிபரை டேரன் வில்சன் என்ற வெள்ளை இன
போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்ற சம்பவம், அங்கு தொடர் போராட்டங்களுக்கு வழி
வகுத்தது.
இந்த வழக்கில் போலீஸ் அதிகாரி டேரன் வில்சன் மீது நீதிமன்றத்தில் குற்ற
விசாரணை நடத்த தேவையில்லை என ஜூரிகள் குழு கடந்த 24-ந் தேதி தீர்ப்பு
அளித்தது. இது கறுப்பின இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது
சுட்டுக்கொல்லப்பட்ட பிரவுனின் குடும்பத்தினர், ஜூரிகளின் தீர்ப்பு
அநீதியானது என கூறினர்.
லதா ரஜினிகாந்த் 10 கோடி மோசடி? கோச்சடையான் வினியோக உரிமையில் போலீசில் புகார்!
சென்னை: ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படத்தை விநியோகம்
வழங்கியதில் லதா ரஜினிகாந்த் ரூ.10.2 கோடி மோசடி செய்ததாக சென்னை பெருநகர
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியார் நிறுவன நிர்வாகி அபிர்சந்த் நாகர்
புகார் மனு அளித்தார்.
இது குறித்து அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர் ரஜினி நடித்த "கோச்சடையான்' திரைப்படம் கடந்த மே மாதம் வெளியானது.
இந்தத் திரைப்படத்தின் தமிழக உரிமையை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்
முரளி மனோகர் கடந்த ஏப்ரல் 25ம் தேதி எனது நிறுவனத்துக்கு அளித்தார்
இதற்கான ஒப்பந்தத்தில் நானும், முரளி மனோகரும் கையெழுத்திட்டோம். இதற்கு
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா உத்தரவாத கையெழுத்திட்டார். இதையடுத்து, இந்த
உரிமத்துக்குரிய தொகையை நான் முரளி மனோகருக்கு அளித்தேன். இந்த ஒப்பந்ததை
மீறி தமிழகத்தில் "கோச்சடையான்' திரைப்படத்தின் உரிமையை வேறு யாருக்கும்
அளிக்கக் கூடாது.
அதைமீறி தமிழகத்தில் வேறு யாருக்கும் உரிமை அளித்தால், நஷ்ட ஈடு வழங்க
வேண்டும். குறிப்பாக விற்பனைத் தொகையில் 20 சதவீதமும், லாபத்தில் பங்கும்
அளிக்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மாணவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 20 ஆண்டு சிறை
மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கல்லூரி மாணவியை, தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு
மாவட்டம், கோபி, கெட்டிச்செவியூர், மிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்
சரவணன், 27. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் கல்லூரி
மாணவி நவீனா என்பவரை, ஒருதலையாக காதலித்தார். பெண் மறுத்தும், மொபைல்
போனில் குறுஞ்செய்தி அனுப்பி, தொந்தரவு செய்து வந்தார். மனமுடைந்த நவீனா,
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்நம்பியூர்
போலீசார், சரவணனை கைது செய்தனர். ஈரோடு மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி
திருநாவுக்கரசு, வழக்கை விசாரித்து, பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்காக, ஏழு
ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், மிரட்டியதற்காக, மூன்று
ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், தொடர்ந்து தொல்லை கொடுத்து,
மாணவியின் இறப்புக்கு காரணமாக இருந்ததற்காக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,
50 ஆயிரம் ரூபாய் அபராதமும் என, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து
தீர்ப்பளித்தார்.nakkeeran.in
இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள் - விழிப்புணர்வுடன் வரவேற்க வேண்டிய அறிவிப்பு
இந்தியா முழுவதும் திருவள்ளுவர் நாள்
கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரின்
அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில்
வேரூன்றுவதற்கான கண்ணி வெடியாக பயன்படுத்தலாம் என்று நினைத்து இதனைத்
தூண்டில் முள்ளாகப் பயன்படுத்த நினைக்கக் கூடாது என்று தேவையான
எச்சரிக்கையுடன் கூடிய அரிய அறிக்கையைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி விடுத் துள்ளார் - அறிக்கை வருமாறு:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் -
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இயக்கப்படி - நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசின்
சார்பில் திருவள்ளுவர் நாள் இந்தியா முழுவதும் மத்திய அரசால்
கொண்டாடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி
ஸ்மிருதி இரானி அவர்கள் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பி.வி. ஆச்சார்யா : ஜெயலலிதாவின் வழக்கு காலத்தில் தினமும் 10 தொலைபேசி மிரட்டல்களாவது வரும்.
பி.வி. ஆச்சார்யா. நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 80
வருஷ வாழ்க்கையில், 60 வருஷங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர்.
ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய
உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின்
சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, தொடர்
நெருக்கடிகள் காரணமாக விலகியவர். ஓர் இளம்காலைப் பொழுதில் ஆச்சார்யாவைச்
சந்தித்தேன்.
சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர் நீங்கள். இப்போது அன்றைய ‘மெட்ராஸ் நாட்கள்’ நினைவுக்கு வருவது உண்டா?
என்னுடைய சொந்த ஊர் உடுப்பி பக்கம், ஒரு அழகான கிராமம். 1953-ல்
மங்களூருவில், ‘மெட்ராஸ் மெயில்’ ரயிலேறி சென்ட்ரல் போய் இறங்கினேன். புதிய
ஊர், புதிய மனிதர்கள், பல வித்தியாசமான கலாச்சாரங்கள் எனக்கு நிறையக்
கற்றுக்கொடுத்தது அன்றைய மெட்ராஸ். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக
இருந்த அனந்த நாராயணன் எனக்கு அப்போது சட்டக் கல்வி போதித்தவர். பகல்
நேரத்தை நூலகத்தில் செலவிட்டு, மாலை நேரத்தில் கல்லூரிக்கு போவேன்.
ஐஸ்ஹவுஸ் வெங்கடேஸ்வரா விடுதியில் தங்கியிருந்தேன். அடிக்கடி கடற்கரைக்குப்
போவேன். ரொம்ப நாட்கள் யாரேனும் மெட்ராஸ் என்று உச்சரித்தால்
இவையெல்லாம்தான் ஞாபகத்து வரும்.
இப்போதெல்லாம் மெட்ராஸை நினைத்தால் ஜெய லலிதாவின் சொத்துக்குவிப்பு
வழக்குதான் நினைவுக்கு வருகிறது. அங்கிருந்து வரும் யாரும் அதைப் பற்றியே
விசாரிக்கிறார்கள். சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயிடம்
பேசிக்கொண்டிருந்தபோதுகூட, “சென்னை பக்கம் போயிடாதீங்க சார். அம்மா
ஆதரவாளர்கள் உங்கள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள்” என்று கிண்டல்
அடித்தார்.
தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்: விலைகுறைகிறது!
மும்பை,நவ.29
(டி.என்.எஸ்) தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு
தளர்த்தியுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் குறையும் வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது.<
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், அப்போதைய மத்திய
காங்கிரஸ் அரசு, தங்கம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால்,
தங்கம் இறக்குமதி குறைந்ததால், தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது.
தற்போது
புதிய அரசு ஏற்றுள்ள பா.ஜ.க அரசு, தங்கம் ஏற்றுமதியில் சில சலுகைகள்
வழங்கியதால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறையத் தொடங்கியது.
இந்த
நிலையில், தங்கம் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசும், ரிசர்வ்
வங்கியும் நேற்று நீக்கின. தங்கத்தை இறக்குமதி செய்யும்போது, 80 சதவீத
தங்கத்தை வைத்துக்கொண்டு, 20 சதவீத தங்கத்தை கண்டிப்பாக ஏற்றுமதி செய்ய
வேண்டும் என்ற விதிமுறையையும் ரத்து செய்தன. இதுதொடர்பாக அவ்வப்போது
பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக
ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
மதுரையில் தலைமை ஆசிரியை கடத்தி கொலை! பிரகாசி அம்மாள் (வயது 72).
மதுரை ரிங் ரோடு பகுதியில் கல்லம்பல் பாலம்
உள்ளது. இதன் அருகே இன்று காலை நடந்து சென்றவர்கள், அங்கு சுமார் 70 வயது
மதிக்கத்தக்க பெண் உடல் கிடப்பதை கண்டனர்.இது குறித்து சிலைமான்
போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக்
கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவரின் முகத்தில்
காயங்கள் இருப்பது தெரியவந்தது.மேலும் பெண்ணின் கழுத்தில் கயிறு
இறுக்கிய தடம் காணப்பட்டது. இதனால் அவரை யாராவது கடத்தி வந்து கொலை
செய்திருக்கலாம் என போலீசார் கருதினர்.பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் கொலையான பெண் யார? என தீவிர விசாரணை நடத்தினர்.
இதில்,
அவரது பெயர் விவரம் தெரியவந்தது. கொலை செய்யப்பட்டவர் மதுரை அண்ணாநகரைச்
சேர்ந்த மனுவல்ராஜன் என்பவரது மனைவி பிரகாசி அம்மாள் (வயது 72).
கணவன்–மனைவி இருவரும் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ம மு ஆட்சியில இதெல்லாம் ஜகஜமப்பா! பிராயசித்தமா மமுக்காக கண்ணீர் விடுரம்ல?
அரசின் அநியாயம்! முதியோர் உதவி தொகை ரத்து! கொடுப்பதே 1,000 ரூபாய்தான் அதற்கும் அதிமுக கடிதம் தேவை.இப்போ அதுவும் கோவிந்தா!
முதியோர் உதவித்தொகை பெற்ற பயனாளிகளின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால்,
லட்சக்கணக்கானோர் அலைக்கழிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், மூத்த
குடிமக்கள் பாதுகாப்பு விஷயத்தில், ஆளுங்கட்சியினரின் பரிந்துரையை
ஏற்றதால், அதிகாரிகள், இரட்டை வேடம் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வறுமைக்கோட்டில்
வசிக்கும் நலிந்த, ஏழை, எளிய மக்களுக்காக, இந்திராகாந்தி தேசிய முதியோர்,
மாற்றுத்திறனுடையோர், விதவைகள், ஆதரவற்ற மாற்றுத்திறனுடையோர், ஆதரவற்ற
விதவைகள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு, கணவரால் கைவிடப்பட்ட பெண்,
உழைக்கும் திறனற்ற ஏழைப் பெண் ஆகியோருக்கு, ஓய்வூதியத் திட்டத்தில், மாதம்
தோறும் தலா, 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதில், அதிகளவில் முறைகேடு
நடப்பதால், தகுதியான பயனாளிக்கு உரிய பயன் கிடைக்காமல் போகிறது.
ரயில் நிலையங்கள் தனியார் வசமாகிறது! பிரதமர் மோடி அறிவிப்பு!
பிரதமராக நரேந்திர மோடி கடந்த 6 மாதங்களுக்கு முன் பதவி ஏற்றது முதல் அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் நாடு முழுவதும் ரெயில் சேவையை விரிவுபடுத்தவும், ரெயில்
பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் வருமானம் கிடைக்கவும் ஏதுவாக
ரெயில்வேயில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அவர் பரிசீலித்து வருகிறார்.
இந்த நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளான நிலையில், இந்திய
ரெயில்வே வரைபடத்தில் இடம் பெறாமல் இருந்த மேகாலயா மாநிலத்தில்,
மெந்திபத்தார் என்ற இடத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்தி இடையே ரெயில்
சேவையை தொடங்க ரெயில்வே திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து முடித்தது.
கவுகாத்தியில் நேற்று நடந்த விழாவில் கவுகாத்தி-மெந்திபத்தார் பயணிகள்
ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ரெயில்வேயை
மேம்படுத்துவது தொடர்பாக அவர் பேசியபோது கூறியதாவது:-
மத்திய அரசு ரெயில்வேயை விரிவாக்கம் செய்வதோடு, நவீனமயம் ஆக்கும். அந்த
வகையில் இந்தியா முழுவதும் ரெயில் சேவை விரிவுபடுத்தப்படும்.வடநாட்டில் பலரும் டிக்கெட்எடுக்காமலே பயணம் செய்கிறார்கள் அதிலும் காவிகள் சுத்தமாக இலவசபிரயாணம்தான்,ரயில் நிலையங்களை விட மொத்தமாக ரயில் தடங்களை தனியார் மயமாக்கலாம் ஆனா அதானி அம்பானிக்கு கொடுக்க கூடாது? நிச்சயமாக அரசுக்கு லாபம் வரும்
குளித்தலை தொகுதியில் கனிமொழி போட்டி?
வரும் சட்டசபை தேர்தலில், மயிலம், விழுப்புரம், குளித்தலை ஆகிய மூன்று
தொகுதிகளில், எதாவது ஒன்றில் கனிமொழி எம்.பி., போட்டியிட வேண்டும் என,
தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், கனிமொழி ஆதரவாளர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.
தி.மு.க.,வில், உட்கட்சி தேர்தல், அடுத்த மாதம் முடிவடைகிறது. அதன்பின்,
2016ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில்,
அடுத்தாண்டு ஜனவரியில் ஆரம்பித்து, ஓராண்டில் 5,000 பொதுக்கூட்டங்களை,
தமிழகம் முழுவதும் நடத்த கருணாநிதி திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: 2016ல்
நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., முதல்வர் வேட்பாளர்
கருணாநிதிதான் என்பது முடிவாகி விட்டது. தி.மு.க.,வுக்கு வன்னியர்,
முத்தரையர், நாடார் சமுதாய ஓட்டுகள் இருக்க வேண்டும் என சொல்லி, அந்த
ஓட்டுக்களை கவருவதற்கு, திட்டம் தீட்டி கொடுத்துள்ளார் கனிமொழி. வட
மாவட்டங்களில் வன்னியர் சமுதாயத்தினர், 120 தொகுதிகளில் செல்வாக்காக
இருப்பதால், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களில், 60 தொகுதிகளில்
வன்னிய இனத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் எனவும்
சொல்லியிருக்கிறார்.