ஞாயிறு, 30 நவம்பர், 2014

மாணவியை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 20 ஆண்டு சிறை

மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு 20 ஆண்டு சிறை கல்லூரி மாணவியை, தற்கொலைக்கு தூண்டிய வாலிபருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம், கோபி, கெட்டிச்செவியூர், மிச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 27. திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் கல்லூரி மாணவி நவீனா என்பவரை, ஒருதலையாக காதலித்தார். பெண் மறுத்தும், மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பி, தொந்தரவு செய்து வந்தார். மனமுடைந்த நவீனா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்நம்பியூர் போலீசார், சரவணனை கைது செய்தனர். ஈரோடு மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி திருநாவுக்கரசு, வழக்கை விசாரித்து, பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்காக, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், மிரட்டியதற்காக, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், தொடர்ந்து தொல்லை கொடுத்து, மாணவியின் இறப்புக்கு காரணமாக இருந்ததற்காக, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் என, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.nakkeeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக