வெள்ளி, 5 டிசம்பர், 2014

பஞ்சாபில் 60 பேருக்கு பார்வை பறிபோனது!கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை .....

பஞ்சாப், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 60 பேருக்கு கண் பார்வை பறிபோனது. அரசு சாரா நிறுவனம் நடத்திய இந்த கண் சிகிச்சை முகாமில், அமிர்தசரஸ் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 பேருக்கும், குர்தாஸ்பூர் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த 44 பேருக்கும் பார்வை பறிபோனது. அவர்கள் அனைவரும் அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் பகுதியில் உள்ள இ.என்.டி மருத்துவமனைகளில் தற்போது இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய அமிர்தசரஸ் துணை ஆணையர் ரவி பகத், பார்வை பறிபோன 16 பேரும் நகரிலுள்ள இ.என்.டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அவர்களுக்கு துணை பேராசிரியர் கரம்ஜித் சிங் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவருக்கும் நிரந்தரமாக பார்வை பறிபோனது என்று அவர் கூறினார்.


இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கும், கண் சிகிச்சை முகாமில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பகத் கூறினார்.

அமிர்தசரஸ் நகரில் சிவில் சர்ஜனாக உள்ள ராஜிவ் பல்லா கூறுகையில்;

கண் பார்வை பறிபோன 60 பேரும் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் குமன் கிராமத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்டு, கடந்த பத்து தினங்களுக்கு முன் கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டனர். இதில் அமிர்தசரஸ் பகுதியிலிருந்து வந்து சிகிச்சை பெற்ற 16 பேரும் தங்கள் பார்வை பறிபோனதாக துணை ஆணையர் பகத்திடம் புகார் கூறியபோது தான் இவ்விஷயம் வெளியே தெரிந்தது. அதன் பின்னர் தான் 60 பேருக்கு பார்வை பறிபோனது கண்டறியப்பட்டதாக பல்லா கூறியது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக